Add1
logo
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (15:8 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (15:19 IST)


வெர்ஜினியா மாகாணத்தில் பொங்கல் விழா!

40,000-திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் வாழும் பகுதியான வெர்ஜினியா மாகாணத்தில், அறுவடைத் திருவிழாவான பொங்கல் விழாவை கொண்டாடுவதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது. 




தீபாவளி பண்டிகைக்கு இத்தகைய அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கும் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தது அங்கு வசிக்கும் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தீர்மானத்திற்கு அமெரிக்க சட்டசபை பிரதிநிதி டேவிட் புலோவா இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஒப்புதல் அளித்தார். அத்தீர்மானத்தில் வருகிற 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதியிலிருந்து, ஒவ்வொரு வருடமும் அந்த தேதியில் வெர்ஜினியா மாகாணத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படுமென கூறப்பட்டுள்ளதாக வெர்ஜினியா மாகாணத்தின் வள்ளுவன் தமிழ் அகாடமியின் சட்ட ஆலோசகர் அ.ஸ்ரீஸ்கந்தராஜ் தெரிவித்தார்.

மேலும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு அரசாங்க விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும், வேண்டுமானால் குழந்தைகள் விடுப்பு எடுத்துக் கொள்ளாலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

இதன் மூலம் வெர்ஜினியாவில் வசிக்கும் தமிழ் மக்கள் தங்களுடைய பழமையான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிற மக்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என திரு.டேவிட் புலோவா கூறினார்

இது குறித்து வள்ளுவன் தமிழ் அகாடமியின் தலைவர் பாஸ்கர் குமரேசன் கூறுகையில், டேவிட் புலோவாவை அனுகியபோது இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தார். சட்டசபையில் தாக்கல் செய்த இந்த தீர்மானத்திற்கு மூன்று மாதத்திற்கு பிறகு வெர்ஜினியா மாகாண கவர்னரால் அனுமதி வழங்கப்பட்டது என்றார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :