Add1
logo
இலங்கையில் கனமழைக்கு 201 பலி - நிவாரண உதவி வழங்கிய சீனா || இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு அனுமதி மறுப்பு - அமைச்சர் கோயல் || வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - ஜப்பான் பிரதமர் கண்டனம் || மோரா புயல் இன்று கரை கடக்கிறது || பராமரிப்பு பணியால் மின்உற்பத்தி நிறுத்தம் || ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி 2 மாணவிகள் பலி || சென்னையில் மின்வெட்டு இரவில் மக்கள் தவிப்பு || ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் || விசாரணைக்கு சென்ற நாம்தமிழர் கட்சியினர் கைது || அமைதி வழியில் போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதா? ஆம்ஆத்மி கட்சி வசீகரன் கண்டனம்! || ஸ்ரீநித்ய கல்யாண வேங்கடேஷ்வர பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா || சங்கமித்ரா படத்திலிருந்து நீக்கப்பட்டது ஏன்? ஸ்ருதிஹாசன் விளக்கம் ‘ || சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம் ||
தமிழகம்
பராமரிப்பு பணியால் மின்உற்பத்தி நிறுத்தம்
 ................................................................
ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி 2 மாணவிகள் பலி
 ................................................................
சென்னையில் மின்வெட்டு இரவில் மக்கள் தவிப்பு
 ................................................................
விசாரணைக்கு சென்ற நாம்தமிழர் கட்சியினர் கைது
 ................................................................
அமைதி வழியில் போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதா? ஆம்ஆத்மி கட்சி வசீகரன் கண்டனம்!
 ................................................................
ஸ்ரீநித்ய கல்யாண வேங்கடேஷ்வர பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா
 ................................................................
சங்கமித்ரா படத்திலிருந்து நீக்கப்பட்டது ஏன்? ஸ்ருதிஹாசன் விளக்கம் ‘
 ................................................................
சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம்
 ................................................................
கமல்ஹாசன்தான் அரசியலுக்கு வரலாம்; வேறு யாரும் வரக்கூடாதா? ராம.கோபாலன் கேள்வி
 ................................................................
திருவாடானையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
 ................................................................
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது: ராம.கோபாலன்
 ................................................................
நீதிபதி இந்திராபானர்ஜி குடும்பத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் (படங்கள்)
 ................................................................
விவசாயக் கடன் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
 ................................................................
புதுக்கோட்டையில் 120 மாணவிகளை வெளியேற்றும் ஆதரவற்றோர் இல்லம் (படங்கள்)
 ................................................................
இயற்கையின் கொடையை சிதைத்து ஒரு வளர்ச்சி வேண்டாம் நெடுவாசலில் - அய்யாநாதன்
 ................................................................
கொத்தமங்கலம், முத்துமாரியம்மன் கோயில் - 3 தேர்களின் தேரோட்டம்
 ................................................................
அதிராம்பட்டினத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து 50 வீடுகள் தீக்கிரை ( படங்கள் )
 ................................................................
விருத்தாசலத்தில் திருடப்பட்ட சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
 ................................................................
மோரா புயல் எச்சரிக்கை ..!
 ................................................................
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார் விபத்து
 ................................................................
சென்னை, டெல்லியில் போராட்டம் நடத்துவோம் : அய்யாக்கண்ணு பேட்டி
 ................................................................
டாஸ்மாக் கடையை குடியிருப்பு பகுதிக்கு மாற்றுவதா?
 ................................................................
திருச்சியில் மணல் கொள்ளைக்கு எதிராக திரண்ட மாணவர்கள்! (படம்)
 ................................................................
படிக்க அனுமதிக்காமல், கட்டாய திருமணத்தால் தம்பதிகள் தற்கொலை
 ................................................................
தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கும்; கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்க
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (17:4 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (17:8 IST)


மூவர் கொலை வழக்கில்;
ஆயுள் தண்டனை ரத்து! 15 பேர் விடுதலை!
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தருமபுரி கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் மூன்று பேரின் கொலை வழக்கின் மேல்முறையீட்டில், குற்றம் சாட்டப்ட்ட 15 பேரையும் விடுதலை செய்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 45). இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பென்னாகரம் வட்டச் செயலராக இருந்தார். மாரிமுத்து மற்றும் அவரது சகோதரர்கள் விஸ்வநாதன் (வயது 42), மணி (வயது 40) ஆகிய மூன்று பேரும் நிலம் தொடர்பான தகராறில், அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடந்த 1998ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி  மல்லாபுரம் அருகே துப்பாக்கியால் சுட்டும், அரிவாளாலும் தாக்கப்பட்டனர். இதில், மாரிமுத்து மற்றும் மணி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த விஸ்வநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பென்னாகரம் காவல் நிலையத்தில் 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், வழக்கு விசாரணையின்போது அதில் குற்றம்சாட்டப்பட்ட மூவர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் வழக்கில் தொடர்பில்லை எனக்கூறி அப்போதே விடுவிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கடந்த 2016 ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி  தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மல்லாபுரத்தைச் சேர்ந்த மாதப்பன் (50), கிருஷ்ணமூர்த்தி (44), சின்ன கணக்கன் (86), முத்து (47), அண்ணாதுரை (39), செந்தில் (35), இளமதி ராஜா(38), சுப்பு (50), செந்தில்குமார் (44), கூத்தப்பாடி அக்ராகரத்தைச் சேர்ந்த ரவி (50), புதுப்பட்டியைச் சேர்ந்த பழனி என்கிற பழனிசாமி (44), காட்டுராஜா (52), சேட்டு (45), சின்னசாமி (62) மற்றும் மாதப்பன் (48) ஆகிய 15 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.500 அபராதம் விதிப்பதாக நீதிபதி கூறியிருந்தார். மேலும், அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதேபோல, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கலைச்செல்வன், துரை, கமலா, லட்சுமி, ரவி, பொன்னம்மாள், கோவிந்தம்மாள் உள்ளிட்ட 13 பேரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆயுள் தண்டனை விதிக்கப்ப்பட்ட 15 பேரும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் “குற்றம்  சாட்டப்பட்ட 15 பேரும் ஒரே நாளில் கைது செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் வரிசை எண்கள் முன்னுக்குப் பின்னாக  உள்ளன. அதாவது 24.1.1998ஆம் தேதி பதிவு செய்யப்ட்ட முதல் தகவல் அறிக்கைக்கு வரிசை எண். 384960. அதற்கு மூன்று நாள் கழித்து பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் வரிசை எண்: 38494, இப்படி வரிசை எண்கள் முன்னுக்கு பின்னாக உள்ளன. இதை வைத்தே இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுகிறது. எனவே அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால் 15 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதிகள் அறிவித்து உத்தரவு பிறப்பித்தனர்.

-ஜீவா பாரதி


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :