Add1
logo
நெடுவாசலில் 19-வது நாளாக போராட்டம்: - உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள் (படம்) || தொழிலாளர்களின் இல்லங்களில் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்!: மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி || கொடநாடு கொலை-கொள்ளை விவகாரங்களை உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின் || இருசக்கர வாகனம் பேருந்தில் மோதி விபத்து: மூவர் பலி! || மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துச் செய்தி || தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் தெரிவித்த விவகாரம்; தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு! (படம்) || வெங்கடேஷுக்கு அழைப்பு விடுத்து போஸ்டர்: விவேக்கை ஆதரிக்கும் 30 எம்.எல்.ஏ.க்கள்: EPS-OPS அதிர்ச்சி || குடிதண்ணீரைத் திருடிய தனியார் குடிநீர் நிறுவனம்; வாகனங்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! (படம்) || மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன் || எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி || எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை || 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தலைமறைவு || முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு ||
தமிழகம்
நெடுவாசலில் 19-வது நாளாக போராட்டம்: - உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள் (படம்)
......................................
தொழிலாளர்களின் இல்லங்களில் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்!: மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி
......................................
கொடநாடு கொலை-கொள்ளை விவகாரங்களை உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின்
......................................
இருசக்கர வாகனம் பேருந்தில் மோதி விபத்து: மூவர் பலி!
......................................
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துச் செய்தி
......................................
தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் தெரிவித்த விவகாரம்; தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு! (படம்)
......................................
குடிதண்ணீரைத் திருடிய தனியார் குடிநீர் நிறுவனம்; வாகனங்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! (படம்)
......................................
மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன்
......................................
எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி
......................................
எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை
......................................
கோடநாடு காவலாளி கொலை வழக்கு: கைதாக 4 பேருக்கு 15 நாள் காவல்
......................................
முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு
......................................
உழைக்கும் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள்: - கு.செல்வப்பெருந்தகை வாழ்த்துச் செய்தி
......................................
கொடநாடு கொலை-கொள்ளை: ஏ.டி.ஜி.பி. அதிகாரி விசாரிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
......................................
கிராமசபை கூட்டங்களில் மதுக்கடைகளை மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! - அன்புமணி இராமதாஸ்
......................................
இந்தி திணிப்புக்கு எதிராக மே 9ல் ஆர்ப்பாட்டம்
......................................
மதுக்கடையை அகற்றகோரி பாமக போராட்டம்
......................................
உழைப்பாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்: எஸ்.டி.பி.ஐ தெகலான் பாகவி
......................................
திருமண கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்
......................................
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
......................................
ராமமோகனராவ் கார் ஓட்டுனர் விபத்தில் பலி
......................................
அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை: நிர்மலா சீதாராமன்
......................................
மு.க.ஸ்டாலின் பின்னணியில் தான் விவசாயிகள் போராட்டத்தை அரங்கேற்றினார்களா? தமிழிசை சவுந்தரராஜன்
......................................
வைகோ மே தின வாழ்த்து
......................................
பிரிவுக்கும், சேர்வுக்கும் பாஜக காரணம் இல்லை: ராதாகிருஷ்ணன்
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (11:31 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (11:31 IST)


தந்தை, சகோதரி மகன்  கத்தியால் குத்திக் கொலை: பிசியோதெரபிஸ்ட் தாயாருடன் கைது 

புதுச்சேரி கோரிமேடு காமராஜர் நகர் விரிவாக்கம் அன்னை தெரசா நகரில் உள்ள 8-ம் எண் வீட்டில் வசித்து வந்தவர் செல்வராஜ் (வயது 75). முன்னாள் ராணுவ வீரரான இவர், ஜிப்மரில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி வசந்தா (65) அவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு சிவா (38) என்ற மகனும், ஷகிலா (35) என்ற மகளும் உள்ளனர்.சிவா பிசியோதெரபி முடித்துள்ளார். இவர் நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருவாராம். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஷகிலா ஜிப்மரில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்து கோரிமேடு ஜிப்மர் குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் பரத்(14) தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் செல்வராஜின் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் கடும் துர்நாற்றம் வீசுவதாக அங்கு இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கோரிமேடு போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அவர்களும் துர்நாற்றம் வீசுவதை அறிந்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் தரைகள் தண்ணீரால் கழுவப்பட்டு இருந்தது. துர்நாற்றம் வராமல் இருக்க கிருமி நாசினி பவுடர் தெளிக்கப்பட்டு இருந்ததுடன் ஊதுபத்தி கொளுத்தி வைத்து இருந்ததும் தெரியவந்தது. தரையில் ஆங்காங்கே ரத்த கறைகளும் காணப்பட்டன. ஆனால் வீட்டுக்குள் பிணமோ வேறு எதுவுமோ இல்லை. இப்படி இருக்கும் போது அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை வைத்து ஏதோ அசம்பாவிதம் நடந்து இருக்க வேண்டும் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து கோரிமேடு போலீசார் ஷகிலாவிடம் விசாரித்தனர். அவர், அளித்த புகாரின் பேரில் வீட்டில் இருந்த செல்வராஜ், வசந்தா, சிவா, பரத் ஆகியோர் மாயமாகி இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது 4 நாட்களாகவே இந்த வீடு பூட்டிக் கிடந்தது. சிவா மட்டும் அடிக்கடி வந்து சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவரை பிடித்தால் மற்றவர்களை பற்றிய விவரம் தெரிந்து விடும் என்று கருதி போலீசார் சிவாவை தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரித்ததில் சிவாவும், அவருடைய தாயார் வசந்தாவும் அங்கிருந்து மீண்டும் புதுவைக்கு சென்று விட்டது தெரியவந்தது.

புதுவை திரும்பிய போலீசார் அரியாங்குப்பம் பகுதியில் வைத்து சிவாவையும், வசந்தாவையும் பிடித்து விசாரித்தனர். சிவாவிடம் நடத்திய தீவிர விசாரணையில் தனது தந்தையையும், சகோதரி ஷகிலாவின் மகன் பரத்தையும் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவரையும், சிவாவுக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் வசந்தாவையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

- சுந்தரபாண்டியன்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :