Add1
logo
சுங்கச் சாலைப் பணி மே மாதம் நிறைவு பெறும்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்) || நீட் தேர்வு: புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் மனு (படம்) || கொல்கத்தா 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை விழ்த்தி அபார வெற்றி || ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்: பஞ்சாப் அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் தேற்றது குஜராத் லையன்ஸ் || கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால் || கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால் || தமிழகத்தில் 25ந்தேதி முழு கடை அடைப்பு; தமிழனாய் ஒன்றிணைவோம்! - வேதை முருகையன் || சரியும் தீபா செல்வாக்கு; ஓ.பி.எஸ் அணியில் தீபா அணி நிர்வாகிகள் (படம்) || கல்வி அதிகாரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பதாகை போர் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள் (படங்கள்) || ஜெயக்குமாரும், தம்பிதுரையும் குழப்புகிறார்கள்! - எடப்பாடி தரப்பு வருத்தம் || நான்கைந்து அமைச்சர்கள் தான் கட்சியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதங்கம் || மதுக்கடைகளுக்கு ஹைவேஸ் இடமா? நகராட்சி, மாநகராட்சிகளிடம் ஒப்படைப்பதா? -சாலை ஆய்வாளர்கள் கண்டன தீர்ம || ஹைட்ரோ கார்பனை ரத்து செய்! போராட்டக்காரர்கள் மண்டியிட்டு முழக்கம்! (படம்) ||
முக்கிய செய்திகள்
சரியும் தீபா செல்வாக்கு; ஓ.பி.எஸ் அணியில் தீபா அணி நிர்வாகிகள் (படம்)
......................................
ஜெயக்குமாரும், தம்பிதுரையும் குழப்புகிறார்கள்! - எடப்பாடி தரப்பு வருத்தம்
......................................
நான்கைந்து அமைச்சர்கள் தான் கட்சியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதங்கம்
......................................
விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்: அய்யாக்கண்ணு அறிவிப்பு
......................................
கோரிக்கைகளை நிறைவேற்றினால் போராட்டத்தைக் கைவிடுவோம்: அய்யாக்கண்ணு
......................................
நாளை பேச்சுவார்த்தைக்கு வரலாம்! : - ஓ.பி.எஸ் அணியினருக்கு ஜெயக்குமார் அழைப்பு
......................................
விவசாயிகளின் கோரிக்கைகளை கருணையோடு பரிசீலனை செய்ய வேண்டும்!: டெல்லியில் முதல்வர்
......................................
இரண்டாவது நாளாக டிடிவி விசாரணை! மூன்றாவது நாளாக தொடரும் வாய்ப்பு?
......................................
என் உயிரை கொடுத்தாவது மருத்துவகல்லூரி திட்டத்தை நிறைவேற்றுவேன்: செந்தில்பாலாஜி ஆவேசம்
......................................
போராட்டத்தை கைவிட்டு, தமிழகம் திரும்ப வேண்டும்: முதல்வர் வேண்டுகோள் (படங்கள்)
......................................
மீண்டும் ஆஜராக தினகரனுக்கு உத்தரவு
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (9:2 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (9:5 IST)


கஜானாவை காலி செய்ய தலைமைச் செயலகத்தில்  பேச்சுவார்த்தை நடத்துவது வெட்கக் கேடானது: டி.கே.எஸ் இளங்கோவன்


கஜானாவை காலி செய்ய தலைமைச் செயலகத்தில்  பேச்சுவார்த்தை நடத்துவது வெட்கக் கேடானது என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

அதிமுக ஆட்சி வந்ததில் இருந்து தலைமைச் செயலகம் அதிமுகவின் தலைமைக்கழகமாக மாற்றப்பட்டு வருகிறது. அமைச்சர்களும், அதிகாரிகளும், முதலமைச்சரும் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய இடத்தை அதிமுகவிற்குள் நடக்கும் அரசியல் கூத்துக்களுக்கு பஞ்சாயத்து செய்யவும், அது பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் பயன்படுத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழகமே இன்றைக்கு மிகப்பெரிய போராட்டக் களமாக மாறியிருக்கிறது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மதுக்கடைகளை மூடக் கோரி தாய்மார்கள் போராடுகிறார்கள். வறட்சியின் கொடுமையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை. அமைச்சர்கள் கூடிப் பேசவில்லை. ஆனால் ஒன்றாக இணைந்து ஊழல் செய்து விட்டு இப்போது பிரிந்து நிற்கும் இரு ஊழல் அணிகளும் மீண்டும் ஒருங்கிணைந்து அரசு கஜானாவை காலி செய்வதற்கு தலைமைச் செயலகத்தில் சந்திப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதும் வெட்கக் கேடானது.

ஏற்கனவே அதிமுக எம்.பி.க்களின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற போது அதை தலைவர் கலைஞர் அவர்களே கடுமையாக கண்டனம் தெரிவித்தார். ஆனாலும் அதிமுகவினர் அரசியல் நாகரிகங்களையும், அரசியல் சட்ட மாண்புகளையும் குழி தோண்டி புதைத்து விட்டு இது போன்ற கட்சிக் கூட்டங்களை தலைமைச் செயலகத்தில் நடத்துவதை இனிமேல் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது மட்டுமின்றி, மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தம்பித்துரை அவர்கள் கோட்டைக்கு சென்று முதலமைச்சரை சந்தித்து அதிமுகவிற்குள் நடக்கும் அடிதடிக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால் அதிமுக கட்சி அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆலோசனை நடத்தலாம். இல்லாவிட்டால் கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் கூட அமர்ந்து ஆலோசனை நடத்தலாம். தயவு செய்து தமிழகத்தின் நிர்வாக சின்னமாக இருக்கும் தலைமைச் செயலகத்தை அரசியல் கட்சிக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளை தீர்ப்பதற்கான இடமாக மாற்றாதீர்கள் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : pathman Country : Canada Date :4/22/2017 10:39:14 AM
ராஜிவ் காந்தியின் கொலையில் தேவை இல்லாமல் கலைஞரின் பெயரை களங்கப்படுத்தி,இப்போது கலைஞரின் காலே தஞ்சம் என்று கிடக்கும் காங்கிரஸ்கரங்களின் நிலையே வெட்கக்கேடானது.