Add1
logo
நாகா்கோவில்: ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் குடியிருப்பு திறப்பு || பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை || பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி அரசு திசைதிருப்பும் தந்திரம்: ஸ்டாலின் கண்டனம || குலசேகர பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்: மு.க.ஸ்டாலின் || அனைத்திந்திய ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் அநீதி! அன்புமணி கண்டனம் || ஜெ. வழியில் திட்டத்தை நிறைவேற்றுவோம்: கடம்பூர். ராஜீ || முயல் வேட்டையில் ஈடுபட்ட விவசாயிக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் || சதம் அடித்த வீரர் மயங்கி விழுந்து மரணம் || பஹரைனில் கலைஞரின் 94வது பிறந்த நாள் விழா || இந்திய பேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி சாம்பியன்! || உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து: 2 பேர் உயிரிழப்பு || ஆளுனர் மாளிகை: மான்கள் வசிப்பிடத்தை அழித்து போலோ விளையாட்டுத் திடலா? ராமதாஸ் || டேங்கர் லாரியில் தீ விபத்து: 120 பேர் பலி ||
தமிழகம்
நாகா்கோவில்: ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் குடியிருப்பு திறப்பு
 ................................................................
பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி அரசு திசைதிருப்பும் தந்திரம்: ஸ்டாலின் கண்டனம
 ................................................................
குலசேகர பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
அனைத்திந்திய ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் அநீதி! அன்புமணி கண்டனம்
 ................................................................
ஜெ. வழியில் திட்டத்தை நிறைவேற்றுவோம்: கடம்பூர். ராஜீ
 ................................................................
முயல் வேட்டையில் ஈடுபட்ட விவசாயிக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம்
 ................................................................
சதம் அடித்த வீரர் மயங்கி விழுந்து மரணம்
 ................................................................
பஹரைனில் கலைஞரின் 94வது பிறந்த நாள் விழா
 ................................................................
உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து: 2 பேர் உயிரிழப்பு
 ................................................................
ஆளுனர் மாளிகை: மான்கள் வசிப்பிடத்தை அழித்து போலோ விளையாட்டுத் திடலா? ராமதாஸ்
 ................................................................
எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டப்பட்டு போரூர் மேம்பாலம் திறப்பு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - இ.பி.எஸ்க்கு அமைச்சர்கள் அழைப்பு
 ................................................................
தமிழக முதல்வராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு
 ................................................................
28 தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர்க்கு: முதல்வர் பழனிசாமி கடிதம்
 ................................................................
மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் முதியவர் பலி
 ................................................................
பாஸ்போர்ட் இந்தியிலும் வழங்கப்படும் மத்திய அரசின் அறிவிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்
 ................................................................
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்
 ................................................................
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
 ................................................................
மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - பேரூராட்சி ஊழியர் சங்கம் தீர்மானம்
 ................................................................
சாலையில் யானை நின்றதால் கிராமத்திற்கு செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
 ................................................................
அலுவல ஊழியர்களின் அலட்சியத்தால் கை மாறிய உதவி தொகை
 ................................................................
என் நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
 ................................................................
குற்றாலத்தில் மீண்டும் சீசன் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
 ................................................................
ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு -கூலித்தொழிலாளி கைது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (10:25 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (10:25 IST)


தேசிய இனங்களின் கூட்டு அமைப்புதான் இந்தியா: இந்தித் திணிப்புக்கு வைகோ கண்டனம்

பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சாரங்களைப் பின்பற்றும் பல தேசிய இனங்களின் கூட்டு அமைப்புதான் இந்தியா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு எங்கும் எதிலும் இந்தி மொழி கட்டாயம் என்பதைச் செயல்படுத்தி வருகின்றது. பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் இனி இந்தி மொழியில்தான் பேசவும், எழுதவும் மற்றும் அறிக்கை வெளியிடவும் வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டு இருக்கின்றார். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்றக் குழு கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி, மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் இந்தி அறிந்து இருக்க வேண்டும் என்று கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றதோ என்கிற ஐயப்பாடு எழுகின்றது. பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சாரங்களைப் பின்பற்றும் பல தேசிய இனங்களின் கூட்டு அமைப்புதான் இந்தியா என்பதை மத்திய அரசு உணராமல் போனால் வேற்றுமையில் ஒற்றுமை என்பது கேள்விக்குறி ஆகும்.

மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.சி. மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இனி பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரின் ஆணையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

நநேரந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்ற பின்னர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தி மொழித் திணிப்பு கண் மூடித்தனமாக அனைத்துத் துறைகளிலும் வேகமாக நடந்து வருகின்றது. அதைப் போலவே சமஸ்கிருதத்தை முதன்மையான மொழியாக முன்னிறுத்துவதற்கான முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதற்காக பதிமூன்று பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அக்குழு “சமஸ்கிருத வளர்ச்சிக்கான போக்கு மற்றும் திட்ட வரைவு - பத்தாண்டுக் கால முன்னோக்குத் திட்டம்” எனும் தலைப்பில் அறிக்கை ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளித்துள்ளது. இதில் சமஸ்கிருதத்தையும், வேதங்களையும் வளர்ப்பதற்கும், அவற்றைப் பயன்பாட்டுக்குக்  கொண்டு வருவதற்கான வழிமுறைகளையும் திட்டங்களையும் தொகுத்து அளித்துள்ளது.

அதன்படி, பள்ளிக் கல்வி, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி, அறிவியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சி என அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதத்தைப் பாடாக்குவது; குறிப்பாக 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் சமஸ்கிருதத்தை கட்டாயப்பாடமாக்குவது; பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சமஸ்கிருத ஆசியரை நியமிப்பது; மத்தியப் பல்கலைக் கழகங்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மற்றும் அங்கீகரிப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் சமஸ்கிருதத்திற்கான தனிப் பிரிவுகள் தொடங்குவது; அவற்றுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது போன்றவை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

வேத மற்றும் சமஸ்கிருத இடைநிலைக் கல்விக்கான மத்தியக் கல்வி வாரியம் ஒன்றை உருவாக்குவது, சமஸ்கிருத மற்றும் வேத பள்ளி, கல்லூரிகள் மற்றும் சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்கள் அமைப்பது உள்ளிட்ட பரிந்துரைகளும் மேற்கண்ட குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இந்துத்துவக் கொள்கைகளைத் திணிப்பதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவதும், இந்தி, சமஸ்கிருதத் திணிப்பைச் சட்டமாக்குவதும் கடும் கண்டனத்துக்கு உரியவை.

இந்தியைக் கட்டாயமாக்கும் எந்தவித முயற்சிகளையும் 1937 ஆம் ஆண்டில் இருந்து இந்தியை எதிர்த்துப் போராடி வரும் திராவிட இயக்கம் முறியடிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :