Add1
logo
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் || போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது || நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு || கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் || நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை || ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார் || வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை || தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் || போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்) || கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!! || சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) ||
தமிழகம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல்
 ................................................................
நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
 ................................................................
கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம்
 ................................................................
ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார்
 ................................................................
போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்)
 ................................................................
கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!!
 ................................................................
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்)
 ................................................................
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்)
 ................................................................
தினகரன் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
 ................................................................
தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்!
 ................................................................
தினகரனுக்கு காய்ச்சல்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானம்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்!(படங்கள்)
 ................................................................
ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன்
 ................................................................
கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி
 ................................................................
அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆபத்தானது: பிரகாஷ் காரத் பேட்டி
 ................................................................
ஓபிஎஸ்க்கு செங்கோட்டையன் அறை!
 ................................................................
இரு அணிகள் இணைவதன் மூலம் தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை: கனிமொழி
 ................................................................
வழிக்காட்டு குழுவில் 11 பேர் - முன்பே சொன்னது நக்கீரன்..!
 ................................................................
இணைந்தன அணிகள்: ஓ.பி.எஸ் ட்விட்
 ................................................................
ஓ.பி.எஸ் தலைமை அலுவலகம் செல்லவில்லை!
 ................................................................
இருவரும் மாறி, மாறி கூப்பிடுகிறார்கள் - ஒரே குழப்பமாக உள்ளது; மதுரையில் எம்.எல்.ஏ.,போஸ்!
 ................................................................
மதுரையில் தீபா அணி கலைப்பு!
 ................................................................
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
 ................................................................
ஆதரவு எம்.எம்.ஏக்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (8:21 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (8:21 IST)

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: இணையம் வழி  விண்ணப்பம் துவக்கம்

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஏப்ரல் 20 (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஒவ்வொரு தனியார் பள்ளியின் தகவல் பலகையில் வெளியிடும்படி பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1) (சி)-இன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை (எல்.கே.ஜி. அல்லது 1-ஆம் வகுப்பு) வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீத இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

அதன்படி, 2017-18-ஆம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தனியார் பள்ளிகள் தங்களது தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும். இணைய வழியாகவும் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர் விவரம், நிராகரிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை அதற்கான காரணங்களுடன் மே 22-ஆம் தேதி பள்ளிகளின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு மேலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் பெற்றோர்களின் முன்னிலையில் மே 23-ஆம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல், விண்ணப்ப எண் ஆகியவற்றை ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்கள் கொண்ட காத்திருப்போர் பட்டியலுடன் 24-ஆம் தேதி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

அரசு இ-சேவை மையங்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் பெற்றோர்கள் உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம்.

கோவை மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி நர்சரி, தொடக்கப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் மேற்கொண்ட சேர்க்கை தொடர்பாக பள்ளி வாரியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை விவரத்தை w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
அரசின் இந்தத் திட்டம் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக, பள்ளியின் பெயர்ப் பலகைக்கு அருகே நன்கு தெரியும் வகையில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட வேண்டும்.

மாணவர் சேர்க்கையின்போது, கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது. சேர்க்கை கோரும், மாணவரின் இருப்பிடத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் இருந்தாலும் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளியில் சட்டப்படி, மாணவர் சேர்க்கையை மறுக்காமல் நடத்த வேண்டும்.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில், ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அந்தந்த மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சிவா

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :