Add1
logo
மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ட்ரம்ப் மீதான பாலியல் புகார்கள்! || பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்! || தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த் || ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! || தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து || தோனியிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற ஹர்தீக் பாண்டியா! || எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி || விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்! || ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்! || விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்! || ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்) || குஜராத்: முந்தைய வாக்குகளை நீக்காமலேயே நடைபெற்ற வாக்குப்பதிவு! || கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல் ||
தமிழகம்
பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
 ................................................................
ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
 ................................................................
தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து
 ................................................................
விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்!
 ................................................................
ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்!
 ................................................................
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
 ................................................................
பெரியார் பல்கலை. துணைவேந்தர் தேர்வில் முறைகேடுகள்: தேர்வுக் குழுவுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
மருத்துவ மாணவியுடன் தூக்கில் தொங்கிய காதலன் சாவு: மாணவிக்கு தீவிர சிகிச்சை
 ................................................................
திருச்சியில் திறந்து கிடக்கும் 137 கழிவறைகள் – தூய்மை நகரம்?
 ................................................................
காணாமல் போன நாகை மீனவர்கள் குறித்து நடவடிக்கை! குமரி கலெக்டர் அலுவலகத்தில் தமிமுன் அன்சாரி மனு!
 ................................................................
ராகுல் காந்திக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்து!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நீதிபதி வீட்டில் வேலை பார்த்த பெண் உதவியாளருக்கு தோசை கரண்டியால் சூடு!
 ................................................................
ஆணவக் கொலைக்கு முதல் முறையாக தூக்கு தண்டனை தீர்ப்பு! ஹரிபரந்தாமன் வியப்பு
 ................................................................
டி.டி.வி. தினகரனுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு!
 ................................................................
மெரினா! உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
எம்.ஜி.ஆர். காதல் டூயட்! ஆர்.கே.நகரில் அசத்தல்! (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகரில் பூத் சிலிப் வினியோகம்!
 ................................................................
தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
 ................................................................
மீனவர்கள் வாழ்வில் தொடரும் துயரங்கள்; 23 மீனவர்கள் 5 படகுகள் சிறைபிடிப்பு
 ................................................................
மணல் திருட்டை காட்டிக் கொடுத்ததால் இரட்டை கொலை; கொலையாளிகள் 4 பேருக்கு 2 ஆயுள்
 ................................................................
காட்டுமிராண்டி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி! தீர்ப்பளித்த நீதிபதியை பாராட்டுகிறோம்! திருமா
 ................................................................
ஆர்.கே.நகர் என்றதும் தலையில் அடித்துக்கொண்ட அழுக்கு சாமியார் சிதம்பரம்!
 ................................................................
ராகுல்காந்தி தலைவர் பொறுப்பேற்பதைப் பார்த்து பாஜக எந்த அளவுக்கு அச்சப்படுகிறது? திருமாவளவன்
 ................................................................
கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் கைது-கலால் உதவி ஆணையர் அதிரடி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (17:58 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (17:58 IST)

தலைவிரித்தாடும் குடிநீர்ப் பஞ்சம்: மக்கள் அவதி

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் ஒன்றியங்களில் குடிநீர் பஞ்சத்தால் தலைவிரித்து ஆடுகிறது. அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டுக்கொள்ளவில்லை.  கிராம மக்கள் அவஸ்த்தை பட்டுவருகிறார்கள். பருவமழை பொய்த்து போன காரணத்தால், தமிழகத்த்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

 இதில் குறிப்பாக நாகை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் ஒன்றியங்களில் குடிநீர் தட்டுபாடுகள் அதிகமாகியுள்ளது. பெரும்பாலான  ஏழைமக்கள் வாழும் பகுதி கிராமங்கள் தான். உள்ளாட்சி அதிகாரம் முடிந்து போன காரணத்தால் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வறட்சியின் காரணமாக தண்ணீர் லெவல் 40 அடி, 50அடி, என இறங்கியுள்ளது. எந்த ஊராட்சியிலும் வாய்கால், குளங்கள் தூர்வாராமல் சுயலத்திற்காக பயன்படுத்தி, ஆக்கிரமித்து இருப்பதால் சட்டத்தாலும், அதிகாரிகள் மட்டத்திலும், மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளை கட்டுபடுத்தமுடியவில்லை. இதனால் நீர் நிலைகள் பாழாகிபோனது. இதே நிலை நீடித்ததால் தற்போது குடிநீர் கிடைக்காமல், பொதுமக்கள் வெளியேரும் நிலை உருவாகிவருகிறது.  

தற்போது நாகை மாவட்டத்திற்கு வறட்சி நிவாரணமாக நான்கில் ஒரு பங்கு நிதி வந்துள்ளதாக பேசப்படுகிறது. அதை ஆளும் கட்சியினர் அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து எந்த வித முன் அறிவிப்பும் பத்திரிக்கைகளில் வெளியிடாமல், அவர்களே பங்கு பிரித்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  

 மயிலாடுதுறை ஒன்றியங்களில் மூவலூர் ஊராட்சியில் நான்கு மோட்டார்கள் பழுதாகியுள்ளதால் குடிநீர் கிடைக்காமல், நிலங்களுக்கு ஓடிக்கொண்டியிருக்கும் நீரை பருகிவருகின்றனர். சாலைகள் குண்டு குழியும்மாக உள்ளது. 200க்கும் மேற்பட்ட தெரு லைட்டுகள் பழுதாகியுள்ளது. இதைப்போல்  மாப்படுகை, சோழம்பேட்டை, மஹாராஜபுரம், மணக்குடி, காளி, நீடூர், ரூரல், கோடங்குடி, செறுதியூர், அகரகீரங்குடி, உள்ளிட்ட 54 ஊராட்சிகளிலும், குத்தாலம் ஒன்றியத்தில் திருவேல்குடி, மேக்கிரிமங்கலம், வானதிராஜபுரம், வில்லியநல்லூர், கருப்பூர், நச்சினார்குடி, கடக்கம், உள்ளிட்ட 52 ஊராட்சிகளிலும், செம்பனார்கோவில் ஒன்றயத்தில் கருவாழக்கரை, மேலயூர், மருதப்பள்ளம், கஞ்சாநகரம், கீழையூர், கிடாரங்கொண்டான், காளகஸ்கதிநாதபுரம், ஆக்கூர், மடப்புரம் திருவிடைக்கழி, விசலூர், உள்ளிட்ட 54 ஊராட்சிகளிலும் குடிநீர் பஞ்சத்தால் கிராம ஏழை பொதுமக்கள் சிரமப்பட்டுவருகின்றனர். இந்த  நிலை நீடித்து வந்தால் மிகப்பெரிய போராட்டங்கள் மக்கள் கையில் எடுக்க உள்ளதாகவும், வெறும் அறிக்கையும், விளம்பரங்களுக்காக செயல்படுவதை நிறுத்திவிட்டு மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் போர்கால நடைவடிக்கை எடுத்து மிக பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

நாகை மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 

 க. செல்வா.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :