Add1
logo
பா.ஜ.க. அரசு தேசிய அளவில் வீழ்த்தப்பட்டு ராகுல் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும்: திருநாவுக்கரசர் || புதியப் பாடத்திட்டம் ஒரு மாதம் தாமதம்: நோக்கம் நிறைவேறுமா? அன்புமணி || சத்துணவில் முட்டை நீக்கமா? கி. வீரமணி கண்டனம் || முதல்வரும், அமைச்சர்களும் மத்திய அரசின் கொத்தடிமைகள்: ஜவாஹிருல்லா || எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் திட்டங்கள் நிறைவேறுமா? ஈஸ்வரன் சந்தேகம் || காய்ச்சலால் வடமாநில வாலிபர் உயிரிழப்பு || ராமர் வேடமணிந்து கலெக்டரிடம் மனு || கோலியின் சதத்துடன் இந்திய அணி டிக்ளேர்! || பாஜகவில் இணைந்த ஜி.கே.நாகராஜுக்கு துணைத் தலைவர் பதவி || சென்னை - குமரி சாலையில் மறியல்: திமுக, டிடிவி அணி, விவசாய சங்கம் சார்பாக கடையடைப்பு || 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பாடத்திட்டம்! அடுத்த கல்வியாண்டு முதல் அமல்!! || கமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது: அமைச்சர் ஜெயக்குமார் || ராகுல்காந்தியை தலைவராக்க காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம்! ||
சிறப்பு செய்திகள்
மைசூர்பாகிற்கும் போட்டி போடும் கர்நாடகா!!!
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று...
 ................................................................
அரசியல் பின்னணி, சதி, வன்மம் இருக்கிறது:
 ................................................................
ஜெ. வீட்டில் ரெய்டு... செம்மலை கருத்து
 ................................................................
இவர்தான் நிஜ 'அறம்' நயன்தாரா?
 ................................................................
பீகார் பாணியில் இரட்டை இலையா?
 ................................................................
பத்திரிகை சுதந்திரமும் இந்தியாவும்
 ................................................................
எரிந்து சாகவா எம் இளம் பெண்கள்?
 ................................................................
எமெர்ஜென்சியை எதிர்கொண்ட திமுக!
 ................................................................
கமல் தான் ஸ்டாலினுக்கு போட்டி!
 ................................................................
கவர்னருடைய ஆய்வு என்பதே தவறு:
 ................................................................
GST வரி குறைப்பு
 ................................................................
தமிழகத்தில் பாஜக வாய்ப்புகளை ஆய்வு
 ................................................................
ஆட்டுக்குத் தாடியும் ஆளுநர் பதவியும்!
 ................................................................
சானியாவும் சர்ச்சைகளும்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஏப்ரல் 2017 (13:16 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஏப்ரல் 2017 (20:34 IST)




ஜெ. மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் முக்கியப் புள்ளியாக செயல்பட்டவர் டிடிவி தினகரன். அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவரைப் புகழ்ந்து தள்ளி, தினகரன்தான் முதல் அமைச்சராவார் என தலையில் தூக்கி வைத்து ஆடிய நிலையில், திடீரென அவரை அதிமுகவில் இருந்து நீக்கினால்தான் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்ற சூழ்நிலை வந்துள்ளது. தினகரன் யார்? உயர்ந்த இடத்தில் இருந்த அவரின் செல்வாக்கு சரிந்தது ஏன்? 

ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் மூத்த சகோதரி வனிதாமணி. திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - வனிதாமணி தம்பதியின் மூத்த மகன்தான் டிடிவி தினகரன். சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகளான அனுராதாவை, அதாவது தனது மாமன் மகளையே திருமணம் செய்து கொண்டார் தினகரன். 

தினகரனுக்கு பாஸ்கரன், சுதாகரன் என இரு இளைய சகோதரர்கள் உள்ளனர். இவர்களில் சுதாகரன்தான் 1990களில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்டவர். தற்போது அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் இளவரசியுடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

1998ம் ஆண்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணத்தைப் பெற்ற புகாரின் பேரில் அமலாக்கத் துறையால் தினகரனுக்கு ரூ.31கோடி அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் அது ரூ.28கோடியாக குறைக்கப்பட்டது. 


அதிமுகவின் பொருளாளராக பதவி வகித்துள்ள தினகரன், 1999ம் ஆண்டு பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அந்தத் தேர்தலில் தினகரனுக்காக தீவிர பணியாற்றியவர் ஓ.பன்னீர்செல்வம். அதற்குப் பரிசாகத்தான் பன்னீர்செல்வத்துக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வாங்கித் தந்தார் தினகரன். 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெரியகுளத்தில் தோற்றாலும் மாநிலங்களவை உறுப்பினராகி மீண்டும் டெல்லி சென்றார் தினகரன். 

2011ல் சசிகலா உள்ளிட்டோருடன் தினகரனையும் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அதன்பிறகு நேரடி அரசியலுக்கு வராமல் ஒதுங்கியே இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் அதிமுகவில் செல்வாக்கோடு வலம் வரத் தொடங்கிய அவர், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு சசிகலாவும் எடப்பாடி பழனிச்சாமியும் சென்றபோது அவர்களோடு உடன் இருந்தார்.


அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறை செல்லும் நிலையில், அவசர அவசரமாக மீண்டும் தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச்செயலாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட, எடப்பாடி பழனிச்சாமியை முதல் அமைச்சராக ஆக்கியதின் பின்னணியில் இருந்தார் தினகரன். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்றாலும், அவரை விட தினகரனுக்கு ஆட்சி நிர்வாகத்தில் முக்கியத்துவம் நிலவி வந்தது. 

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் தினகரனுக்காக அமைச்சர்கள் முன்னைப்போல பெரும்படையாக பணி செய்யாமல் சிலர் மட்டுமே தேர்தல் பணியை ஆற்றினர். அப்போதிலிருந்தே சசிகலா அணியில் உள்முரண்பாடுகள் இருந்தது வெளிப்பட்டது. சசிகலா குடும்பத்திற்குள்ளும் தினகரன் செயல்பாடு குறித்து, குறிப்பாக வாக்குக்காக பணத்தை அள்ளி இறைத்தது கடுமையான அதிருப்தியையும், எதிர்ப்பையும் உண்டாக்கியது. 

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்ததுடன், வருமான வரித்துறைக்கும் சில பரிந்துரைகளை அளித்தது. இறுதியில் இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து தினகரனின் தீவிர ஆதரவாளரான அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக மேலும் சில அமைச்சர்களிடம் சோதனை நடத்தப்படும் என்ற சூழல் உருவானது. இதனால் அவர்களும் தங்களது வீடுகளிலும் சோதனை நடக்குமோ என்ற அதிர்ச்சியிலும், அச்சத்திலும் இருந்தனர். 

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி டெல்லியில், இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் தரப்பு ரூ.60கோடி வரை பேரம் பேசியதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கையில் தினகரன் பெயர் இடம்பெற்றது. அதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் கடும் அவப்பெயர் ஏற்பட்டது. இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லியில் இருந்து தகவல்கள் வெளியாகின. 

பரபரப்பான இந்த சூழ்நிலையில் சசிகலா அணியில் இருந்த முக்கிய அமைச்சர்கள், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் டிடிவி தினகரன் குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது என முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

ஜெயக்குமாரின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுகுறித்து இன்று பேட்டி அளித்த தினகரன், “நேற்றுவரை என்னுடன் பேசிக்கொண்டிருந்த மூத்த அமைச்சர்கள், திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதற்கு அவர்களிடம் ஏதோ ஒரு அச்சம் வந்திருப்பதே காரணம். அது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. என்னை துணைப்பொதுச்செயலாளராக நியமித்த, சசிகலாவிடம் பேசிவிட்டுத்தான் அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதா என்றெல்லாம் முடிவு செய்வேன் என்று கூறினார். 


நீங்கள் முடிவு செய்வது இருக்கட்டும்; எடப்பாடியும், பன்னீரும், ஜெயக்குமாரும், செங்கோட்டையனும் வேறு முடிவு செய்துவிட்டால் என்ன செய்வீர்கள்?

-ராஜவேல்

கட்சியில் இருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்: டி.டி.வி தினகரன் பேட்டி




தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :