Add1
logo
மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ட்ரம்ப் மீதான பாலியல் புகார்கள்! || பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்! || தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த் || ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! || தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து || தோனியிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற ஹர்தீக் பாண்டியா! || எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி || விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்! || ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்! || விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்! || ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்) || குஜராத்: முந்தைய வாக்குகளை நீக்காமலேயே நடைபெற்ற வாக்குப்பதிவு! || கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (13:11 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (13:11 IST)


வட்டாள் நாகராஜின் பின்னால் இருக்கும் கெட்டாள்கள் யார் யார்? வேல்முருகன் கண்டனம்

காவிரிப் பிரச்சனையை இனப் பிரச்சனையாக மடைமாற்றும் முயற்சியா? வட்டாள் நாகராஜின் பின்னால் இருக்கும் கெட்டாள்கள் யார் யார்? இந்த வஞ்சகத்தை உடைத்தெறிய தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
காவிரியில் தமிழகத்தின் உரிமையை மறுக்க கர்நாடகா அனைத்து சூழ்ச்சிகளையும் அரங்கேற்றி வருகிறது.

இதற்கு மத்திய பாஜக மோடி அரசும் பக்கபலமாக இருக்கிறது.

இதில் இப்போது புதியதொரு சூழ்ச்சி வலையையும் பின்னும் சதிவேலை தொடங்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

அது, காவிரிப் பிரச்சனையை இனப் பிரச்சனையாக மடைமாற்றும் அதி ஆபத்தான செயல்.

இதற்கென்று களமிறக்கப்பட்டிருப்பவர் கன்னட இனவெறி அமைப்பான கன்னட சாலுவாலிகாவின் தலைவர் வட்டாள் நாகராஜ் என்பவர்.

தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் எதிராக மட்டுமே செயல்பட்டு வருபவர்தான் இந்த வட்டாள் நாகராஜ். இவரை காங்கிரஸ், பாஜக என்று கட்சி பேதமேயில்லாமல் கர்நாடக அரசுகள் பயன்படுத்திக் கொள்வதுதான் கடந்த கால வரலாறு.

இப்போது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக அமைக்கக் கோரி தமிழகமே ஒன்று திரண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதற்கென டெல்லியிலும் தமிழகத்திலும் தொடர் போராட்டமே நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் வட்டாள் நாகராஜ் களமிறக்கப்பட்டுள்ளார்.

இவர் கையிலெடுத்திருப்பது பாகுபலி-2 என்ற திரைப்படத்தை. அதில் தமிழரான சத்யராஜ் நடித்திருப்பதால் படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என்கிறார். சத்யராஜ் காவிரிப் பிரச்சனையில் கராநாடகாவுக்கு எதிராகப் பேசியவர் என்கிறார்.

இந்தப் பாகுபலி, எஸ்.எஸ்.ராஜமௌலி என்பவரது இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ரூ.650 கோடி என்ற அளவில் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்திய திரைப்படம்.

அதன் இரண்டாம் பாகமான பாகுபலி-2 தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி, மேலும் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வரும் 28ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கர்நாடகாவில் இந்தப் படத்தை வெளியிட விடமாட்டோம் என்கிறார் இந்த வட்டாள். காவிரி பிரச்சனையில் கர்நாடகாவிற்கு எதிராக பேசிய  சத்யராஜ்  மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்.

பாகுபலி  படத்தின் முதல் பாகத்திலும் சத்யராஜ் நடித்திருந்தார். அதற்கு தடை கோராத வட்டாள்தான் பாகுபலி-2  படத்திற்கு தடை கோருகிறார் என்றால் அவரது உள்நோக்கம் வெளிப்படை.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சத்யராஜ் பேசியதை வைத்து வட்டாள் இன்று போராட வந்திருப்பது ஓரங்க நாடகமல்ல. இதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

மேலும் நடிகர் சத்திய ராஜ் எதிரான போராட்டங்களும் எதிர்ப்புகளும் கர்நாடகத்தில் தொடர்ந்தால் தமிழகமும் தமிழர்களும் எதிர்வினையாற்றுவர்கள் என்பதனை எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறேன். காவிரி பிரச்சனையை கன்னடர் – தமிழர் இனப் பிரச்சனையாக மடைமாற்ற முயற்சிக்கும் கர்நாடகக் கட்சிகள் மற்றும் மத்திய மோடி அரசின் சூழ்ச்சியேயாகும்.

 இதில் ஒளிந்திருக்கும் வஞ்சகத்தை உடைத்தெறிய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :