Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் || ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன் || பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! || ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை || ஆரணி அருகே போலி மருத்துவர் கைது || நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு || 450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு || கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர் || போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ. || இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர் || தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது || இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது ||
முக்கிய செய்திகள்
திராவிடர் கழக பொதுக்குழு- 20 தீர்மானங்கள்!
 ................................................................
திரைப்பட வசனங்களை ஊதி பெரியதாக்கக் கூடாது: வைகைச்செல்வன்
 ................................................................
இன்றைய(21.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
பா.ஜ.க.வுக்கு சகிப்புத்தன்மை இல்லை: விஜயதாரணி
 ................................................................
சொந்த மாநிலத்தில் மோடிக்கு மரியாதை இவ்வளவுதான்!(வீடியோ)
 ................................................................
திப்புசுல்தானை அவமதித்த மத்திய அமைச்சர்!
 ................................................................
இரட்டை இலை யாருக்கு கிடைக்கும்? சு.சாமி கையில் முடிவு!
 ................................................................
நிலவேம்பு கசாயம் டெங்குவுக்கு சரியான மருந்தா?
 ................................................................
ரூ.5 ஆயிரம் கோடியில் சசிகலாவின் மாஸ்டர் பிளான்!
 ................................................................
எடப்பாடிக்கு சொந்த மாவட்டத்திலும் செல்வாக்கு இல்லை!
 ................................................................
மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு..!
 ................................................................
நடிகர் விஜய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்: எச்.ராஜா பேட்டி!
 ................................................................
பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (19:1 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (19:7 IST)

வடிவேலு - சிங்கமுத்து : 
சமரச பேச்சுவார்த்தை தோல்வி!நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஆகியோர் ஆஜரான  நிலமோசடி வழக்கை  சென்னை  ஐகோர்ட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் கடந்த 93- ஆம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவர் தொழில் செய்ய இரும்புலியூரில் உள்ள 34 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்று இருந்தார். இந்த கடன் தொகையை சரிவர செலுத்தாததால் பிணையாக வைக்கப்பட்ட சொத்தை தொழில் முதலீட்டு நிறுவனம் கடந்த 2006- ஆம் ஆண்டு பொது ஏலம் விட்டது. இந்த நிலத்தை  சென்னை அசோக் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் பழனியப்பன் ஏலத்தில் எடுத்துள்ளார். இந்த நிலையில், ராமச்சந்திரன் இறந்த பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் அந்த நிலத்திற்கு போலி ஆவணங்களை தயார் செய்யப்பட்டது. அதற்கு நடிகர் சிங்கமுத்து  அட்டர்னி வாங்கி அதனை நடிகர் வடிவேலுக்கு விற்பனை செய்துள்ளார்.

எனவே,  போலி ஆவணங்கள் மூலம்  நிலத்தை ஆக்கிரமித்தவர்கள்  நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று பழனியப்பன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில்  புகார்  செய்திருந்தார். இந்த புகாரின் பெயரில் ராமச்சந்திரனின் மனைவி, மகன், நடிகர்கள் சிங்கமுத்து, வடிவேல், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில்  இந்த வழக்கில், இரு தரப்பினருக்கும் சமாதானம் ஏறப்பட்டு நடிகர் வடிவேல், சிங்கமுத்துவிடம் வாங்கிய 2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை வங்கி அதிகாரி பழனியப்பனிடம் திருப்பி ஒப்படைத்து விட்டார். இதனால், அவர்கள் மீதான புகார் திரும்பப் பெறப்பட்டது.

அந்த புகார் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கா உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தனர்.  இந்த வழக்கில் இன்று வடிவேல்,சிங்கமுத்து நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.

நடிகர் சிங்கமுத்து, நடிகர் வடிவேல் ஆகியோர்  இன்று நீதிபதி எம்.வி. முரளிதரன்  முன்பு ஆஜரானார்கள். அப்போது சிங்கம் முத்து, வடிவேல் இருவரும் சமாதான பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர். இருவரின் சமரச பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. வடிவேல்,  நான் உழைத்து வாங்கிய இடமும், பணமும் போய்விட்டது என நீதிபதியிடம் குற்றம்சாட்டினார். மேலும் இருவரும் பணம் கொடுக்கல், வாங்குவது தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை  தேதி குறிப்பிடாமல் நீதிபதி  ஒத்திவைத்தார்.

- ஜீவாபாரதி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : arabuthamilan Date :4/21/2017 2:33:22 AM
வடிவேலு சிங்கமுத்துவிடம் கூடா நட்பு கொண்டிருந்ததில் பலனை அடைந்து விட்டார். சிங்கமுத்து ஒரு பிராடு பேர் வழி.