Add1
logo
காஷ்மீரில் டி.எஸ்.பி அடித்துக் கொலை || சீனாவில் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கவிருந்த குழந்தையை போலீசார் மீட்டார் || சர்வதேச ஏறிபந்து போட்டியில் சாதனை படைத்த மாணவனுக்கு பண்ருட்டியில் உற்சாக வரவேற்பு || கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள் || புதுக்கோட்டையில் மழை || சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா || எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது || எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்! || ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு || FIR- ல் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? ஆர்.கே.நகர் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி! || அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு - 4 அதிமுக எல்.எல்.ஏக்கள் வெளிநடப்பு || சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு! || சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம் ||
தமிழகம்
கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள்
 ................................................................
புதுக்கோட்டையில் மழை
 ................................................................
சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
 ................................................................
எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது
 ................................................................
எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
 ................................................................
ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு!
 ................................................................
சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம்
 ................................................................
கீரமங்கலத்தில் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்து மாணவி காயம்
 ................................................................
இராஜீவ் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்களுக்கு பரோல் விடுதலை அளியுங்கள்: பழ.நெடுமாறன்
 ................................................................
மாற்றுத்திறனாளிகளையும் விடாத ஜி.எஸ்.டி. போராட்டம் (படங்கள்)
 ................................................................
சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்காததால் 2 கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பென்ட்..!
 ................................................................
பழி நீங்க, மனசாட்சிப்படி வாக்களிப்பீர் அ.தி.மு.க.வினரே! கி.வீரமணி கேள்வி
 ................................................................
தேர்தல் விதி மீறல் வழக்கு: பண்ருட்டி நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜர்!
 ................................................................
அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்திருப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு: தமிழிசை
 ................................................................
மு.க.ஸ்டாலினுடன் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி திடீர் சந்திப்பு: அதிமுகவினர் அதிர்ச்சி!
 ................................................................
கூவத்தூர் விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் கனிமொழி புகார்
 ................................................................
திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
 ................................................................
துப்பாக்கித் தொழிற்சாலை குறித்து அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.,கேள்வி: அமைச்சர் எம்.சி.சம்பத் பதில்
 ................................................................
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் - திமுக அறிவிப்பு
 ................................................................
ஆசிரியர் இல்லாத அரசு பள்ளி: மாணவர்களே பாடம் கற்கும் அவலநிலை!
 ................................................................
உங்கள் அரசியல் அனுபவத்திற்க்கு அழகல்ல: வெங்கையா நாயுடுவுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
 ................................................................
தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்லூரியில் யோகா தினம்
 ................................................................
மத்திய அரசு உதவிட முடியாது என்று கைவிரித்து இருப்பது வேதனை அளிக்கின்றது: மதிமுக
 ................................................................
தஞ்சையில் அண்ணா 109வது பிறந்த நாள் விழா மாநாடு: மதிமுக அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (0:42 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (0:42 IST)

கேன்சார் நோயினால் பாதிக்கப்பட்ட கிராம் 
இது வரை 35 பேர் உயிரிழப்பு 
அமைச்சர் தொகுதியின் பரிதாபம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனார் ஊத்து கிராமத்தில் கேன்சர் நோய்பாதிக்கப்பட்டு இது வரை 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ சொந்த தொகுதியில் நிலவும் இந்த அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் தேவர்குளம் சாலையில் உள்ள கிராமம் அய்யனார் ஊத்து. இஸ்லாமிய பெருமக்கள் அதிகளவில் வசிக்கும் இந்த கிராமத்தில் 6000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த கிராமத்தின் முக்கிய தொழில் பாய் தயாரிக்கும் தொழில். இங்கு தயாரிக்கப்படும் பாய்கள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாய் தயாரிக்கும் தொழில் மூலம் கிடைக்கும் குறைந்த வருவாயை கொண்டு வாழ்ந்து வரும் இந்த மக்களுக்கு பெரும் எதிரியாக வந்து இருப்பது புற்றுநோய் என்றழைக்கப்படும் கேன்சர். ஆண்டிற்கு 4 என்ற கணக்கில் கடந்த சில ஆண்டுகளாக கேன்சர் நோயினால் மக்கள் இறப்பின் வகிதம் தொடர்ந்து வருகிறது. 

இது வரை 35 பேர் கேன்சர் நோயினால் உயிரிழந்துள்ளதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள். ஏன்? எப்படி வருகிறது என்ற விபரம் தெரியமால் கடந்த சில ஆண்டுகளாக கேன்சர் நோய்க்கு இந்த மக்கள் பலியாகி வருவது தான் வருத்தமடைய செய்யும் செய்தி. 35 பேர் இறந்தது மட்டுமின்றி தற்போது 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு நெல்லை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறைந்த வருவாய் கிடைக்கும் தொழிலை செய்து வரும் இவர்கள் தங்கள் வீடு, நிலங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து மருத்துவ சிசிக்சைகளை மேற் கொண்டு வருகிறது. இந்த கிராமத்தில் நிலவும் சுகாதார சீர்கேடுகள் தான் இந்த கேன்சர் நோய்க்கு முக்கிய காரணம் என்பது இங்குள்ள மக்களின் முக்கிய கருத்தாக உள்ளது. மாதத்திற்கு ஒரு முறை மட்டும் மானூர் பகுதியில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில் இந்த கிராமத்தில் உள்ள 7 கிணறுகளில் இருந்து மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த கிணறுகள் சுத்தமில்லமால் இருப்பதும், குடிநீர் தேக்க தொட்டிகள் அசுத்தமாக உள்ளதால் இவர்களுக்கு வழக்கப்படும் குடிநீர் புழுக்கள் இருப்பது சாதரண ஒன்றாக மக்கள் பார்க்கின்றனர். சுத்தமில்லாத புழுக்கள் நிறைந்த குடிநீர் ஒரு புறம் என்றால், தெருக்கள் முழுவது ஆறாக ஓடும் சாக்கடை நீர் மறுபுறம், சாக்கடை கட்டப்பட்டு இருந்தும், அவை சுத்தம் செய்யபடமால் இருப்பதால் இவர்களுக்கு சாக்கடையில் இருந்து வரும் துர்நாற்றம் வழக்கமான ஒன்றாக உள்ளது. சுகாதாரமற்ற கிராமமாக இருப்பது தான் தங்களுடைய கிராம கேன்சர் நோய் கிராமமாக மாற காரணம் என்பது இவர்களின் வாதம். இவ்வளவு உயிரிழப்புகள் குறித்து தமிழகரசுக்கும், தமிழக சுகாதாரத்துறையினருக்கு இப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை என்பது ஆமை வேகத்தில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு இந்த கிராமத்தில் ஆய்வு செய்த சுகாதார துறையினர், அதன் பிறகு அதன் முடிவுகளை இது வரை தெரிவிக்கவில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டாக உள்ளது. 

வருவாய் குறைவு , நோய் தாக்கம் அதிகம் என்பதால் அரசின் உதவியை எதிர்ப் பார்த்துள்ளனர் இப்பகுதி மக்கள். எதனால் கேன்சர் வருகிறது ? அதற்கான காரணம் என்பதனை ஆய்வு செய்து, அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கை. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அமைச்சர் தொகுதி அந்தஸ்து பெற்ற போதிலும் இத்தொகுதியின் கடைசி ஊராக உள்ள அய்யனார் ஊத்து கிராமம் சுகாதாரமற்ற கிராமமாக உள்ளது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர். செ.ராஜீ தனது சொந்த தொகுதி கிராமத்தின அவலநிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் வேண்டுகளாக உள்ளது. 

மக்களுக்கு தரமான பாய்களை தயாரிக்கும் இந்த மக்களுக்கு கேன்சர் நோய் என்பது உத்தரவதமாக உள்ளது. இனியாவது அரசு நடவடிக்கை எடுக்கமா?

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :