Add1
logo
சச்சின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்! || என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன் || ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த சென்னைப் பெண்! || காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் விளையாடாமல் தங்கம் வென்ற வீரர்! || மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை || ‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து || என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த் || சீனாவின் லட்சிய திட்டத்தை எதிர்க்கும் ஒரே தலைவர் மோடி? || மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் || காங்கிரஸ் உடன் சேர்ந்து இடதுசாரிகள் பா.ஜ.க.வை எதிர்க்கவேண்டும்! - மன்மோகன் சிங் || மூன்றாவது நாளிலும் முடியாத முதல் இன்னிங்க்ஸ் - மழை ஆடும் ஆட்டம்! || ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம் || போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை ||
தமிழகம்
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின்
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்)
 ................................................................
டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்)
 ................................................................
விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்)
 ................................................................
முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ்
 ................................................................
பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்!
 ................................................................
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது! இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுசதியா? திருமாவளவன் கேள்வி
 ................................................................
நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் கலைஞர்!
 ................................................................
22ல் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளவரசி மருமகன்
 ................................................................
அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டோடு தெளிந்த நீரோடை போல் உள்ளது; ஜெயக்குமார் பேட்டி
 ................................................................
டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
 ................................................................
தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது; விஜயபாஸ்கர்
 ................................................................
கண்டதுகளும் வந்து மேயும் புறம்போக்கு நிலமா தமிழ்நாடு? - பண்ருட்டி வேல்முருகன்
 ................................................................
திருச்சி விமான நிலையம் விரிவாகத்திற்காக 42 வீடுகள் இடித்து அகற்ற நோட்டிஸ்!
 ................................................................
அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சிக்கு அடிகோலிடும் மத்திய அரசு! - இரா.அதியமான் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (17:12 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (17:12 IST)


பாகுபலி சர்ச்சை: சத்யராஜுக்கு எதிரான 
போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது!
அன்புமணி இராமதாஸ் 


காவிரிப் பிரச்சனையின் போது கன்னடர்களைக் கடுமையாக பேசியதற்காக நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவரும் பாகுபலி- 2 படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புகள் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“காவிரி பிரச்சினையில் கன்னடர்களை நடிகர் சத்யராஜ் தாக்கிப் பேசியதாகவும், அதைக் கண்டித்து அவர் நடித்த பாகுபலி-2  படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி, திரைப்படத்தின் வெளியீட்டு நாளான 28-ஆம் தேதி  கர்நாடகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன. இது கண்டிக்கத்தக்கது.

பாகுபலி -2 திரைப்படம் ஆந்திரத்தைச் சேர்ந்த இயக்குனரால் அம்மாநிலத்தை மையமாகக் கொண்ட  கற்பனை கலந்த கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம்  உள்ளிட்ட பலமொழி பேசும் கலைஞர்கள் நடித்துள்ளனர். இதை ஒரு பிரமாண்டமான கலைப் படைப்பாக மட்டும் தான் பார்க்க வேண்டும்; இரசிக்க வேண்டும். அதற்கு மாறாக, கன்னடர்களை கடுமையாக விமர்சித்த தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் நடித்திருக்கிறார்... அதனால் அந்தப் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்பதும், அதற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம் என மிரட்டுவதும் சகிப்பற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட, வெறுப்பு அரசியலின் அடையாளங்களாகும்.

காவிரிப் பிரச்சினைக்கான போராட்டம் கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதில் நடிகர் சத்யராஜ் கன்னடர்களை இழிவுபடுத்தியோ, தரக்குறைவாகவோ பேசவில்லை. காவிரிப்பிரச்சினையில் தமிழகத்திற்கு உள்ள நியாயங்களைத் தான் எடுத்துக் கூறினார். இதை சத்யராஜின் கருத்தாக பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாகத் தான் பார்க்க வேண்டும். காவிரிப் பிரச்சினை குறித்து ஒரு நடிகர் கூறிய கருத்துக்களை அவர் நடித்த திரைப்படங்களுடன் இணைத்துப் பார்த்து சர்ச்சைகளை எழுப்புவது முறையல்ல. 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு சத்யராஜ் நடித்த சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகத்தில் வெளியாகியுள்ளன. பாகுபலி -1 திரைப்படத்தில் கூட நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். அத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு கர்நாடகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அவ்வாறு இருக்கும் போது சத்யராஜ் காவிரிப் பிரச்சினைக்காக குரல் கொடுத்ததைக் காரணம் காட்டி அவருக்கும், அவர் நடித்த திரைப்படத்திற்கும் சிக்கல் ஏற்படுத்துவது நல்லதல்ல. இது கெட்ட நோக்கம் கொண்ட அரசியலாகும்.  தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க முயற்சிக்கும் அரசின்  திட்டத்திற்கு எதிராகவும், தில்லியில் 38 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களை  திசைத் திருப்பும் நோக்குடன் தான் கர்நாடகத்தில் இப்படி ஒரு சிக்கலை சில கட்சிகள் தூண்டிவிடுவதாக தோன்றுகிறது. இத்தகைய போராட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் பாகுபலி-2 திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக கன்னட மக்கள் குறித்து பேசிய பேச்சுக்களுக்காக நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. அதேநேரத்தில் காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இது அவரது துணிச்சலையும், கொள்கை உறுதியையும் காட்டுகிறது. இதற்காக நடிகர் சத்யராஜுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். சத்யராஜின் விளக்கத்திற்குப் பிறகும் கர்நாடகத்தில் பல இனவாத அமைப்புகள் அவரது உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 

தமிழ் திரையுலகில் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர்களும், கலைஞர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் பல நேரங்களில் சொந்த மாநில உணர்வுடன் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். சத்யராஜ் விவகாரத்தில் கன்னட அமைப்புகள் கடைபிடிக்கும் அதே அணுகுமுறையை தமிழகமும் கடைபிடித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழர்களும் அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி ஆகியவற்றை விரும்புபவர்கள் என்பதால் இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். இந்தியாவில் அனைத்து மொழி பேசுபவர்களும் சகோதரர்கள்; அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். பா.ம.க.வும், தமிழர்களும் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் நம்பிக்கைக் கொண்டிருக்கும் நிலையில் அதை சிதைக்கும் வகையில் கன்னட அமைப்புகள் செயல்படக்கூடாது.

கன்னட அமைப்புகளின் வன்முறை மற்றும் மிரட்டல்களை அம்மாநில அரசு கண்டும் காணாமலும் இருப்பது வருத்தமளிக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் காவிரிக்கு எதிரான போராட்டத்தை கண்டும் காணாமலும் விட்டதன் விளைவாக நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளும், சரக்குந்துகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன. தமிழர்கள் கடுமையான இன்னலுக்குள்ளானார்கள். மீண்டும் அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட அனுமதிக்கக்கூடாது. நடிகர் சத்யராஜ், பாகுபலி திரைப்படம் ஆகியவற்றுக்கு எதிரான கன்னட அமைப்புகளின் போராட்டங்களை கர்நாடக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Anbumani Date :4/21/2017 7:50:42 PM
இனி உன் வாய்சவடால் தமிழகத்தில் எடுபடாது.
Name : மணிவண்ணன் Date :4/21/2017 5:20:21 PM
இனி உன் வாய்சவடால் தமிழகத்தில் எடுபடாது.
Name : மணிவண்ணன் Date :4/21/2017 5:14:15 PM
2008 -ல் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை குத்திக்காட்ட அந்த மேடையை பயன்படுத்திக்கொண்டான். இன்று கன்னடர்களிடம், முக்காடு போட்டு மண்டியிட்டு உள்ளான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.