Add1
logo
மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ட்ரம்ப் மீதான பாலியல் புகார்கள்! || பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்! || தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த் || ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! || தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து || தோனியிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற ஹர்தீக் பாண்டியா! || எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி || விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்! || ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்! || விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்! || ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்) || குஜராத்: முந்தைய வாக்குகளை நீக்காமலேயே நடைபெற்ற வாக்குப்பதிவு! || கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல் ||
தமிழகம்
பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
 ................................................................
ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
 ................................................................
தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து
 ................................................................
விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்!
 ................................................................
ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்!
 ................................................................
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
 ................................................................
பெரியார் பல்கலை. துணைவேந்தர் தேர்வில் முறைகேடுகள்: தேர்வுக் குழுவுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
மருத்துவ மாணவியுடன் தூக்கில் தொங்கிய காதலன் சாவு: மாணவிக்கு தீவிர சிகிச்சை
 ................................................................
திருச்சியில் திறந்து கிடக்கும் 137 கழிவறைகள் – தூய்மை நகரம்?
 ................................................................
காணாமல் போன நாகை மீனவர்கள் குறித்து நடவடிக்கை! குமரி கலெக்டர் அலுவலகத்தில் தமிமுன் அன்சாரி மனு!
 ................................................................
ராகுல் காந்திக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்து!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நீதிபதி வீட்டில் வேலை பார்த்த பெண் உதவியாளருக்கு தோசை கரண்டியால் சூடு!
 ................................................................
ஆணவக் கொலைக்கு முதல் முறையாக தூக்கு தண்டனை தீர்ப்பு! ஹரிபரந்தாமன் வியப்பு
 ................................................................
டி.டி.வி. தினகரனுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு!
 ................................................................
மெரினா! உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
எம்.ஜி.ஆர். காதல் டூயட்! ஆர்.கே.நகரில் அசத்தல்! (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகரில் பூத் சிலிப் வினியோகம்!
 ................................................................
தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
 ................................................................
மீனவர்கள் வாழ்வில் தொடரும் துயரங்கள்; 23 மீனவர்கள் 5 படகுகள் சிறைபிடிப்பு
 ................................................................
மணல் திருட்டை காட்டிக் கொடுத்ததால் இரட்டை கொலை; கொலையாளிகள் 4 பேருக்கு 2 ஆயுள்
 ................................................................
காட்டுமிராண்டி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி! தீர்ப்பளித்த நீதிபதியை பாராட்டுகிறோம்! திருமா
 ................................................................
ஆர்.கே.நகர் என்றதும் தலையில் அடித்துக்கொண்ட அழுக்கு சாமியார் சிதம்பரம்!
 ................................................................
ராகுல்காந்தி தலைவர் பொறுப்பேற்பதைப் பார்த்து பாஜக எந்த அளவுக்கு அச்சப்படுகிறது? திருமாவளவன்
 ................................................................
கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் கைது-கலால் உதவி ஆணையர் அதிரடி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (20:40 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (20:40 IST)

தலைமை ஆசிரியரின் பணிநிறைவைக் 
கொண்டாடிய பொதுமக்கள்!
நெகிழ்ச்சியான தருணங்கள் (படங்கள்)
மறமடக்கி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை முதலிடம் பெற வைத்து டாக்டர், பல் டாக்டர், பொறியியலாளர், வேளாண்மை என பல துறைகளுக்கும் படிக்க உதவிய தலைமை ஆசிரியரின் பணி நிறைவை சுற்றுவட்டார கிராமங்களே ஊர்வலமாக சென்று பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கி வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் கொடுத்த பரிசுகளை அந்தப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருப்பி கொடுத்தது மேலும் நெகிழச் செய்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளி:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு பள்ளித் தலைமை ஆசிரியராக திருச்சியைச் சேர்ந்த ரமேஷ் இடமாறுதலில் வந்தார். அவர் வருவதற்கு முன்பு வரை அந்தப் பள்ளியில் மறமடக்கி, திருநாளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 580 மாணவ, மாணவிகள் படித்துள்ளனர். அதன்பிறகு பள்ளி மாணவர்களின் படிப்பு திறன் உயர  ஊர் மக்களின் ஒத்துழைப்போடு  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை, மாலையில் கூடுதல் நேர வகுப்பு, மாலை நேரங்களில் மின் தடையால் மாணவர்களின் படிப்பு தடைப்படுவதைத் தடுக்க ஜெனரேட்டர் வசதி, அனைத்து வகுப்புகளுக்கும் ரூ.1,69 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், பல்வேறு பொதுநல அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் கூடுதல் கழிப்பறை,  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். அதன் பிறகு இந்தப் பள்ளி மாணவ, மாணவிகள் 10, மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பல முறை 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்ச்சி விகிதத்தை பார்த்த பெற்றோர்கள், தனியார் பள்ளிகளில் படித்துவந்த தங்களின் பிள்ளைகளையும்  மறமடக்கி அரசு பள்ளியில் சேர்த்தனர். இதனால்  பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. 

பணி ஓய்வு:
 
இப்பள்ளியின் வளர்ச்சியிலும் மாணவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ரமேஷுக்கு நேற்று பணிநிறைவு பெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மறமடக்கி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்கள் ஒன்றுகூடி மேள தாளங்கள், வானவேடிக்கையுடன் பூ, காய், கனிகளுடன் ஊர்வலமாக பள்ளியில் நடைபெற்ற விழாவிற்குச் சென்றனர்.

ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுற்றவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெற்றோர்களும் பள்ளி மாணவ, மாணவிகளும், முன்னாள் மாணவர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர். பல மாணவர்கள் தங்கள் வளர்ச்சிக்குத் துணையாக இருந்த தலைமை ஆசிரியர் என்று கண் கலங்கி நெகிழ்ந்தனர். கிராமத்தினர், பெற்றோர்கள் சார்பில் தங்க மோதிரம், சங்கிலி, கைகடிகாரம் போன்ற ஏராளமான பரிசுகளும், மாலை மரியாதைகளும் அவருக்கு செய்யப்பட்டது. 

ஊர்மக்கள் ஒத்துழைப்பு:

பணி ஓய்வு பெற்று செல்லும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் கூறியபோது.. “கிராம மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒத்துழைப்பு கொடுத்ததனால்தான் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தபோதிலும் தொடர்ந்து முழு தேர்ச்சி பெற முடிந்தது. மேலும், இப்பள்ளியில் படித்த மாணவர்கள்  எம்பிபிஎஸ், பல் மருத்துவம், வேளாண், பொறியியல் போன்ற துறைகளில் படிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஊர் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அரசுப் பள்ளிகள் வளர்ச்சியடைய முடியும்” என்றார்.

ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை வாழ்த்திப் பேசும் போது.. “அரசிடம் மட்டுமின்றி  கிராம மக்கள், பல்வேறு சேவை அமைப்புகள் மூலம் பள்ளிக்குத் தேவையான வசதிகளைக் கேட்டு பெற்று செய்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் சுற்றுவட்டார மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார் தலைமையாசிரியர் ரமேஷ். பள்ளிக்கு வராத மாணவர்களின் வீட்டிற்கே சென்று அழைத்து வருவார். அதனால் ஊர்கூடி பாராட்டு விழா எடுத்துள்ளோம்” என்றார்.

பரிசுகளை மாணவர்களின் நலனுக்கு கொடுத்தார்:
நிறைவாக கிராமத்தினர் மற்றும் பெற்றோர்கள் கொடுத்த தங்க மோதிரம், மற்றும் பரிசுகளை அப்படியே பள்ளி நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுத்த தலைமை ஆசிரியர் ரமேஷ், இந்த நகைகள் மற்றும் பொருட்களை வைத்து மாணவர்களின் நலனுக்காக அறக்கட்டளை தொடங்கி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். மேலும் இது பொன்ற கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இன்னும் என்னால் முடிந்த பொருளாதார உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குகிறேன் என்று கூறி பரிசு பொருட்களை திருப்பிக் கொடுத்த போது திரண்டிருந்த பெற்றோர்கள், மாணவர்கள் நெகிழ்ந்துவிட்டனர்.
அரசுப்பள்ளி ஆசிரியரின் இந்த கல்வி சேவை மாணவர்களால் என்றும் மறக்கப்படாமல் இருக்கும். அடுத்து வரும் தலைமுறைக்கும் இது பாடமாக அமையும்.

-இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(11)
Name : Kannappan. Date :4/26/2017 9:32:42 AM
Congrats to hm for his great contribution to improve rural children education.
Name : V.Saraswathy Date :4/21/2017 7:18:57 PM
பலன் எதிர்பாராமல் செய்த உதவிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.ஒரு தலைமை ஆசிரியரின் பணிகள் என்ன என்பதை நிரூபித்துள்ளார் அவர் பணிகள் என்றும் தொடரும்.அவர் குடும்பthaருக்கும் நமது வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
Name : sivanesan Country : United States Date :4/21/2017 12:41:36 PM
வாழ்த்துக்கள்
Name : sivanesan Country : United States Date :4/21/2017 12:41:34 PM
வாழ்த்துக்கள்
Name : Abdul Kareem - Doha Country : Qatar Date :4/21/2017 11:28:30 AM
அவரை வாழ்த்த , ஏழுதி பயன் இல்லை , ஏன் போன்றோருக்கு , தொலைபேசி எங்கள் தான் தேவை .....
Name : Gopal Pandiyan Date :4/21/2017 9:55:05 AM
வாழ்த்துக்கள்
Name : Gopal pandiyanவாழ்த்துக்ள் Date :4/21/2017 9:49:45 AM
வாழ்த்துக்கள்
Name : Bala maramadakki Country : Indonesia Date :4/21/2017 9:42:40 AM
கடமையை கண்ணாக ஈடுபட்டார்.பணி நிறைவல்ல .தொடக்கம்...
Name : arabuthamilan Date :4/21/2017 2:41:44 AM
இது போல நிறைய தலைமை ஆசிரியர்கள் நம் நாட்டில் உருவாக்கப் பட வேண்டும்.வாழ்த்துக்கள்
Name : R,Nadarajah switzerland Country : Switzerland Date :4/21/2017 12:47:27 AM
மாதா பிதா குரு தெய்வம் குரு தன் கடமையை திறம்பட செய்து உள்ளார் அவரை வாழ்த்துவோம் அனைவரும் நீர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
Name : eswaran Date :4/20/2017 11:47:32 PM
இவர் மனிதனுள் மாணிக்கம்.