Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
சிறப்பு செய்திகள்
"கொள்ளிபோட ஆள் இல்லை அய்யா!" ராகுலிடம்
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து ஆகுமா?
 ................................................................
கருத்தே இல்லாத கபோதிகளுக்கு கருத்து
 ................................................................
காங்கிரஸை 'கை' தூக்கி விடுவாரா ராகுல்?
 ................................................................
எலெக்ட்ரானிக் வடிவில் எமன்
 ................................................................
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச்
 ................................................................
இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்!
 ................................................................
கல்வாரியின் அர்ப்பணிப்பும், சிறப்புகளும்
 ................................................................
பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
 ................................................................
பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?
 ................................................................
அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
 ................................................................
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!
 ................................................................
மூக்கறுபட்ட முன்னோர்கள்!
 ................................................................
தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஏப்ரல் 2017 (12:16 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஏப்ரல் 2017 (12:16 IST)




ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் எழுதும் ஏழை எளிய கிராமப்புற மாணவிகள் நாடிவருவது தலைநகரமான சென்னைக்குத்தான். பெரும்பாலான பயிற்சி மையங்கள் அண்ணாநகரில் இருப்பதால் அங்குள்ள மகளிர் விடுதிகளில் தங்கிப் படிக்கின்றனர். ""பணத்தை இஷ்டத்துக்கு பிடுங்கும் மகளிர் விடுதி உரிமையாளர்கள் அதற்கேற்ற சரியான உணவுகளையும் முறையான வசதிகளையும் செய்து கொடுக்காமல்…ஜெயில் வார்டன்களைவிட மோசமா எங்களை சித்ரவதை பண்ணி படிக்கவிடாம பண்றாங்கண்ணா''’என்ற பரிதாபக் குற்றச்சாட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மாணவிகளிடமிருந்து எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

அண்ணாநகர் மேற்கு சரவணபவன் எதிரிலுள்ள ஏ.டி. ப்ளாக், 5-வது அவென்யூ, 5-வது தெருவிலுள்ள எஸ்.எஸ். லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியுள்ள மாணவிகள் சொல்லும் குற்றச்சாட்டுகள் பகீரூட்டுகின்றன. ""நாங்கள்லாம் மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம் போன்ற மாவட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்கு வந்து...  தமிழக அரசின் அண்ணா இன்ஸ்டிடியூட்டின் இலவச பயிற்சி மையம், மனிதநேயம் அறக்கட்டளையின் இலவச பயிற்சி மையங்களில் ஐ.ஏ.எஸ்.ஸுக்காக படிச்சிக்கிட்டிருக்கோம். கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் இங்கதான் தங்கியிருக்காங்க. பெரும்பாலானவங்க ஏழை-எளிய விவசாயிகளின் வீட்டுப் பிள்ளைங்கதான். மாதம், 4,500 ரூபாயிலிருந்து 8,000 ரூபாய்க்குமேல வசூல் பண்ற எஸ்.எஸ். லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் சரோஜா, சாப்பாடுகூட ஒழுங்கா தரமாட்டாங்க. 

காலையில மீந்துபோன உப்புமாவையெல்லாம் இரவு கொடுப்பாங்க. துணி துவைக்க விடமாட்டாங்க. படிப்பதற்காக இரவு 10 மணிக்குமேல லைட் எரிந்தால் "கரண்டு பில்லு யாரு ங்கொப்பனா கட்டுவான்?'னு அவங்களே வந்து ஆஃப்பண்ணிட்டுப் போய்டுவாங்க. இதையெல்லாம் கேட்டா... "கிராமப்புறத்திலிருந்து வந்தவளுங்களுக்கு திமிரைப் பாரு...'ன்னு மிரட்டி அடிக்கிறமாதிரி கை ஓங்குவாங்க.

அதேமாதிரி, ஹாஸ்டலில் சேரவரும்போது ஒருமாத வாடகையை அட்வான்ஸா வாங்குவாங்க. ஆனா, காலிபண்ணிக்கிறோம்னு சொன்னா பணத்தை திருப்பிக் கொடுக்கமாட்டாங்க. பானுமதிங்குற பொண்ணுக்கு 5,000 ரூபாய் கொடுக்கணும். ஸ்ரீமதிங்குற பொண்ணுக்கு 4,500 ரூபாய் கொடுக்கணும். அந்த பிள்ளைங்க வந்து காலில் விழாத குறையாய் ரெண்டு மாசமா கெஞ்சிக்கிட்டிருக்குதுங்க. இதுமாதிரி, நிறையபேர் பரிதவிக்கிறாங்க. 

இதைவிடக்கொடுமை... பேருக்குத்தான் இது லேடீஸ் ஹாஸ்டல். அடிக்கடி, அவங்களோட பையன், உறவுக்கார ஆண்கள்னு இங்க வந்து தங்குவானுங்க. அவனுங்க, இருக்கிற இடத்துலதான் பாத்ரூம் இருக்கும். அவனுங்க, சாதாரணமா செல்போனை கையில வெச்சுக்கிட்டிருக்கானுங்களா... நம்பள படம் புடிக்கிறானுங்களாங்குற பயத்திலேயே பாத்ரூம் பக்கம் போகமுடியாம அவஸ்தைப்பட்டிருக்கோம்''’என்று பகீரூட்டும் மாணவிகள் அதை நிரூபிக்கும் விதமாக, நம் கண் முன்னேயே சரோஜாவிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்கள்.

""ஆன்ட்டி… உங்களோட டார்ச்சர் தாங்கமுடியாமத்தானே நான் வேற ஹாஸ்டலுக்கு போயிட்டேன். என்னைப்பற்றி ஏன் தப்பு தப்பா பேசுறீங்க? லேடீஸ் ஹாஸ்டலில் ஆண்கள் வந்து தங்குறாங்களே... நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் பண்ணட்டுமா?''’என்று அந்த மாணவி கேட்க...…குற்றச்சாட்டை மறுக்காத சரோஜா, "உன்னால ஒண்ணும் பண்ணமுடியாது...… முடிஞ்சா போயி பண்ணிக்கோ போ'’என்கிறார். நாம் அதை ரெக்கார்டு பண்ணிக்கொண்டு… எஸ்.எஸ். லேடீஸ் ஹாஸ்டலின் உரிமையாளரும் வார்டனுமான சரோஜாவை தொடர்புகொண்டோம். 

""5 லட்ச ரூபாய் அட்வான்சும் மாதம் 57,000 ரூபாய் வாடகையும் கொடுத்து கஷ்டப்பட்டு இந்த ஹாஸ்டலை நடத்துறேன். மாணவிகள் சொல்வதெல்லாம் பச்சை பொய்''’’என்று மறுத்தவரிடம், ""நீங்கள் பேசியதற்கான செல்போன் ரெக்கார்டிங் ஆதாரமும் மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் வீடியோ ஆதாரமும் உள்ளது''’என்றதும், “""என் பையன் அப்பப்போ வந்து ஹாஸ்டலில் சாப்பிட்டுவிட்டுப் போவான் சார். அவனுக்கு வேற இடத்துல ரூம் எடுத்து கொடுத்திருக்கேன். என்னோட ரிலேஷன் பையன்தான், அவனோட மனைவியிடம் பிரச்சினைன்னு சொல்லி கொஞ்சநாள் வந்து தங்கியிருந்தான்,… அவனும் இப்போ தங்குறதில்ல''’என்று பெண்கள் விடுதிக்குள் ஆண்களை தங்கவைத்ததை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அவரிடம் நாம், ""மகளிர் விடுதி நடத்துகிறீர்களே?…கட்டிடத்திற்கான பில்டிங் அப்ரூவல் இருக்கிறதா? பிராபர்ட்டி டேக்ஸ் மற்றும் புரபேஷன் டேக்ஸ் (தொழில் வரி) கட்டப்படுகிறதா? ஃபயர் லைசென்ஸ் வாங்கியிருக்கீங்களா? சுகாதாரத்துறையில் அனுமதி வாங்கியிருக்கீங்களா?''’என்று கேட்டபோது... “""இதெல்லாம் வாங்கணுமா சார்?''’என்று நம்மை பதறவைத்தவர், “""விண்ணப்பிச்சிருக்கேன்...… ஆனா இன்னும் அனுமதி கிடைக்கல''’என்றார் சமாளிப்பாக.

இப்படித்தான் தமிழகம் முழுக்க பெரும்பாலான பெண்கள் விடுதி  நடத்தும் உரிமையாளர்கள் லோக்கல் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் காக்கிகளையும் கவனித்துக்கொண்டு, பணம் சம்பாதித்து பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை மாநகராட்சி 8-ஆவது மண்டல அதிகாரி பரந்தாமன் மற்றும் அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, "விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்' என்றார்கள் உறுதியாக.

மகளிர் காவல்நிலையங்கள் இதுபோன்ற மகளிர் விடுதிகளை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்தால்தான் வருங்கால ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.கள் உள்ளிட்ட பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

-மனோசௌந்தர்



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : தமிழன் Country : Australia Date :4/19/2017 4:42:11 PM
மகளிர் போலீஸ் இவைகளைத் துப்பறிந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இரவில் ஹாஸ்டல் திரும்பும் பெண்களிடம் 'பிரச்சனைகள் இருந்தால் சொல்லுங்கள் , ரகசியம் காப்போம் என்று உறுதிமொழிகொடுத்து , கயவர்களை வலைவிரித்துப் பிடிக்கும் பெண்போலீஸ் மிகவும் அவசியம்.
Name : தமிழன் Country : Australia Date :4/19/2017 4:42:09 PM
மகளிர் போலீஸ் இவைகளைத் துப்பறிந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இரவில் ஹாஸ்டல் திரும்பும் பெண்களிடம் 'பிரச்சனைகள் இருந்தால் சொல்லுங்கள் , ரகசியம் காப்போம் என்று உறுதிமொழிகொடுத்து , கயவர்களை வலைவிரித்துப் பிடிக்கும் பெண்போலீஸ் மிகவும் அவசியம்.
Name : arabuthamilan Country : Bahrain Date :4/18/2017 2:36:06 PM
என்னோட ரிலேஷன் பையன்தான், அவனோட மனைவியிடம் பிரச்சினைன்னு சொல்லி கொஞ்சநாள் வந்து தங்கியிருந்தான்,…கதை இப்படி போகிறதா.. நடக்கட்டும் நடக்கட்டும். இந்த பெண்ணோட முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. இது வி(வ)காரமான பொம்பள என்று. புடிச்சி உள்ள போடுங்க.