Add1
logo
திருப்பதி அருகே செம்மரம் கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது! || இன்றைய ராசி பலன் || “புண்ணாக்கு கடை வைக்கிறோம்” என கூறி மதுக்கடை அமைத்த அதிகாரிகளை கண்டித்து பெண்கள் போராட்டம்! || பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினேன்; நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம்: தம்பிதுரை || சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு || நகைக்கடையில் கொள்ளை; 32-வயது இளைஞர் 33-வது முறையாக சிறை || வீடுகளில் “டாஸ்மாக்” சரக்கு விற்பனை செய்த பத்து பேர் கைது || ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 34 பேருக்கு ரூ.10,085 அபராதம்! || கொளத்தூர் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை || பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேருக்கு பரோல் வழங்கவேண்டும் - சீமான் || வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் || ஜூலை 7ல் 55 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் || பெட்ரோல் 25 காசுகள் - டீசல் 10 காசுகள் விலை குறைப்பு ||
சிறப்பு கட்டுரை
எங்கள் சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்குவோம்!
 ................................................................
மெல்பர்னில் மொய்விருந்து
 ................................................................
அழகென்பது பெண்களுக்கு மட்டும்தானா?
 ................................................................
தந்தையர் தினத்தின் அன்னை: ஒரு பெருமைமிக்க மரபு சொல்லும் கதை..!
 ................................................................
பாஜக அரசின் தோலை உரிப்பதுதான் எங்கள் பணி: வேல்முருகன் பிரத்யேக பேட்டி
 ................................................................
காலா - இவரா... அவரா...?
 ................................................................
சமூக வ(தந்தி)லைதளங்கள்..!
 ................................................................
வீட்டை விட்டு வெளியே வரும் வாய்ப்பே போய்விடும்: வேதனையில் மாற்றுத்திறனாளிகள்
 ................................................................
இணையதளத்தில் தி.மு.க. புதிய வியூகம்! -பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி
 ................................................................
இனி நாய் வளர்க்கிறது அவ்வளவு ஈஸியில்ல..!
 ................................................................
இந்தியாவில் குற்றம்...இங்கிலாந்தில் சொர்க்கம் - விஜய் மல்லையாவின் சீனியர்கள் !!!
 ................................................................
சந்திரபாபு, அசோகனை பழி வாங்கினாரா எம்.ஜி.ஆர்.
 ................................................................
பிளாஸ்டிக்கால் செய்யப்படும் உணவுகளா? வதந்திகளில் மூழ்கும் சமூகம்!
 ................................................................
ரஜினி மாஸ் எடுபடுமா? -நக்கீரன் சர்வே...!
 ................................................................
துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (19:11 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (19:19 IST)



அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், குன்னம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.சிவசங்கர் தனது முகநூல் பக்கத்தில் டிடிவி தினகரன் பற்றியும், அவரை ஒதுக்க முடிவு செய்த மூத்த அமைச்சர்கள் பற்றியும் கமென்ட் செய்துள்ளார்.

டிடிவி தினகரன் குறித்து நண்பர் ஒருவர்  சில நாட்களுக்குமுன் அடித்த கமென்ட் இப்போது நினைவுக்கு வந்தது.



அவர் சொன்ன நேரம் அப்படிப் போலும். அன்று தான் சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு வந்திருந்தது. உடனே பரபரப்பாக காரியத்தில் இறங்கினார் டிடிவி.தினகரன். தன்னைத் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்க வைத்தார். சசிகலா சிறைக்குப் போனார். தினகரன் அதிமுக அலுவலகத்திற்கு வந்தார். சசிகலா உட்கார்ந்து கையெழுத்துப் போட்டதுபோல் இவரும் கையெழுத்திட்டார்.

சசிகலாவே ஜெயலலிதாபோல் உட்கார்ந்து கையெழுத்திட்டது காமெடி, தினகரன் செய்தது உச்சகட்ட காமெடி. ஜெ போல் சசியும், சசி போல் தினகரனும் பால்கனியில் நின்று தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்கள். இப்படி சசிகலா சிறைக்குப்போன பிறகு தினகரன் எடுத்த விஸ்வரூபத்தைப் பார்த்துதான் அந்த கமென்ட் வந்தது. 



ஆனால், சசிகலாவுக்கும் தினகரனுக்கும் வித்தியாசம் உண்டு. சசிகலா இதற்குமுன் நேரடி அரசியலில் இல்லாதவர். தினகரன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். மக்களோடு பணியாற்றியவர். நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலின் காட்சிகளைக் கண்டவர். அப்போது ஜெயலலிதாவால் பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தப்பட்டு அதிகாரத்தை நேரடியாக ருசி பார்த்தவர். அதைத்தான் இப்படிச் சொன்னார், "ஐம்பது வயதில் ஓ.பி.எஸ் பார்த்த அதிகாரத்தை நான் சிறுவயதிலேயே பார்த்தவன்".

சார் தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டபோதுதான் அவர் கண்ணில் ஓ.பன்னீர்செல்வம் பட்டார். ஓ.பி.எஸ் இப்போதும் தினகரனை 'சார்' என்றுதான் சொல்வார். அவ்வளவு 'விசுவாசம்'. அப்போது ஓ.பி.எஸ் பெரியகுளம் நகராட்சித் தலைவர், டீக்கடை உரிமையாளர். டிடிவிக்கு ஆற்றிய தேர்தல் பணிக்கும், காட்டிய பணிவுக்கும் 2001-ல் எம்.எல்.ஏ சீட் பரிசாகக் கிடைத்தது ஓ.பி.எஸ்ஸுக்கு. 

டிடிவி கொடுத்த சர்ட்டிபிகேட் ஜெவை இம்ப்ரஸ் செய்ததால், ஓ.பி.எஸ் அமைச்சரானார். ஜெ பதவி விலக வேண்டிய கட்டத்தில் டிடிவியும், சசியும் காய் நகர்த்தினார்கள். டிடிவியின் விசுவாசி ஓ.பி.எஸ் முதல்வரானார். ஆனால், அதில் உள் கதை இருந்தது. ஆமாம், ஓ.பி.எஸ்ஸின் 'பணிவு' நேரடியாக ஜெயலலிதாவையே பாதித்திருந்தது. 



அதனால்தான் ஓ.பி.எஸ் முதல்வரானார். இடையில் தினகரன் ஜெ-வால் ஓரங்கட்டப்பட்டார். ஓ.பி.எஸ். அதிகப் பணிவைத் தொடர்ந்தார் ஜெ-விடம். ஓ.பி.ராஜாவும், ஓ.பி.எஸ்.ரவீந்திரநாத்தும் சாம்ராஜ்யத்தை விரித்தார்கள். இது சசி கண்ணை உறுத்தியது. இதற்கிடையில் சசி மீது சந்தேகம் வந்து ஜெ-வால் வெளியேற்றப்பட்டார். ஓ.பி.எஸ். ஸ்ட்ராங்கானார். 

தான் சிறைக்குப் போன பிறகு ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதனோடு இணைந்து செய்துள்ள பண முதலீடுகளையும், கட்டமைத்த அரசியல் தளத்தையும் கேள்விப்பட்டு ஒதுக்கினார் ஜெ. தேர்தல் நெருக்கமாக இருந்ததால் பொருளாதார நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொண்டார் ஜெ. தேர்தல் வெற்றி குறித்து சந்தேகம் இருந்ததால் இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார்.

 ஜெ உடல்நலம் குன்றி அப்போலோ சென்ற நேரம், முதல்வர் பவரை மத்திய அரசின் துணையோடு கைப்பற்றினார் ஓ.பி எஸ். அப்போது இவரை ஒதுக்கப் பார்த்தார் சசி, காரணம் பழைய 'விசுவாச' அனுபவம். 

ஜெ மறைவுற்றார். எடப்பாடியை முதல்வராக்க முனைந்தார்கள் சசியும் தினாவும். மீண்டும் வென்றார் ஓ.பி.எஸ், மோடியின் பெருங் கருணையால்.

 இது நீடித்தால், ஓ.பி.எஸ் 'பச்சை சிரிப்போடு' அதிமுகவை கபளீகரம் செய்துவிடுவார் என்று தான் சசி நேரடியாக களமிறங்கினார். அப்போது சசி பாதம் பணிந்து பார்த்தார் ஓ.பி.எஸ். பிறகு பா.ஜ.கவின் கண்ணசைவில் ஓ.பி.எஸ். தியானம் செய்தார். 



கூவத்தூர் கேம்பின் முடிவில் சசிக்கு முதல்வர் பதவி கிட்டாது என்ற நிலையில், 'புது விசுவாசி' எடப்பாடி முதல்வராக்கப்பட்டார். இவர்தான் இப்போது தினகரனை ஒதுக்கி வைத்து முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவால் அமைச்சர் பதவி கொடுக்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கோட்டையன், தினகரனால் அமைச்சராக்கப்பட்டார். இவர்தான் கடைசிகட்ட பேச்சுவார்த்தைக்குப் போய், தினகரனை ஒதுக்க அடியெடுத்துக் கொடுத்தவர். 

கடந்த ஆட்சியில் சபாநாயகர் பதவியில் இருந்து இறக்கப்பட்டு, இப்போது மீன்வளத்துறை அமைச்சர் பதவி மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்த ஜெ.ஜெயக்குமார் தினகரனால் 'நிதியமைச்சர்' ஆக்கப்பட்டு இரண்டாம் இடத்திற்கு வந்தார். இவர்தான் தினகரனை 'ஒதுக்கிய செய்தியை' ஊடகங்கள்முன் 'மகிழ்ச்சியாக' அறிவித்தவர்.

அப்போது என் நண்பர் டிடிவி.தினகரன் குறித்து அடித்த கமென்ட், 'அமைதிப்படை பட அமாவாசை'. ஆனால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், ஜெயக்குமார் வரிசையைப் பார்த்தால்....

 எத்தனை அமைதிப்படை அமாவாசைகள்!


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :