Add1
logo
நெடுவாசலில் 19-வது நாளாக போராட்டம்: - உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள் (படம்) || தொழிலாளர்களின் இல்லங்களில் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்!: மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி || கொடநாடு கொலை-கொள்ளை விவகாரங்களை உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின் || இருசக்கர வாகனம் பேருந்தில் மோதி விபத்து: மூவர் பலி! || மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துச் செய்தி || தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் தெரிவித்த விவகாரம்; தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு! (படம்) || வெங்கடேஷுக்கு அழைப்பு விடுத்து போஸ்டர்: விவேக்கை ஆதரிக்கும் 30 எம்.எல்.ஏ.க்கள்: EPS-OPS அதிர்ச்சி || குடிதண்ணீரைத் திருடிய தனியார் குடிநீர் நிறுவனம்; வாகனங்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! (படம்) || மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன் || எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி || எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை || 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தலைமறைவு || முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு ||
தமிழகம்
நெடுவாசலில் 19-வது நாளாக போராட்டம்: - உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள் (படம்)
......................................
தொழிலாளர்களின் இல்லங்களில் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்!: மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி
......................................
கொடநாடு கொலை-கொள்ளை விவகாரங்களை உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின்
......................................
இருசக்கர வாகனம் பேருந்தில் மோதி விபத்து: மூவர் பலி!
......................................
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துச் செய்தி
......................................
தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் தெரிவித்த விவகாரம்; தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு! (படம்)
......................................
குடிதண்ணீரைத் திருடிய தனியார் குடிநீர் நிறுவனம்; வாகனங்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! (படம்)
......................................
மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன்
......................................
எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி
......................................
எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை
......................................
கோடநாடு காவலாளி கொலை வழக்கு: கைதாக 4 பேருக்கு 15 நாள் காவல்
......................................
முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு
......................................
உழைக்கும் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள்: - கு.செல்வப்பெருந்தகை வாழ்த்துச் செய்தி
......................................
கொடநாடு கொலை-கொள்ளை: ஏ.டி.ஜி.பி. அதிகாரி விசாரிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
......................................
கிராமசபை கூட்டங்களில் மதுக்கடைகளை மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! - அன்புமணி இராமதாஸ்
......................................
இந்தி திணிப்புக்கு எதிராக மே 9ல் ஆர்ப்பாட்டம்
......................................
மதுக்கடையை அகற்றகோரி பாமக போராட்டம்
......................................
உழைப்பாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்: எஸ்.டி.பி.ஐ தெகலான் பாகவி
......................................
திருமண கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்
......................................
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
......................................
ராமமோகனராவ் கார் ஓட்டுனர் விபத்தில் பலி
......................................
அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை: நிர்மலா சீதாராமன்
......................................
மு.க.ஸ்டாலின் பின்னணியில் தான் விவசாயிகள் போராட்டத்தை அரங்கேற்றினார்களா? தமிழிசை சவுந்தரராஜன்
......................................
வைகோ மே தின வாழ்த்து
......................................
பிரிவுக்கும், சேர்வுக்கும் பாஜக காரணம் இல்லை: ராதாகிருஷ்ணன்
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (19:9 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (19:16 IST)


ஆதிதிராவிட விடுதிகளுக்கு நிதி வழங்காத அரசு!
விழிபிதிங்கிக் கிடக்கும் காப்பாளர்கள்! (படங்கள்)



தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அனைத்து சமுதாயங்களையும் சார்ந்த ஏழை, எளிய மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 7 மாத காலமாக தமிழகத்தில் உள்ள விடுதிகளுக்கு உணவுக் கட்டணத்தை அரசு வழங்கவில்லை. விடுதி காப்பாளர்கள் மாணவர்களுக்கு சரிவர உணவு வழங்க முடியாமல் அவதிப்பட்டு போராடி வருகின்றனர்.

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு உணவுக் கட்டணமாக அரசு மாதம் ஒன்றுக்கு ரூ.755-ம், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.875-ம் வழங்கி வருகிறது. இது தவிர சோப்பு, எண்ணெய் வாங்க பள்ளி மாணவர்களுக்கு மாதம் தலா ரூ.50-ம், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.75-ம் வழங்கப்படுகிறது. வாரத்தில் புதன்கிழமை மதியம் உணவுடன் இறைச்சியும், மற்ற நாட்களில் முட்டையும் வழங்கப்படும். இதில் சைவ விடுதிகளில் சுண்டல், பன், வாழைப்பழம் என வழங்கப்படுகிறது.

விடுதி காப்பாளர்கள் வெளி கடைகளில் காய்கறிகள், மளிகைப் பொருட்கள், கறி, முட்டை, பால் என வாங்கி மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். விடுதிகளுக்கு ஒரு மாதத்திற்கு உரிய தொகையை அடுத்த மாதம் தான் அரசு வழங்கும். ஆனால், கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டத்தில்  உள்ள விடுதிகளில் 2016-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இன்று வரை விடுதி மாணவர்களுக்கு 7 மாதங்களாக அரசு வழங்க வேண்டிய உணவு கட்டணத்தை வழங்கவில்லை. இதனால் விடுதி காப்பாளர்கள் கடனுக்கு பொருட்களை வாங்கி சமைத்து உணவு வழங்கி வருகின்றனர். வியாபாரிகள் கடனைக் கேட்டு நெருக்கடி தருவதால் விடுதி காப்பாளர்கள் தங்கள் சொந்தப் பணத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் தற்போது மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் வழங்க ஆதார் எண், வங்கி எண் கேட்டு அலைக்கழிக்கப் படுகின்றனர். மாணவர்களிடம் இதனை சேகரித்து வழங்கினால் கூட நிதி வரவில்லை, வந்தால் பிரித்து தருகிறோம் என்று தலைமைச் செயலகத்தில் உள்ள இயக்குநர் அலுவலகத்திலும் காலம் தாழ்த்தி வருகிறார்கள் என கூறப்படுகிறது. 

இதே நிலை நீடித்தால் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படாத நிலை ஏற்படும். ஆகையால் மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக தலையிட்டு  அரசிடமிருந்து உணவுக் கட்டணத்தைப் பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி மதிவாணனை கேட்டபோது “அரசிடம் இருந்து நிதி வருகிறது. ஆதார், வங்கிக் கணக்குப் புத்தக எண் கொடுக்காதவர்களுக்கு மட்டும் தாமதம் ஆகிறது. அதுவும் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும்” என்று ரத்தின சுருக்கமாக கூறினார்.

பெயரைக் கூற விரும்பாத விடுதி காப்பாளர் ஒருவர் கூறுகையில் “அதிகாரிகள் கூறுவது முற்றிலும் தவறானது. என்னுடைய சம்பளம், மனைவி சம்பளம், நகைகளை அடுகு வைத்தும், வெளி கடைகளில் கடன் வைத்தும் உணவுப் பொருட்களை வாங்கி விடுதியை நடத்தி வருகிறோம். கடந்த 7 மாதமாக முள்படுக்கையில் இருப்பது போல் நாட்களை தள்ளிக்கொண்டு வருகிறோம். அரசு சரியாக பணம் ஒதுக்காதது தான் முக்கிய காரணம். கடலூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளுக்கும் இதே நிலை தான்” என்று மிக வேதனையுடன் பதிவு செய்தார்.

-காளிதாஸ்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :