Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
தமிழகம்
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான்
 ................................................................
வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்!
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
 ................................................................
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!
 ................................................................
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
 ................................................................
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
 ................................................................
கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை
 ................................................................
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!
 ................................................................
கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு
 ................................................................
நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார்
 ................................................................
துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
 ................................................................
கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு
 ................................................................
தீபாவளியை முன்னிட்டு 5 நாட்களுக்கு மீன்பிடி நிறுத்தம்
 ................................................................
டெங்கு பாதிப்பு குறித்த மத்திய குழு ஆய்வு நிறைவு: இன்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னையில் இன்று பரவலாக பெய்த மழை(படங்கள்)
 ................................................................
மதுரையில் அழகிரியை மையப்படுத்தி தொண்டர்கள் ஒட்டிய போஸ்ட்டர்
 ................................................................
சோளார் பவர் ப்ளாண்ட் பற்றி புத்தகம் வெளியீடு(படங்கள்)
 ................................................................
வழக்கில் நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் - தம்பிதுரை நம்பிக்கை
 ................................................................
சீர்காழியில் தீ விபத்து - 8 வீடுகள் எரிந்து சேதம்
 ................................................................
நக்கல்பட்டியில் கிரானைட் லாரி கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பலி
 ................................................................
கறுப்புக்கொடி ஏற்றி கண்ணீர் தீபாவளியாக கடை பிடிக்கப் போவதாக விவசாயிகள் தீர்மானம்
 ................................................................
டெங்குவவை தொடர்ந்து பன்றி காய்ச்சல் -ஒருவர் பலி
 ................................................................
கிருஷ்ணகிரியில் தொடரும் டெங்கு மரணங்கள்
 ................................................................
புதுக்கோட்டைக்கு வந்தும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு குறித்து பேசாத முதல்வர் ?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (12:12 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (12:12 IST)பாபர் மசூதி இடிப்பு வழக்கு: குற்றப்பதிவு செய்யப்பட்ட உமாபாரதி, கல்யாண்சிங் பதவி விலக வேண்டாமா? கி.வீரமணி கேள்வி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பதிவு செய்யப்பட்ட உமாபாரதி மத்திய அமைச்சராகத் தொடரலாமா? கல்யாண்சிங் ஆளுநராக நீடிக்கலாமா? அவர்களைப் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க.வினர் ஏன் கூறவில்லை? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

1992 இல் பாபர் மசூதி இடித்த வழக்கில் குற்றவாளிகளான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யாண்சிங், செல்வி உமாபாரதி, வினய் கட்டியார், வி.எச்.டால்மியா, சாத்வி ரிதம்பரா முதலிய பலரும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அக்கிரிமினல் வழக்கு லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு - இரண்டு ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு 18.4.2017 அன்று தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கெனவே ஒரு டெக்னிக்கல் குறைபாடு - என்ற சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. அந்தக் குறைபாட்டினைத் (2001 பிப்ரவரி 12) திருத்தி கூட்டு விசாரணையை நடத்தியிருக்கவேண்டும் அப்போதே அதைச் செய்யவில்லை.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பெரும் பதவிகளில்...

25 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், வெள்ளி விழா காணும் இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதான குற்றவாளிகளான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் மத்திய அமைச்சர்களாகவே இருந்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் பதவிகளில் அத்வானி இருந்துள்ளார். முரளிமனோகர் ஜோஷி மத்திய மனித வளத்துறை  அமைச்சராகவும், உமாபாரதி மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும்கூட இருந்துவிட்ட கூத்தும் நடந்திருக்கிறது. இப்பொழுதும் மத்திய அமைச்சராக இருக்கவும் செய்கிறார். இதில் மற்ற முக்கிய குற்றவாளிகளான விசுவ இந்துபரிஷத்  தலைவர் அசோக் சிங்கால், மகந்த் அவித்தியநாத், ராமச்சந்திர பரமான்ஸ், கிரிராஜ் கிஷோர் போன்றவர்கள் இறந்துவிட்ட காரணத்தினால், அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாகிறார்கள்!

பா.ஜ.க. பதவி விலகச் சொல்லாதது ஏன்?

மற்ற கட்சிகளை ஊழல்வாதிகள் என்று கூறி, பதவி விலகிடச் சொல்லும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்., ஆளுநராக இருக்கும் கல்யாண்சிங், மத்திய நீர் வளத்துறை அமைச்சராக இருக்கும் உமாபாரதி (இந்த அம்மையார், ஆம்! நான்தான் இடித்தேன் என்று இப்போதும் உரக்கக் கூவுகிறார்!) இவர்களை பதவி விலகச் சொல்லவேண்டாமா?

இந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கினால் நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரங்களில் இறந்தோர் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்கு என்பதை எவரே மறுத்திட முடியும்?

வெள்ளி விழா - பொன் விழா வழக்குகள்!

நம் நாட்டு சட்ட வழக்குகள் இப்படி வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா, முத்து விழா - நூற்றாண்டு விழா கொண்டாடும் அவல நிலைக்கு - நீதித்துறை ஒரு முற்றுப்புள்ளி வைக்க இனிமேலாவது முன்வரவேண்டாமா? மற்ற பல நாடுகளில் வழக்குகளையும், மேல்முறையீடுகளையும் ஒரு காலக்கெடுவுக்குள் முடிக்கும்படி சட்டம், விதிமுறைகள் உள்ளனவே. அவைகளைப் பார்த்தாவது நாம் இந்த நத்தை வேக நீதி பரிபாலனத்தை மாற்றவேண்டாமா? தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று வாயால் சொன்னால் மட்டும் போதுமா?

இந்த பாபர் மசூதி வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ஓய்வு பெற்ற ஜஸ்டீஸ் லிபரான் தலைமையில் ஒரு கமிஷன் போடப்பட்டு, அதற்காக ரூ.30 கோடிக்குமேல் மக்கள் வரிப் பணம் தண்டச் செலவானதே தவிர, உருப்படியான பலன் உண்டா? (அந்தப் பட்டியலில் வாஜ்பேயி பெயரும்கூட உண்டு).
இப்போது இந்தக் கமிஷன் போட்டதே பலருக்கு மறந்துவிட்டதே - எவ்வளவு கொடுமை!

முதுமையைச் சுட்டிக்காட்டும் பரிதாபம்!

உச்சநீதிமன்றத்தில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் அவர்கள் தங்களது முதுமை காரணமாக 4 மாடிகள் ஏறி இறங்க முடியாது என்று அய்யோ பரிதாபம்  ஆர்க்கியூமெண்டையும் செய்து பார்த்துள்ளனர், எடுபடவில்லை! என்றாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டீஸ் கோஷ், ஜஸ்டீஸ் நாரிமன் - வழக்கினை இரண்டு ஆண்டுகளுக்குள் தொடர்ச்சியாக நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

மற்ற கட்சிகளுக்கு உபதேசம் செய்யும் பிரதமர், பா.ஜ.க. தலைவர்கள் கல்யாண்சிங்கையும், உமாபாரதியையும் தத்தம் பதவிகளை இராஜினாமா செய்யச் சொல்லி ஆணை பிறப்பித்து பொது ஒழுக்கச் சிதைவுக்கு வழி ஏற்படாமல் தடுக்கவேண்டாமா? 

நீதி மறுக்கப்படலாமா?

மனுதர்ம ஆட்சிதான் என்றால் இரட்டை அணுகுமுறை, இரட்டை அளவுகோல் எல்லாம் இருந்துதானே தீரும்! நாடு கேட்கும் ஜனநாயகக் கேள்விகள் இவை.

பாபர் மசூதி இடிப்பு வீடியோ சாட்சியங்களோடு கடப்பாறை காட்சிகள் படங்களும் உள்ளனவே! நீதி மறுக்கப்படலாமா? குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப விடலாமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : pathman Country : Canada Date :4/21/2017 1:23:50 PM
பரதேசி வீரமணி பாகிஸ்தானில் எத்தனை கோயில்களை,தேவாலயங்களை இடித்துவிட்டார்கள்.அங்கு போய் உன் மதசார்பின்மை தத்துவத்தை சொல்லு பாற்கலாம்.குறைந்தது மாலை தீவுக்கு ஒரு முருகன் படத்துடனோ,ஜேசுவின் படத்துடனோ ஒருவரை போக அனுமதி வாங்கி கொடு பாற்கலாம்.
Name : S.Govindarajan Country : Australia Date :4/21/2017 1:14:06 PM
இந்து மதத்தை இழிவு படுத்தி, கடவுள் சிலைகளை உடைத்து .சாமி படங்களுக்கு செருப்பு மாலை போட்ட கயவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவது ? சிறுபான்மைக்கு வால் பிடிக்கும் இந்துமத விரோதி சாத்தான் வேதம் ஓதுகிறது