Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் || ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன் || பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! || ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை || ஆரணி அருகே போலி மருத்துவர் கைது || நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு || 450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு || கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர் || போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ. || இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர் || தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது || இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது ||
முக்கிய செய்திகள்
திராவிடர் கழக பொதுக்குழு- 20 தீர்மானங்கள்!
 ................................................................
திரைப்பட வசனங்களை ஊதி பெரியதாக்கக் கூடாது: வைகைச்செல்வன்
 ................................................................
இன்றைய(21.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
பா.ஜ.க.வுக்கு சகிப்புத்தன்மை இல்லை: விஜயதாரணி
 ................................................................
சொந்த மாநிலத்தில் மோடிக்கு மரியாதை இவ்வளவுதான்!(வீடியோ)
 ................................................................
திப்புசுல்தானை அவமதித்த மத்திய அமைச்சர்!
 ................................................................
இரட்டை இலை யாருக்கு கிடைக்கும்? சு.சாமி கையில் முடிவு!
 ................................................................
நிலவேம்பு கசாயம் டெங்குவுக்கு சரியான மருந்தா?
 ................................................................
ரூ.5 ஆயிரம் கோடியில் சசிகலாவின் மாஸ்டர் பிளான்!
 ................................................................
எடப்பாடிக்கு சொந்த மாவட்டத்திலும் செல்வாக்கு இல்லை!
 ................................................................
மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு..!
 ................................................................
நடிகர் விஜய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்: எச்.ராஜா பேட்டி!
 ................................................................
பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (2:27 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (2:40 IST)


அனைத்து நிர்வாகங்களும் ஸ்தம்பித்து: தமிழக அரசாங்கமே கோமா நிலையில் உள்ளது - மு.க.ஸ்டாலின் பேட்டி


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (19-04-2017) பேரவைத்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து, தமிழக சட்டமன்றம் உடனடியாக கூட்டப்பட்டு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களை நடத்திட வேண்டும் என்று மனு வழங்கினார். இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

மு.க.ஸ்டாலின்: ஒருமாத காலத்துக்கு முன் நிதி நிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் பிறகு நடைபெற வேண்டிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்த பிறகு நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டு, அந்த தேர்தல் நடைபெற முடியாமல் ரத்து செய்யப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ள மானியக் கோரிக்கைகளை உடனடியாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, அதுகுறித்து விவாதிக்கின்ற வகையில் சட்டமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இன்றைக்கு நாங்கள் சபாநாயகர் அவர்களை சந்தித்து, கோரிக்கை மனுவை தந்திருக்கிறோம். அதுகுறித்து, முதலமைச்சரிடம் விவாதித்து உடனடியாக கூட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்ல, முதலமைச்சரையும் சந்தித்து இந்த மனுவை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். அரை மணி நேரமாக காத்திருந்தும், முதலமைச்சர் எங்களை அழைக்காத காரணத்தால், மனுவை எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்து, ’அவர் எப்போது அழைக்கிறாரோ அப்போது தந்து விடுங்கள்’, என்று சொல்லி இருக்கிறோம்.

சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டும், மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என்ற நோக்கம் ஒருபக்கம் இருந்தாலும், தமிழக விவசாயப்பெருங்குடி மக்கள் இன்றைக்கு எப்படிப்பட்ட கொடுமைகளுக்கு, துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள், தமிழகத்தில் போராடிப் போராடி அலுத்துப்போய், சலித்துப்போய், இந்தியாவின் தலைநகரமாக உள்ள டெல்லிக்கே சென்று, மொட்டையடித்துக் கொண்டு, பாதி மீசையை எடுத்து, சேலை கட்டிக்கொண்டு, குட்டிக்கரணம் போட்டு, அரை நிர்வாணப்போராட்டம், முழு நிர்வாணப் போராட்டம் என இப்படி பலவித போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள், எனவே, அதுகுறித்தும் சட்டமன்றத்தில் விவாதித்து ஒரு நல்ல முடிவு காண தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல, தமிழகத்தில் இன்றைக்கு குடிநீருக்கு பெரிய பற்றாக்குறை ஏற்பட்டு, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிற நிலை உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று இன்றல்ல, நேற்றைக்கே இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறேன். இந்த ஆட்சியில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது. எந்த நிர்வாகமும் செயல்பட முடியாத, ஒரு கோமா ஸ்டேஜில் இந்த அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது. எனவே, சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறோம்.

செய்தியாளர்: அதிமுக வின் உட்கட்சி விவகாரம் இப்போது தமிழக நலன்களை பாதித்து இருக்கிறதா?

மு.க.ஸ்டாலின்: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்த வரையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையிலும் தேவையற்ற நிலையில் தலையிடுவது என்பது எங்கள் கொள்கையல்ல, அது மரபும் அல்ல. இருந்தாலும் நான் சொல்ல விரும்புவது, ஏற்கனவே நான் ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் தெளிவாக சொன்னேன், ஃபெரா மாஃபியா அணியும், சேகர் ரெட்டி மணல் மாஃபியா அணியும் செய்திருக்கும் ஊழல்களை எல்லாம், இரண்டு அணிகளைச் சார்ந்திருப்பவர்களே ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சொல்லி அவை எல்லாம் உண்மை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கு நான் சொன்னது போல தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. இப்படி பெரிய அளவிலே ஊழல் செய்து அன்றைக்கு ஒன்றாக இருந்து இந்த நாட்டையே கொள்ளையடித்து இருக்கக் கூடியவர்கள், இன்று இரண்டாகப் பிரிந்து இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களுடைய பிரச்சினைகளை பேசி சரிசெய்து கொள்வதற்காக கூடிக் கூடி சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சந்திக்க வேண்டிய விவசாயப் பெருங்குடி மக்களை சந்திக்கவில்லை. குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்க வேண்டிய பணிகளில் ஈடுபடவில்லை. இன்றைக்கு இங்கே வந்துள்ள எதிர்க்கட்சித் தலைவராகிய என்னையோ, எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களையோ இங்கே வந்திருக்கின்ற செய்தியறிந்து முதலமைச்சர் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். எங்களிடமே பேச மறுக்கிறவர் எப்படி விவசாயப் பெருங்குடி மக்களை சந்தித்துப் பேசப்போகிறார்?

கேள்வி: கவர்னரிடம் நேற்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். மானியக் கோரிக்கை விவாதம் தொடர்பாக கவர்னரைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறதா?

மு.க.ஸ்டாலின்: சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடையவில்லை. ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரைப் பொறுத்தவரையில் மானியக் கோரிக்கை விவாதம் நடத்த வேண்டுமெனில் சபாநாயகருக்கு தான் அந்த அதிகாரம் இருக்கிறது. ஆளுநருக்கு இல்லை. அதனால் தான் சபாநாயகரைச் சந்தித்து நேரில் மனு கொடுத்திருக்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :