Add1
logo
கதிராமங்கலத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் || ரயில்வேதுறையில் தரமற்ற உணவுப்பொருட்களை களைய வேண்டும் - வாசன் || நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது || பெட்ரோல், டீசல் இன்றைய விலை || பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் ஊட்டியில் பரபரப்பு || 6 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது || அரசு மருத்துவமனையை காலி செய்து தனியார் மருத்துமனையை வாழ வைக்காதே! சிபிஐ ஆர்ப்பாட்டம் || நெடுவாசல், கதிராமங்கலம் பதிவுகள் வெளிட்ட முகநூல் முடக்கம் || சசிகலாவை சிறை மாற்றம் செய்யச் சொல்லி வலியுறுத்துவீர்களா?: ஸ்டாலின் பேட்டி || நியூஸிலாந்து நாட்டில் வரலாறு காணாத கன மழை சாலையில் வெள்ள பெருக்கு || மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த குளங்களின் பட்டியல் || சென்னை சர்வதேச படகு போட்டியில் 117 போட்டியாளர்கள் பங்கேற்ப்பு || மத்திய அரசை வெளுத்து வாங்கிய தமிழாசிரியை ||
முக்கிய செய்திகள்
சசிகலாவை சிறை மாற்றம் செய்யச் சொல்லி வலியுறுத்துவீர்களா?: ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பிக் பாஸில் இருந்து நமீதா வெளியேற்றப்பட்டார்?
 ................................................................
ஏன் இந்த இரட்டை நாடக வித்தை?: மோடிக்கு கி.வீரமணி கேள்வி
 ................................................................
கூவத்தூரில் இருந்து வந்தவர் செம்மலை: இரு அணிக்கும் எதிர்காலம் இருக்காது: ஆறுகுட்டி EXCLUSIVE பேட்டி
 ................................................................
திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம்- 12 தீர்மானங்கள்!
 ................................................................
மக்களை போட்டுத் தாக்கும் எடப்பாடி அரசு!
 ................................................................
எப்போதும் உங்கள் விசுவாசி! எடப்பாடி தூது!
 ................................................................
மாணவி வளர்மதி பிரச்சனையில் அரசு இன்னும் சிந்தித்து முடிவு எடுத்திருக்கலாம்: ஓ.பி.எஸ்
 ................................................................
தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன்
 ................................................................
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்: எடப்பாடி பழனிசாமி
 ................................................................
குண்டாஸ் மிரட்டல்! குறையாத வேகம்!
 ................................................................
அரசியலில் கலக்கும் கமல்!
 ................................................................
போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை கொடுக்க மறுக்கும் சக்திகள்!
 ................................................................
ரகசிய அறைக்குள் மின்னும் மர்மங்கள்! பத்மநாபசுவாமி கோயில் பகீர்!
 ................................................................
ஜெ. சிகிச்சையில் ரகசியத்தை உடைக்கும் டாக்டர்கள்! கதி கலங்கும் அப்பல்லோ!
 ................................................................
அமைச்சர்களின் இமெயில் ஐடி நீக்கப்பட்டது ஏன்? - சி.வி.சண்முகம் மழுப்பல் பதில்!
 ................................................................
அ.தி.மு.க.வில் பிளவே இல்லையாம் - அடித்துச் சொல்கிறார் தம்பிதுரை
 ................................................................
கமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (17:41 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (18:6 IST)


“குவார்ட்டருக்கு 10 ரூபாய் கூட கொடுக்கிறதுக்கு நான் என்ன கேணயனா? -டாஸ்மாக் ஊழியரிடம் குடிமகன் விவாதம்!


சில நேரங்களில், சாதாரண மனிதர்களைக் காட்டிலும்,  நேர்மைக்காக அதிகமாக குரல் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள் குடிமகன்கள்.  “எம்.ஆர்.பி. ரேட்டைக் காட்டிலும் ஏன் அதிகமாக பணம் கேட்கிறாய்?” என்று டாஸ்மாக் விற்பனையாளரிடம் ‘சவுண்ட்’ விடுவார்கள். பதிலுக்கு, டாஸ்மாக் சேல்ஸ்மேனும், சூபர்வைசரும்  ‘சவுண்ட்’ விடுவார்கள். 5 ரூபாய், 10 ரூபாய்க்காக டாஸ்மாக் கடைகளில் தினமும் நடக்கின்ற அக்கப்போர் இது. இதைக் காட்சிப்படுத்த வேண்டும் என, தன் செல்போனில்  குடிமகன் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு   எடுத்த வீடியோவைத்தான் பார்க்கப் போகின்றீர்கள்.  இதில் டாஸ்மாக் சேல்ஸ்மேனிடம் அந்தக் குடிமகன் நியாயத்துக்காக குரல் கொடுக்கிறார். அனல் பறக்கும் அந்த இருவரின் உரையாடல் இதோ -   
“இது எவ்வளவு சரக்கு?”
“150 ரூபாய்..”
“140 தான போட்டிருக்கு..”
“போட்ட ரேட்டுக்கு கொடுக்க முடியுமா?”
“அப்படின்னா.. பில் கொடுங்க 150 ரூபாய்க்கு..”
“பில்லெல்லாம் கொடுக்க முடியாதுய்யா.. குவார்ட்டர 140-க்கெல்லாம் தர முடியாதுய்யா.. 145, 150 தான்.. உம்ம ஒரு ஆளுக்காக பில்லெல்லாம் போட்டுத் தர முடியுமா? சரக்கு இறக்கி வைக்கிற கூலியெல்லாம் யாரு தருவா?”
“அது கவர்மெண்ட் கொடுக்குதுல்ல..”
“எந்தப் பய கொடுக்கிறான் கவர்மெண்ட்ல?”
“140 தான போட்டிருக்கு.. 150 ரூபாய் வாங்கிட்ட..”
“வேணும்னா 5 ரூபாய் ரிட்டர்ன் தரேன்.. 10 ரூபாயெல்லாம் தர முடியாது.. பாட்டிலைக் கொடு.. கொண்டாய்யா.. உனக்கு 10 ரூபாய் மிச்சம் தர்றதுக்கு நான் என்ன கேணையனா?”
“10 ரூபாய் கூட கொடுக்கிறதுக்கு நான் என்ன கேணயனா?”
“உனக்கு சரக்கே கிடையாது.. ஏட்டிக்குப் பூட்டி பேசின.. சரக்கை புடுங்கிருவேன்..”
“கை நீட்டி பேசாத.. கையை இறக்கி பேசு..”
“ஏய்ய்ய்ய்ய்…”
10 ரூபாயை திருப்பி வாங்குவதற்காக மெனக்கெட்ட குடிமகனிடம் கடைசி வரையிலும் டாஸ்மாக் சேல்ஸ்மேன் மீதிப் பணத்தைக் கொடுக்கவில்லை. அந்த டாஸ்மாக் கடை (எண் 11976) சாத்தூர் தாலுகாவில் உள்ள உப்பத்தூரில் இருக்கிறது. சட்டை போடாத சேல்ஸ்மேன் பெயர் சண்முகய்யா. சூபர்வைசர் பெயர் அழகுராஜ். 

   

இந்த வீடியோ காட்சி குறித்து, டாஸ்மாக் சம்பந்தப்பட்ட புகார்களைப் பதிவு செய்யும், சென்னையில் உள்ள கன்ஸ்யூமர் கம்ப்ளைன்ட்ஸை (044-28521298) தொடர்பு கொண்டு விளக்கினோம். விருதுநகர் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரனின் செல்போன் நம்பரைத் தந்தார்கள். அவரோ, தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கிறார். 

டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மது வகைககளை வர்த்தகம் செய்யும் ஒரு அரசு நிறுவனம் ஆகும். அடாவடியாக,  எம்.ஆர்.பி. ரேட்டைக் காட்டிலும் அதிகமாக, இஷ்டத்துக்கு விலை வைத்து விற்பதற்கு, சண்முகய்யா போன்றவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது? மது குடிப்பவர்கள் தள்ளாடினால் சரி! மது விற்கும் டாஸ்மாக்கே தள்ளாடுவதை என்னவென்று சொல்வது? டாஸ்மாக் விலை மோசடி என்பது  தமிழக அரசுக்குப் பெருத்த அவமானம்!

-சி.என்.இராமகிருஷ்ணன் 



   
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Govindaraj Country : Australia Date :4/21/2017 4:05:18 PM
இந்த விசயம் இப்போதா நடக்குது ...... ஆரம்பம் முதல் நடந்து வருகிறது ........... இது குடிப்பவனுக்கும் புதிது இல்லை ... விற்பவனுக்கும் புதிது இல்லை.....
Name : M.K.LOGANATHAN Date :4/21/2017 12:35:07 PM
சாத்தூரில் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் யார் நடவடிக்கை எடுப்பது யாரிடம் புகார் அளிப்பது .......