Add1
logo
நெடுவாசலில் 19-வது நாளாக போராட்டம்: - உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள் (படம்) || தொழிலாளர்களின் இல்லங்களில் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்!: மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி || கொடநாடு கொலை-கொள்ளை விவகாரங்களை உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின் || இருசக்கர வாகனம் பேருந்தில் மோதி விபத்து: மூவர் பலி! || மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துச் செய்தி || தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் தெரிவித்த விவகாரம்; தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு! (படம்) || வெங்கடேஷுக்கு அழைப்பு விடுத்து போஸ்டர்: விவேக்கை ஆதரிக்கும் 30 எம்.எல்.ஏ.க்கள்: EPS-OPS அதிர்ச்சி || குடிதண்ணீரைத் திருடிய தனியார் குடிநீர் நிறுவனம்; வாகனங்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! (படம்) || மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன் || எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி || எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை || 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தலைமறைவு || முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு ||
தமிழகம்
நெடுவாசலில் 19-வது நாளாக போராட்டம்: - உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள் (படம்)
......................................
தொழிலாளர்களின் இல்லங்களில் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்!: மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி
......................................
கொடநாடு கொலை-கொள்ளை விவகாரங்களை உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின்
......................................
இருசக்கர வாகனம் பேருந்தில் மோதி விபத்து: மூவர் பலி!
......................................
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துச் செய்தி
......................................
தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் தெரிவித்த விவகாரம்; தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு! (படம்)
......................................
குடிதண்ணீரைத் திருடிய தனியார் குடிநீர் நிறுவனம்; வாகனங்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! (படம்)
......................................
மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன்
......................................
எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி
......................................
எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை
......................................
கோடநாடு காவலாளி கொலை வழக்கு: கைதாக 4 பேருக்கு 15 நாள் காவல்
......................................
முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு
......................................
உழைக்கும் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள்: - கு.செல்வப்பெருந்தகை வாழ்த்துச் செய்தி
......................................
கொடநாடு கொலை-கொள்ளை: ஏ.டி.ஜி.பி. அதிகாரி விசாரிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
......................................
கிராமசபை கூட்டங்களில் மதுக்கடைகளை மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! - அன்புமணி இராமதாஸ்
......................................
இந்தி திணிப்புக்கு எதிராக மே 9ல் ஆர்ப்பாட்டம்
......................................
மதுக்கடையை அகற்றகோரி பாமக போராட்டம்
......................................
உழைப்பாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்: எஸ்.டி.பி.ஐ தெகலான் பாகவி
......................................
திருமண கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்
......................................
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
......................................
ராமமோகனராவ் கார் ஓட்டுனர் விபத்தில் பலி
......................................
அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை: நிர்மலா சீதாராமன்
......................................
மு.க.ஸ்டாலின் பின்னணியில் தான் விவசாயிகள் போராட்டத்தை அரங்கேற்றினார்களா? தமிழிசை சவுந்தரராஜன்
......................................
வைகோ மே தின வாழ்த்து
......................................
பிரிவுக்கும், சேர்வுக்கும் பாஜக காரணம் இல்லை: ராதாகிருஷ்ணன்
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (0:56 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (0:56 IST)


கும்பகோணம் டாஸ்மாக்குக்கு எதிர்ப்பும், ஆதரவும் கலவரமாக மாறிய தாலுக்கா அலுவலகம்

புதிதாக டாஸ்மாக் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பும், ஆதரவு தெரிவித்து ஒரு தரப்பும் தாசில்தார் முன்னிலையில் மோதிக்கொண்டனர்.தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்காவில் செயல்பட்டுவந்த 12 அரசு டாஸ்மாக் கடைகள் நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்ததால் மூடப்பட்டன, அதில் பந்தநல்லூர் ஊராட்சியில் இயங்கிவந்த இரண்டு டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது.இந்நிலையில் பந்தநல்லூரில் இயங்கிவந்த கடைகளில் அதிகவியாபாரம் நடந்துவந்த கடையை பக்கத்து ஊராட்சியான கருப்பூரில் திறந்தனர். குடியிருப்பு மனைப்பகுதியில் புதிதாக கட்டப்பட் வீட்டை வாடகைக்கு எடுத்து டாஸ்மாக் கடையாக மாற்றியதால் அந்த மனைப்பகுதியில் இடம் வாங்கியவர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து இரண்டு முறை போராட்டம் நடத்தப்பட்டது. டாஸ்மாக் அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதன்படி  மாலை 5 மணிக்கு திருவிடைமருதூர் தாலுக்கா அலுவலகத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு டாஸ்மாக் வேண்டும் என நான்கு வேனிலும், வேண்டாம் என நான்கு வேனிலும் வந்திருந்தனர். பேச்சுவார்த்தையின் துவக்கத்திலேயே இருதரப்புக்கும் மோதல் வந்தது. டாஸ்மாக் கு ஆதரவாக வந்தவர்களோ அந்த பகுதியில் விற்கப்படும் பாக்கெட் சாராயத்தோடும், காரைக்கால் சரக்குப்பாட்டிலோடும் வந்து எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடமும், அதிகாரிகளிடமும் காட்டி முதலில் இதை தடுத்து நிறுத்துங்க பிறகு அரசாங்க டாஸ்மாக் தடுக்கலாம் என கோரசாக கோசமிட்டனர்.பேச்சுவார்தை அடுத்த தேதிக்கு ஒத்திவைத்தனர். அங்கு கூடியிருந்த டாஸ்மாக் ஆதரவாளர்கள் தாசில்தார் அலுவலக வாசலில் படுத்து போராட்டம் நடத்தினர். 

எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண்களுக்கு காக்கிகள் பாதுகாப்புக்கொடுத்து வீட்டுக்கு அனுப்பினர். இது குறித்து டாஸ்மாக்கு ஆதரவாக இருந்தவர்கள் கூறுகையில், " டாஸ்மாக் வேண்டும்னு நாங்க கேக்கல, ஆனா கள்ளச்சாராயம் இப்ப கொடிகட்டிப்பறக்குது, காரைக்கால் சரக்கை 40 ரூபாய்க்கு வாங்கிவந்து 100 ரூபாய்க்கு விற்கிறாங்க, இது எல்லாமே தெருக்களில் வீட்டுக்குள்ளயே விற்கிறாங்க, இதை தடுக்க யாரும் முன்வரல, ஆனா யாருக்கும் தொல்லையே கொடுக்காம ஆத்தங்கரையில  இருக்கிறது போராட்டம் நடத்துறாங்க, இதுக்கு பின்னாடி கள்ளச்சாரய வியாபாரியின் கைவரிசையும், அனுமதிக்கிடைக்காமல் பல்வேறு முயற்சியில் இருக்கும் மற்றொரு டாஸ்மாக் கடையினரின் கைவரிசையாலும் போராட்டம் நடத்துறாங்க, பந்தநல்லூர் காவல் சராகத்தில் எங்கயும் கடைதிறக்கமாட்டோம், கள்ளச்சாராயம் விற்கவிடமாட்டோம், காரைக்கால் சரக்குவிற்கவிடமாட்டோம்னு  பகிரங்கமா எல்லாரும் எழுதிக்கொடுக்கட்டும் அவங்களோட நாங்களும் போராடுறோம்," என்கிறார்கள்.

க.செல்வகுமார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :