Add1
logo
இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்க வெங்கைய்ய நாயுடுவிடம் விஷால் கோரிக்கை || வனப்பகுதியில் கடும் வறட்சி, குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் பரிதவிப்பு (படம்) || என் உயிரை கொடுத்தாவது மருத்துவகல்லூரி திட்டத்தை நிறைவேற்றுவேன்: செந்தில்பாலாஜி ஆவேசம் || குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த இரு பெண்கள் மூன்று குழந்தைகளுடன் கைது || எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவோம்: நாராயணசாமி || போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு || பிளஸ்-1 மாணவியை கடத்திச் சென்ற இரு குழந்தைகளின் தந்தை கைது || சென்னை - ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பு || போராட்டத்தை கைவிட்டு, தமிழகம் திரும்ப வேண்டும்: முதல்வர் வேண்டுகோள் (படங்கள்) || நீட் தேர்வு - கனவுகளையும், வாய்ப்புகளையும் அடியோடு மறுக்கும் படுபாதகச் செயல்! சீமான் கண்டனம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || உ.பி.யில் கார் மீது ரெயில் மோதல் 5 பேர் பலி || நெடுவாசல் மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ||
முக்கிய செய்திகள்
என் உயிரை கொடுத்தாவது மருத்துவகல்லூரி திட்டத்தை நிறைவேற்றுவேன்: செந்தில்பாலாஜி ஆவேசம்
......................................
போராட்டத்தை கைவிட்டு, தமிழகம் திரும்ப வேண்டும்: முதல்வர் வேண்டுகோள் (படங்கள்)
......................................
மீண்டும் ஆஜராக தினகரனுக்கு உத்தரவு
......................................
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு (படங்கள்)
......................................
அமைச்சர் மீது குற்றம் சாட்டி குடிநீர் திட்ட ஆய்வு கூட்டத்தை புறக்கணித்த அதிமுக எம்எல்ஏ-க்கள்
......................................
பா.ச.க. என்ற பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது : பெ.மணியரசன்
......................................
டெல்லியில் போராடும் விவசாயிகள்..அனைத்து கட்சிகள் போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
......................................
“நான் இன்னும் சாகலப்பா..” -சசி அணியினரின் கண்ணீர் அஞ்சலி காமெடி!
......................................
டிடிவி தினகரனிடம் விசாரணை: கைதாவாரா என பரபரப்பு
......................................
குடிக்க தண்ணி இல்ல... சென்னையில போயி என்ன செய்றீங்க... அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் (வீடியோ)
......................................
குழுவா? எனக்கொன்றும் தெரியாதே...: செங்கோட்டையன் மழுப்பல்
......................................
சத்யராஜ் யாரிடமும் மன்னிப்பு கேட்கத்தேவையில்லை: சீமான்
......................................
தமிழகத்தில் சர்க்கஸ் ஆட்சி: குஷ்பு பேட்டி
......................................
அரசின் கோமாளித்தமான திட்டம்: மக்கள் கேலி
......................................
டி.டி.வி.தினகரனே துணை பொதுச்செயலாளராக நீடிப்பார் - கடம்பூர் ராஜூ
......................................
ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த்?
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (15:54 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (16:52 IST)




சசிகலா குடும்பம் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதைத் தொடர்ந்து இரு அணிகளுக்குமிடையே குழு அமைத்து பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சில எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்பட்டுவருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் எம்எல்ஏ கதிர்காமு, கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கத் தமிழ்செல்வன் ஆகியோர் டிடிவி தினகரன் அணியில் உள்ளனர். ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கத் தமிழ்செல்வனிடம் ஒரு மினி பேட்டியைத் தொடர்ந்தோம். 
நக்கீரன்:- கட்சியிலிருந்து டிடிவியை ஒதுக்கியிருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி ஆதரவு கொடுத்து வருகிறீர்கள்?

தங்கத் தமிழ்செல்வன்:- கட்சியிலிருந்து ஒன்றும் டிடிவியை ஒதுக்கவில்லை. கட்சியும் ஆட்சியும் உடையக்கூடாது என்பதற்காகப் பெருந்தன்மையோடு டிடிவி ஒதுங்கி இருக்கிறார். அதைப் பாராட்ட வேண்டிய அமைச்சர்கள் எல்லாம் அவரைக் கொச்சைப்படுத்திப் பேசி வருவதுதான் வருத்தமாக இருக்கிறது. நடப்பது சின்னம்மா, டிடிவி ஆசியோடு நடக்கக் கூடிய ஆட்சி! அப்படியிருக்கும்போது டிடிவியை நான் பார்ப்பதும் பேசிவருவதும் தவறில்லை. நான் மட்டுமல்ல மந்திரிகளைத்தவிர, ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களும் டிடிவி பக்கம்தான் இருக்கிறார்கள். என்னைப்போலவே அவர்களும் டிடிவியைப் பார்க்க தினசரி வீட்டுக்கு வந்து, பார்த்துவிட்டுதான் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
 
நக்கீரன்:- மந்திரிகள் மட்டும் ஏன் டிடிவியைப் புறக்கணித்து வருகிறார்கள்?

தங்கத் தமிழ்செல்வன்:- எல்லாம் பதவி சுகம்தான்! டிடிவியைப் பார்த்தால் பதவி  பறிபோய்விடுமோ என்ற பயஉணர்வோடுதான் இருக்கிறார்கள். அந்தளவுக்கு நன்றி கெட்ட மந்திரிகளாக இருக்கிறார்கள். இந்த மந்திரிகள் எல்லாம் சின்னம்மாவிடமும் டிடிவியிடமும் பயனடைந்தவர்கள். அந்த நன்றியைக்கூட மறந்துவிட்டார்கள். 

நக்கீரன்:- கட்சியிலிருந்து  ஒதுக்கியதால் டிடிவி கவலைப்படுகிறாரா?

தங்கத் தமிழ்செல்வன்:- அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. வெளியே எப்படி சிரித்துப் பேசி வருகிறாரோ அதுபோலதான் வீட்டிலேயும் எங்களிடம் சிரித்துப் பேசி வருகிறார். அவரைப் பொருத்தவரை கட்சியும் ஆட்சியும் சிதறாமல், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்பதுதான் விருப்பமேதவிர, ஓ.பி.எஸ் மாதிரி கட்சியை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருதுளிகூட கிடையாது. 

நக்கீரன்:- இரட்டை இலைக்காக ரூ.60 கோடி டிடிவி பேரம் பேசியதாக டெல்லியைச் சேர்ந்த புரோக்கர் சுகேஷ் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாரே?

தங்கத் தமிழ்செல்வன்:- டிடிவியின்மேல் குற்றச்சாட்டு சொல்லக்கூடிய நபர் பல மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரிடம்போய் 60 கோடிக்கு டிடிவி பேரம் பேசி இருக்கிறார் என்பது எந்தவிதத்தில் நியாயம்? அதெல்லாம் நம்பக்கூடியதாகவும் இல்லை. 

நக்கீரன்:- அப்படின்னா டிடிவிக்குத் திடீரென நெருக்கடி வருவதற்கு என்ன காரணம்?

தங்கத் தமிழ்செல்வன்:- எல்லாம் இந்தக் கட்சியை உடைக்க ஓ.பி.எஸ் செய்த வேலைதான். 11எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு இரட்டை இலையவே முடக்கும் அளவுக்கு மோடி சப்போர்ட் ஓ.பி.எஸ்.க்கு இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.அதுபோலதான் இப்பவும் தான் பதவிக்கு வரவேண்டும் என்றால் சின்னம்மாவையும் டிடிவியையும் கட்சியிலிருந்து ஒதுக்கவேண்டுமென மோடிக்கு ஓ.பி.எஸ் ப்ரஸர் கொடுத்திருக்கிறார். அதனுடைய நெருக்கடியில்தான் எங்க அமைச்சர்களும் ஒரு பய உணர்வோடு சின்னம்மாவுக்கும் டிடிவிக்கும் எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதன்மூலம் பிஜேபியும் ஓ.பி.எஸ் ஆதரவுடன் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது.
 
நக்கீரன்:- முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியைக் கொண்டுவந்தது சசிகலாவும் தினகரனும் தான். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு எடப்பாடி விசுவாசம் இல்லாமல்தானே செயல்பட்டு வருகிறார்?

தங்கத் தமிழ்செல்வன்:-அப்படி ஒன்றுமில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எப்பவும் சின்னம்மா, டிடிவிமேல் விசுவாசமாகதான் இருக்கிறார்.ஆனால், மந்திரிகள் பெரும்பாலானோர் பதவிக்காக முதல்வரை மிரட்டுகிறார்கள். அதனாலதான் முதல்வர், அவர்கள் போக்குபோய் அம்மா ஆசியுடன் சின்னம்மா ஆட்சியைத் தொடர்ந்து வழிநடத்த இருக்கிறார்.
 
நக்கீரன்:-சசிகலாவும் டிடிவியும் கட்சியிலிருந்து ஒதுக்கியதில் ‘எனது தர்மயுத்தத்தில் முதல் வெற்றி’ என்று ஓ.பி.எஸ் கூறிவருகிறாரே?

தங்கத் தமிழ்செல்வன்:-உண்மையிலேயேஓ.பி.எஸ் பெரிய மனுஷனே இல்லை. முதல்வர் பதவி இல்லாததால கட்சியவே உடைத்து, இரட்டை இலையவே முடக்கிவிட்டார். அப்படியிருந்தும் சின்னம்மா அறிவுரையின்படி டிடிவி தலைமையில் கட்சியும் ஆட்சியும் நல்ல முறையில்தானே நடைபெற்று வருகிறது. அப்படியிருக்கும்போது திடீரென அரசுக்கு பிஜேபி ஒரு நெருக்கடிய கொடுத்ததால டிடிவி தானே முன்வந்து கட்சியில இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். அதை இந்த பெரிய மனுஷன் வரவேற்க வேண்டுமேதவிர, தர்மயுத்தத்தில் வெற்றி என்றுகூறுவது அவர்களென்ன கொலையா பண்ணிவிட்டார்கள்?
 
நக்கீரன்:- இரண்டு அணிகளின் பேச்சுவார்த்தைமூலம் ஓ.பி.எஸ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்கப்போகிறாராமே?

தங்கத் தமிழ்செல்வன்:- ஏங்க எங்களிடம் 122எம்.எல்.ஏ இருக்குறாங்க.எங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அப்படியிருக்கும்போது எதற்காக கட்சியை உடைத்து அசிங்கப்படுத்திய ஓ.பி.எஸ்.க்கு மீண்டும் முதல்வர் பதவி எப்படித் தரமுடியும்? அதை ஒருபோதும் மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.ஏதோ எங்கள் ஆட்கள் கொடுக்கிற பதவிய வாங்கிக்கிட்டு ஓ.பி.எஸ் அணி வந்தால் ஏற்றுக்கொள்வோமேதவிர, முதல்வர் பதவியெல்லாம் தரமுடியாது.
 

சந்திப்பு:- சக்தி


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : guru Country : Canada Date :4/22/2017 5:38:36 PM
சின்னம்மாவின் நன்றி உள்ள நாலு கால்கள் உள்ளதில் ஒன்று.
Name : m.santhanakrishnan Date :4/22/2017 4:37:54 PM
பார்லிமென்ட் எலெக்ஷண்ணில், பிஜேபி சின்னத்தை கேப்டன் பிரசாரம் செயதார். இப்போது பன்னீர் பிஜேபி கால் பதிக்க,நல்ல முயற்சி செய்கிறார் . அதற்கு அவர்க்கு பலன், ஆனால் பிஜேபி வளராது. தமிழன் அழிவான், இதில் மீண்டும் வடஇந்தியர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் செலுத்துவார்கள்.
Name : Gopendran Date :4/21/2017 9:11:56 PM
ஜெயிலில் உள்ளவர் கட்சியின் தலைவர், குற்றவாளி கூண்டில் நிற்பவர் உப தலைவர். கட்சி உருப்பட்ட மாதிரிதான்.
Name : karikalan1 Country : United Kingdom Date :4/21/2017 6:36:54 PM
அடேங்கப்பா...இவர் சொல்றத பார்த்தா இவர் ஏதோ சகல அதிகாரம் படைத்த சர்வாதிகாரிமாதிரி பேசுறார்....சின்னம்மா சிறையிலே இருக்காங்க ...பிறகு எப்பிடி ஆட்சியை வழிநடத்துவா....குற்றவாளி எப்பிடி ஆட்சி நடத்த முடியும்....இவர் எங்களை இளிச்சவாயன்கள் என்று நினைக்கிறாரா ....விசாரணை வரும் குற்றவாளிகள் மீண்டும் சிறை செல்வார்கள்....உப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்....