Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
முக்கிய செய்திகள்
வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
இன்றைய(16.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தீபாவளி கிப்ட் கேட்கும் அமைச்சர் - தவிக்கும் அதிகாரிகள்!
 ................................................................
கர்நாடகத்திலும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்க முடிவு - திருமாவளவன் வாழ்த்து
 ................................................................
அமைச்சர் சீனிவாசன் பதவி விலகவேண்டும்! முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!!
 ................................................................
பாஜக ஆணையை ஏற்று தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
கொள்ளையடிக்க நிதி கேட்கும் தமிழக அரசு: விஜயகாந்த் குற்றச்சாட்டு!
 ................................................................
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறையினர் செயல்படுகின்றனர்: எடப்பாடி
 ................................................................
கர்நாடகத்திலும் தலித்துகளை அர்ச்சகர்களாக்க நடவடிக்கை! - சித்தராமைய்யா உறுதி
 ................................................................
‘பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? குழந்தைகள் கூட சிரிக்கும்!’ - ராமதாஸ் அறிக்கை
 ................................................................
இரட்டை இலை' சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (18:35 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (19:39 IST)




கடந்த 3 நாட்களாக அதிமுகவில் இரு அணிகள் இணைப்பு என்ற பேச்சுவார்த்தையோடு பரபரப்புகள் நிலவி வந்தது. இதற்கு பின்னணியில் பாஜக தலைமைதான் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியான சம்பவங்கள்தான், கடந்த இரண்டு நாட்களாக நடைப்பெற்று வந்தது. திடீரென சசிகலா குடும்பத்தை ஒத்திவைத்துவிட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதாகவும் பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவதாகவும் மூத்த அமைச்சர்தகள் கூறினார்கள். இதற்கு ஓ.பி.எஸ். தரப்பிலும் வரவேற்பை கொடுத்தார்கள். கடந்த இரண்டு மாதமாக கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமை செலுத்தி வந்த துணைப்பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், திடீரென 'நான் ஒதுக்கிவிட்டேன்' என்று சாதாரணமாக கூறிவிட்டு வீட்டுக்கு போய்விட்டார். இவற்றிக்கெல்லாம் காரணம் பாஜகவினுடைய கடுமையான நெருக்கடிதான் என ’கூறப்படுகிறது. ‘

இதற்கிடையே இன்று இரண்டு அணிகளும் பேச்சுவார்த்தை சமூகமாக செல்லும் என எதிர்பார்த்திருந்தது.ஆனால் ஓ.பி.எஸ். அணி தங்களது கருத்துக்களை இன்று வலுவாக கூறியுள்ளது. அதில் முக்கியமானது பொதுச்செயலாளரான சசிகலா, துணைப்பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் ஆகிய இருவரிடமும் ராஜினாமா கடிதம் பெற்று, அதை சட்டப்படி அறிவிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் இவர்கள் கொடுத்த பிரமாணப் பத்திரத்தை திரும்ப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதோடு சசிகலா குடும்பத்தினரைச் சேர்ந்த அத்தனை நபர்களையும் விலக்கியதாக அறிவிப்பு வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதைக் கேள்விப்பட்ட அமைச்சர்கள் இதன் பின்னணியை கண்டு அதிர்ந்துள்ளார்கள். அவர்கள் தரப்பில் இருந்து நமக்கு கிடைத்த தகவல், பாஜக தலைமை சுத்தமாக தங்கள் கைக்குள் அதிமுகவை கொண்டு சென்றுவிட்டது. சசிகலா குடும்பம் முழுமையாக அப்புறப்படுத்துவது என்பது ஒரு புறம் இருக்க, தற்போது உள்ள அமைச்சர்கள் பலரையும் விடுவிக்கும் திட்டமும் அவர்களிடம் உள்ளது. ஓ.பி.எஸ். தலைமையில் கட்சியையும் ஆட்சியையும் கொடுத்து புதிய அமைச்சரவையில் தற்போது உள்ள பலபேர் இருக்க மாட்டார்கள் என திட்டமிட்டுள்ளார்கள். முழுக்க முழுக்க பாஜகவுக்கு துணைபோகக் கூடிய ஒரு நிர்வாகத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுவிட்டார்கள். அதன் விளைவாகத்தான் இன்று ஓ.பி.எஸ். அணியில் உள்ள முனுசாமியின் கருத்துக்கள் வந்துள்ளது. 

தற்போது தொண்டர்கள் எதிர்பார்ப்பது கட்சி ஒன்றிணைய வேண்டும். சின்னம் கிடைக்க வேண்டும் என்பது. அமைச்சர்களாகிய நாங்கள் எதிர்பார்ப்பது ஓ.பி.எஸ். உள்பட இப்போது உள்ள அமைச்சரவை நீடிக்க வேண்டும் என்பது. ஆனால் ஊழல், முறைகேடு செய்தவர்களோடு நீங்கள் இணக்கி போகாதீர்கள் என தொண்டர்கள் சொன்னதாக முனுசாமி கூறியிருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம், ஆக இப்போது உள்ள அமைச்சர்கள் பலரை நீக்க வேண்டும் என்றுதான் அர்த்தம். அதற்குத்தான் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்பே இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்கள். இதையெல்லாம் வைத்துத்தான் பாஜகவின் ஆட்டம் எங்களை வேதனைப்பட வைத்துள்ளது என கூறினார்கள்.

ஜீவா தங்கவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : vijay Date :4/21/2017 4:37:05 PM
சசிகலா தயவில் வந்த தகுதியில்லாத துணைவேந்தர்களையும் துரத்தவேண்டும். அப்போதுதான் உயர்கல்வி தப்பும்
Name : ram Country : Australia Date :4/21/2017 10:33:40 AM
மக்கள் தலைவர் முனுசாமி மக்களால் மூன்றாம் இடம் தள்ளப்பட்ட மக்கள் தலைவர்
Name : கோபால் Country : United States Date :4/21/2017 4:45:01 AM
கவலையே படாதீர்கள். அதிமுக போனபின், பிஜெபியும் ஒழிந்துவிடும். பின்னர், திமுகவும் நாம் தமிழர் கட்சியும்தான் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி.
Name : karikalan1 Country : United Kingdom Date :4/20/2017 8:18:34 PM
நிச்சயம் செய்யப்படவேண்டிய காரியம் ...முதலில் அமைச்சரவை மாற்றம்...இவளவு நாட்களும் சசிகலா குடும்பத்துக்கு பின்னால் நின்ற அனைத்து அமைச்சர்களும் பதவி விளக்க வேண்டும் ...ஏனென்றால் இவர்களை வைத்து கொன்டு ஓ பி எஸ் ஒன்றுமே செய்துவிட முடியாது...தம்பிதுரை செங்கொடையான் ஜெயக்குமார் மற்றும் அனைவரும் கட்சியை விடத்தே தூக்கி எறியப்படவேண்டும்....புதியவர்கள் மக்கள் நலம் கருதும் எம் எல் ஏக்கள் இருக்குகிறார்கள் இன்னும் அதிமுகவில்...நான் கே பி முனுசாமி அண்ணன் சொல்வதை முற்றாக வரவேட்கிறேன்