Add1
logo
காஷ்மீரில் டி.எஸ்.பி அடித்துக் கொலை || சீனாவில் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கவிருந்த குழந்தையை போலீசார் மீட்டார் || சர்வதேச ஏறிபந்து போட்டியில் சாதனை படைத்த மாணவனுக்கு பண்ருட்டியில் உற்சாக வரவேற்பு || கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள் || புதுக்கோட்டையில் மழை || சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா || எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது || எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்! || ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு || FIR- ல் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? ஆர்.கே.நகர் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி! || அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு - 4 அதிமுக எல்.எல்.ஏக்கள் வெளிநடப்பு || சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு! || சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம் ||
தமிழகம்
கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள்
 ................................................................
புதுக்கோட்டையில் மழை
 ................................................................
சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
 ................................................................
எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது
 ................................................................
எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
 ................................................................
ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு!
 ................................................................
சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம்
 ................................................................
கீரமங்கலத்தில் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்து மாணவி காயம்
 ................................................................
இராஜீவ் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்களுக்கு பரோல் விடுதலை அளியுங்கள்: பழ.நெடுமாறன்
 ................................................................
மாற்றுத்திறனாளிகளையும் விடாத ஜி.எஸ்.டி. போராட்டம் (படங்கள்)
 ................................................................
சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்காததால் 2 கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பென்ட்..!
 ................................................................
பழி நீங்க, மனசாட்சிப்படி வாக்களிப்பீர் அ.தி.மு.க.வினரே! கி.வீரமணி கேள்வி
 ................................................................
தேர்தல் விதி மீறல் வழக்கு: பண்ருட்டி நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜர்!
 ................................................................
அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்திருப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு: தமிழிசை
 ................................................................
மு.க.ஸ்டாலினுடன் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி திடீர் சந்திப்பு: அதிமுகவினர் அதிர்ச்சி!
 ................................................................
கூவத்தூர் விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் கனிமொழி புகார்
 ................................................................
திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
 ................................................................
துப்பாக்கித் தொழிற்சாலை குறித்து அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.,கேள்வி: அமைச்சர் எம்.சி.சம்பத் பதில்
 ................................................................
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் - திமுக அறிவிப்பு
 ................................................................
ஆசிரியர் இல்லாத அரசு பள்ளி: மாணவர்களே பாடம் கற்கும் அவலநிலை!
 ................................................................
உங்கள் அரசியல் அனுபவத்திற்க்கு அழகல்ல: வெங்கையா நாயுடுவுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
 ................................................................
தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்லூரியில் யோகா தினம்
 ................................................................
மத்திய அரசு உதவிட முடியாது என்று கைவிரித்து இருப்பது வேதனை அளிக்கின்றது: மதிமுக
 ................................................................
தஞ்சையில் அண்ணா 109வது பிறந்த நாள் விழா மாநாடு: மதிமுக அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (12:15 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (12:15 IST)


பா.ஜ.க. அரசும், நீதிமன்றமும் கைகோத்துக் கொண்டு சவாரி செய்கின்றன: கீ.வீரமணி சாடல்

பா.ஜ.க. அரசும், நீதிமன்றமும் கைகோத்துக் கொண்டு சவாரி செய்கின்றன என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமூகநீதி மீது இடிக்கு மேல் இடி விழுந்து கொண்டிருக்கிறது. இதில் மத்திய பி.ஜே.பி.,க்கு முதலிடமா?  நீதிமன்றத்திற்கு முதலிடமா? என்ற போட்டிப் பந்தயம் நடைபெறுவதாகத் தெரிகிறது. நீட்டை எடுத்துக்கொண்டால் மத்திய பி.ஜே.பி. அரசும், நீதிமன்றமும் கைகோத்துக் கொண்டு சவாரி செய்கின்றன.

அரசு பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கான வாய்ப்பைத் தடுப்பதா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 17 ஆம் தேதி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் இரண்டாண்டுகள் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முதுநிலை கல்வி பெறுவதற்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது - தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த நடைமுறையாகும்.

இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அப்படியொரு தீர்ப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

எந்த நீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பு வழங்கினாலும், அது தவறுதான். முதுநிலைப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் அதிகம் தேவைப்படும் காலகட்டம் இது. இரண்டாண்டுகள் கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு மேலே படிக்க ஊக்கம் கொடுக்கவேண்டியது ஓர் அரசின் கடமையாகும். இந்த நிலையில், தேவையில்லாமல் எதற்காக நீதிமன்றம் இதுபோன்ற பிரச்சினைகளில் மூக்கை நுழைக்கவேண்டும்? மக்கள் விகிதாச்சார மருத்துவர்கள் தேவை பூர்த்தியாகிவிட்டதா? இல்லையே! பணியாற்றும் மருத்துவர்களிடம் இது மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்திவிடும்.

தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம்!

கல்வி வளர்ச்சி என்று வருகின்றபோது தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாகும், சமூகநீதி செழித்துக் குலுங்கும் பூமியாகும். இங்குப் பின்பற்றப்படும் நடைமுறை இந்தியாவுக்கே தேவைப்படும் ஒன்றாகும்.

இன்னும் சொல்லப்போனால், சமூகநீதிக்காக இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்படுவதற்குக் காரணமாக இருந்து, தந்தை பெரியார் முக்கால் நூற்றாண்டுகளுக்குமேல் உழைத்து உருவாக்கிய தனித்தன்மை என்னும் மணம் கமழும் நிலமாகும்.

தனிச் சட்டம் கொண்டு வந்து 69 சதவிகிதத்தைக் காத்த மாநிலம்

50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு விஞ்சக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் கூறிய நிலையில், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை புதிய சட்ட ரீதியாகப் பாதுகாத்த பெருமை திராவிடர் கழகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் உரித்ததாகும்.

தேர்தலில் தோல்வி என்றால் என்னவென்றே அறிந்திராத முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சமூகநீதியில் வருமான அளவுகோலைக் கொண்டு வந்த காரணத்தால் கனமான தோல்வியைப் பரிசாக அளித்த சமூகநீதி மண்!

நீதித் துறையிலும் தேவை இட ஒதுக்கீடு!

நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்ற குரலை ஓங்கி ஒலிப்பதிலும் இந்த மண்தான் முன்னணிப் படையாக இருக்கப் போகிறது. நீட் என்று எடுத்துக் கொண்டாலும் இந்தியாவிலேயே தனி மாகாணமாக நின்று எதிர்த்துத் தன் தனித்தன்மையை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. நீட்டின் பாதிப்பை ஓரிரண்டு ஆண்டுகளில் அனுபவித்த நிலையில், மற்ற மற்ற மாகாணங்களும் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கத்தான் செய்யும்.

மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஏன் அறிவிக்கவில்லை?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட்டை எதிர்த்து நிறைவேற்றப்பட்ட சட்டம் என்னாயிற்று? என்பதை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது ஏன்? ஆளுங்கட்சி கோஷ்டிச் சண்டை முடிவது எப்போது? உண்மையான ஆட்சி - ஆளுமை செயல்படுவது எப்போது? - இதுதான் இன்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி.

அது ஒருபக்கம் இருக்க, இப்பொழுது அரசு மருத்துவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள சமூக அநீதியைத் தடுத்து நிறுத்திட அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பிக்குமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

பிரதமரிடம் வலியுறுத்தி  வெற்றி பெறவேண்டும்!

வரும் ஞாயிறன்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரைச் சந்திக்கும்பொழுது, தமிழ்நாட்டின் கொதி நிலையை நேரடியாக எடுத்துக்கூறி, தமிழ்நாட்டின் நலனையும், சமூகநீதி உறுதியையும் நிலைநாட்டி வருமாறு வற்புறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : rajendran Country : Australia Date :4/20/2017 12:41:48 PM
நக்கீரனின் 30 -வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் அண்ணன் திரு கோபால் அவர்களுக்கும் நக்கீரன் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள். நக்கீரன் பணி தொடர வாழ்த்துகள்..