Add1
logo
சுங்கச் சாலைப் பணி மே மாதம் நிறைவு பெறும்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்) || நீட் தேர்வு: புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் மனு (படம்) || கொல்கத்தா 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை விழ்த்தி அபார வெற்றி || ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்: பஞ்சாப் அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் தேற்றது குஜராத் லையன்ஸ் || கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால் || கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால் || தமிழகத்தில் 25ந்தேதி முழு கடை அடைப்பு; தமிழனாய் ஒன்றிணைவோம்! - வேதை முருகையன் || சரியும் தீபா செல்வாக்கு; ஓ.பி.எஸ் அணியில் தீபா அணி நிர்வாகிகள் (படம்) || கல்வி அதிகாரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பதாகை போர் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள் (படங்கள்) || ஜெயக்குமாரும், தம்பிதுரையும் குழப்புகிறார்கள்! - எடப்பாடி தரப்பு வருத்தம் || நான்கைந்து அமைச்சர்கள் தான் கட்சியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதங்கம் || மதுக்கடைகளுக்கு ஹைவேஸ் இடமா? நகராட்சி, மாநகராட்சிகளிடம் ஒப்படைப்பதா? -சாலை ஆய்வாளர்கள் கண்டன தீர்ம || ஹைட்ரோ கார்பனை ரத்து செய்! போராட்டக்காரர்கள் மண்டியிட்டு முழக்கம்! (படம்) ||
தமிழகம்
சுங்கச் சாலைப் பணி மே மாதம் நிறைவு பெறும்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்)
......................................
நீட் தேர்வு: புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் மனு (படம்)
......................................
கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால்
......................................
கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால்
......................................
தமிழகத்தில் 25ந்தேதி முழு கடை அடைப்பு; தமிழனாய் ஒன்றிணைவோம்! - வேதை முருகையன்
......................................
கல்வி அதிகாரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பதாகை போர் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள் (படங்கள்)
......................................
மதுக்கடைகளுக்கு ஹைவேஸ் இடமா? நகராட்சி, மாநகராட்சிகளிடம் ஒப்படைப்பதா? -சாலை ஆய்வாளர்கள் கண்டன தீர்ம
......................................
ஹைட்ரோ கார்பனை ரத்து செய்! போராட்டக்காரர்கள் மண்டியிட்டு முழக்கம்! (படம்)
......................................
முழுஅடைப்பில் பிரயோஜனம் இல்லை! - ராமதாஸ்
......................................
அம்பாசமுத்திரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது (படம்)
......................................
அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை: இசை நிகழ்ச்சியுடன் உண்ணாவிரதம் இருந்த கிராம மக்கள் (படம்)
......................................
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இரத்ததானமுகாம் (படம்)
......................................
கடலூர் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு, முற்றுகை(படம்
......................................
சாலைகளை வகைமாற்றி மதுக்கடைகளை திறப்பதைக் கண்டித்து பாமக போராட்டம்! - அன்புமணி ராமதாஸ்
......................................
உலகப் புத்தக நாள் சிந்தனை (ஏப்.23) புத்தகம் இல்லா வீடு புழுக்கம் நிறைந்த இருட்டறை! - கீ.வீரமணி
......................................
ஸ்டாலினுக்கு தஞ்சை மாவட்ட திமுகவினர் அணைக்கரையில் வரவேற்பு (படங்கள்)
......................................
சிவாஜி கணேஷனுக்கு பாராட்டு விழா: பிரதமர் தலைமை ஏற்க கோரிக்கை
......................................
ராஜ்பவனை பார்வையிடும் நடைமுறைகளை மாற்றுக!: - கொ.நா.ம.தே.க ஈஸ்வரன்
......................................
பசுமை மாற்று முயற்சி; இளைஞர்கள், மாணவர்கள் ஆர்வம்
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு போராட்டம்; வணிகர் சங்க பேரவை ஆதரவு
......................................
விருதுநகர் - மழை வேண்டி சிறப்பு தொழுகை! (படங்கள்)
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு: சேப்பாக்கத்தில் மாணவர்கள் உண்ணாவிரதம் (படங்கள்)
......................................
புதுக்குளத்தை சுத்தம் செய்த, மக்கள் பாதை! (படம்.)
......................................
நள்ளிரவில் மது விற்பனை - இரு தரப்பு மோதல்: வாலிபருக்கு அரிவாள் வெட்டு (படங்கள்)
......................................
தமிழகத்தில் நிலையான ஆட்சி வேண்டும்: வெங்கையா நாயுடு
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (12:36 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (12:50 IST)


குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் அதிமுக அரசு; மு.க.ஸ்டாலின் கண்டனம்

மருத்துவக் கல்வியில் சேருவதற்கான “நீட்” நுழைவுத் தேர்வு சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுக அரசு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மருத்துவக் கல்வியில் சேருவதற்கான “நீட்” நுழைவுத் தேர்வு சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுக அரசு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. கடிதம் எழுதிவிட்டாலே தன் கடமை முடிந்து விட்டது என்று கருதி, மாண்புமிகு முதலமைச்சரும் “நீ்ட்” தேர்வால் தமிழக மாணவர்கள் படும் இன்னல்கள் பற்றி பாராமுகமாக இருக்கிறார். அதிமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்க அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு இதுவரை அதிமுக அரசால் சட்ட அந்தஸ்தை பெற முடியவில்லை.
 
தமிழக சட்டமன்ற மசோதாவிற்கு உரிய அழுத்தம் கொடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவில்லை என்பதால் மருத்துவ மேற்படிப்பில் சேர வேண்டிய அரசு மருத்துவர்கள் இன்றைக்கு வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளில் அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பறிபோயிருக்கிறது. ஆரம்பம் முதலாகவே “நீட்” தேர்வு விஷயத்தில் இந்த அரசு அலட்சிய மனப்பான்மையுடனேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது மருத்துவ மேற்படிப்பு தொடர்பான வழக்கிலும் உயர்நீதிமன்றத்தில் அதிமுக அரசு அக்கறையில்லாமல் செயல்பட்டு, தலைவர் கலைஞர் அவர்கள் அரசு மருத்துவர்களுக்கு அளித்த இடஒதுக்கீட்டு உரிமையை இழந்து விட்டு நிற்கிறது.
 
கடந்த 17.4.2017 அன்று சென்னை உயர் நீதிமன்றம், “இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின்படி தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பிற்கு அனுமதிக்க வேண்டும்” என்று அளித்துள்ள தீர்ப்பால் இன்றைக்கு பல்வேறு பிரிவுகளில் மருத்துவ மேற்படிப்பிற்கான 1225 இடங்களில் சேருவதற்கான வாய்ப்பு கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் உருவாகி விட்டது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அதிமுக அரசு குறித்த காலத்தில் பெற்றிருந்தால் இப்படியொரு அவல நிலைமை ஏற்பட்டிருக்காது.
 
இதனால் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு நடைமுறையில் வழங்கப்பட்டு வரும் 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கும் பேராபத்து உருவாகியிருக்கிறது. இது கிராமப்புறம் மற்றும் மலைவாழ் மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக அயராது பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் கிராமப்புற மருத்துவமனைகளை அரசு மருத்துவர்கள் விரும்பாத ஒரு நிலையை ஏற்படுத்தி விடும். அனைவருக்கும் தரமான சிகிச்சையை உறுதி செய்ய வேண்டிய அரசே இப்படி அலட்சிய மன்பான்மையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் செயல்பட்டு, அரசு மருத்துவர்களின் நலனைக் காக்கத் தவறி, அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் முழுப்பயனும் சென்றடையாத வண்ணம் செய்து விட்டது.
 
ஆகவே அதிமுக அரசு உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களை சேர்க்கவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகள் இதில் மிக முக்கியம் என்பதால் அரசு மருத்துவர்களின் போராட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி, அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அதிமுக அரசு அதி வேகமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :