Add1
logo
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் || போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது || நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு || கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் || நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை || ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார் || வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை || தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் || போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்) || கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!! || சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) ||
தமிழகம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல்
 ................................................................
நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
 ................................................................
கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம்
 ................................................................
ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார்
 ................................................................
போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்)
 ................................................................
கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!!
 ................................................................
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்)
 ................................................................
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்)
 ................................................................
தினகரன் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
 ................................................................
தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்!
 ................................................................
தினகரனுக்கு காய்ச்சல்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானம்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்!(படங்கள்)
 ................................................................
ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன்
 ................................................................
கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி
 ................................................................
அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆபத்தானது: பிரகாஷ் காரத் பேட்டி
 ................................................................
ஓபிஎஸ்க்கு செங்கோட்டையன் அறை!
 ................................................................
இரு அணிகள் இணைவதன் மூலம் தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை: கனிமொழி
 ................................................................
வழிக்காட்டு குழுவில் 11 பேர் - முன்பே சொன்னது நக்கீரன்..!
 ................................................................
இணைந்தன அணிகள்: ஓ.பி.எஸ் ட்விட்
 ................................................................
ஓ.பி.எஸ் தலைமை அலுவலகம் செல்லவில்லை!
 ................................................................
இருவரும் மாறி, மாறி கூப்பிடுகிறார்கள் - ஒரே குழப்பமாக உள்ளது; மதுரையில் எம்.எல்.ஏ.,போஸ்!
 ................................................................
மதுரையில் தீபா அணி கலைப்பு!
 ................................................................
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
 ................................................................
ஆதரவு எம்.எம்.ஏக்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (16:29 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (16:29 IST)

அண்ணா சாலையை நகர சாலையாக்கி 
மதுக்கடைகளை திறந்தால் போராட்டம்!:
அன்புமணி இராமதாஸ் 

அண்ணா சாலை உட்பட சென்னையில் உள்ள சாலைகளுக்கு நகர சாலைகள் எனப் பெயர்மாற்றம் செய்து மதுக்கடைகளைத் திறக்க நினைப்பது, பொதுமக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நேர்வழியில் சாதிக்க முடியாததை குறுக்கு வழியில் சாதிப்பதைப் போன்று, பாட்டாளி மக்கள் கட்சி  தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி சென்னை நகரில் மூடப்பட்ட மதுக்கடைகள் மற்றும் நட்சத்திர விடுதி குடிப்பகங்களை கொல்லைப்புற வழியாக திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்நடவடிக்கைக் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் 500 மீட்டர்  சுற்றளவிலும் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 3321 மதுக்கடைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் குடிப்பகங்களும் ஏப்ரல் ஒன்றாம் தேதியுடன் மூடப்பட்டன. சென்னை அண்ணா சாலையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் புகழ்பெற்ற நட்சத்திர விடுதிகள், கிளப்புகள் ஆகியவற்றில் செயல்பட்டு வந்த குடிப்பகங்களும்  மூடப்பட்டன. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை விட தனியார் குடிப்பகங்களுக்கு ஏற்பட்ட இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத ஆட்சியாளர்கள், அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் அண்ணா சாலையை தேசிய நெடுஞ்சாலை என்ற நிலையிலிருந்து நகர சாலையாக தரமிறக்க திட்டமிட்டுள்ளனர். சென்னை தீவுத்திடல் பகுதியிலுள்ள முத்துசாமி பாலம் முதல் தாம்பரம் வரையுள்ள 30 கி.மீ நீளமுள்ள  பகுதியை நகர சாலையாக வகைமாற்றம் செய்வதற்கான கோப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின்  மேசையில் இருப்பதாகவும், எந்நேரமும் இதற்காக அறிவிக்கை வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

அண்ணா சாலை நகர சாலையாக மாற்றப்பட்டால் அங்கு மூடப்பட்ட மதுக்கடைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளின் குடிப்பகங்கள் வரை அனைத்தும் மீண்டும் திறக்கப்படும். அடுத்தக்கட்டமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்குக் கடற்கரை சாலை ஆகியவற்றையும் நகர சாலைகளாக வகை மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக நட்சத்திர விடுதிகள், கிளப்புகள் ஆகியவற்றிடமிருந்து அவற்றின் குடிப்பக வருவாய்க்கு ஏற்ப ரூ.20 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கையூட்டு வசூலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மக்களின் நலன் கருதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை, மது வணிகர்களின் நலன் கருதி மாற்றத்துடிக்கும் அதிமுக அரசை விட மோசமான மக்கள் விரோத அரசை இந்தியாவில் மட்டுமல்ல... உலகிலேயே பார்க்க முடியாது.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் குடிப்பகங்களில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதால் தான், அவற்றை மூட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இப்போது அண்ணா சாலையை நகர சாலையாக்கி அதில் மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் திறந்தால் அவற்றில் குடிப்பவர்களுக்கு போதை ஏறாதா? அல்லது அந்த சாலை விபத்துக்களை தடுத்து நிறுத்தும் சக்தியை பெற்று விடுமா? என்பதை அறிவார்ந்த தமிழக ஆட்சியாளர்கள் தான் விளக்க வேண்டும்.

அண்ணா சாலையிலும், சென்னை மாநகரின் மற்ற தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும் மதுக்கடைகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் குடிப்பழக்கத்தை கைவிட்டுள்ளனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் நிம்மதியாக வாழத் தொடங்கியுள்ளன. இதற்காக மகிழ்ச்சியடைவதை விடுத்து, நட்சத்திர விடுதிகளின் மது வணிகம் குறைவதை நினைத்து கவலைப்படும் எடப்பாடி அரசு, எப்படி மக்கள் நல அரசாக இருக்க முடியும்? தனியார் குடிப்பகங்கள் மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் சில லட்ச ரூபாய் வருமானத்திற்காகவும், தங்களுக்கு கிடைக்கும் சில கோடி ரூபாய் கையூட்டுக்காகவும் சாலைகளை வகை மாற்றம் செய்து மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கும் ஆட்சியாளர்கள் மது அரக்கனை விட  மோசமானவர்கள் ஆவர். இப்படிப்பட்டவர்களை தமிழக மக்கள் அடையாளம் கண்டு தண்டிப்பார்கள்.

சென்னை மாநகரில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் வகைமாற்றம் செய்யப்படுவதால் வேறு விதமான பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இந்த சாலைகளின் பராமரிப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டாலும் அதற்கான செலவை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தான் வழங்குகிறது. இவை நகர சாலைகளாக மாற்றப்பட்டால் பராமரிப்புச் செலவை சென்னை மாநகராட்சி தான் ஏற்கவேண்டும். சென்னை மாநகராட்சி  பல்லாயிரம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிப்பதும், சென்னை மாநகராட்சி சாலைகள் எந்த லட்சனத்தில் உள்ளன என்பதும் அனைவரும் அறிந்தது தான். அவ்வாறு இருக்கும் போது நெடுஞ்சாலைகள் நகர சாலைகளாக மாற்றப்பட்டால் போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுவது ஒருபுறம், மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துக்கள்  மற்றொருபுறம் என மக்களுக்கு இரட்டை பாதிப்புகள் ஏற்படும். 

இவற்றையெல்லாம் உணர்ந்து அண்ணா சாலை உட்பட சென்னையில் உள்ள நெடுஞ்சாலைகளை நகர சாலைகளாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அரசின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்வதுடன், மிகப்பெரிய அளவில் போராட்டத்தையும் பா.ம.க. நடத்தும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :