Add1
logo
நெடுவாசலில் 19-வது நாளாக போராட்டம்: - உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள் (படம்) || தொழிலாளர்களின் இல்லங்களில் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்!: மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி || கொடநாடு கொலை-கொள்ளை விவகாரங்களை உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின் || இருசக்கர வாகனம் பேருந்தில் மோதி விபத்து: மூவர் பலி! || மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துச் செய்தி || தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் தெரிவித்த விவகாரம்; தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு! (படம்) || வெங்கடேஷுக்கு அழைப்பு விடுத்து போஸ்டர்: விவேக்கை ஆதரிக்கும் 30 எம்.எல்.ஏ.க்கள்: EPS-OPS அதிர்ச்சி || குடிதண்ணீரைத் திருடிய தனியார் குடிநீர் நிறுவனம்; வாகனங்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! (படம்) || மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன் || எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி || எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை || 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தலைமறைவு || முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு ||
சிறப்பு கட்டுரை
பழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்
......................................
விவசாயிகளுக்கு ஆதரவாக ஒருமித்த குரல் (வீடியோ)
......................................
பயங்கரவாதிகளின் பிடியில் நெடுவாசலா?
......................................
வாருங்கள் வரவேற்கிறோம்... ஊட்டியில் உங்களை வரவேற்கும் குரங்குகள்
......................................
எத்தனை அமைதிப்படை அமாவாசைகள்! முன்னாள் எம்.எல்.ஏ., கமெண்ட்!
......................................
அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அது வேற வாய்...
......................................
விட்டுக்கொடுப்பாரா? ஆட்சி நீடிக்குமா?
......................................
விஜய் மல்லையா! - கடன், கைது, விடுதலை!!
......................................
லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஆண்கள் அட்டகாசம்!
......................................
தமிழக பெண் கேதன் தேசாய்!
......................................
டி.டி.வி. தினகரன்... அதிர்ச்சியடைந்த இந்திய அரசியல் ஜாம்பாவான்கள்!
......................................
பா.ஜ.க காட்டும் அம்பேத்கர் மாயை! அம்பேத்கர் வேண்டிய புதிய இந்தியா
......................................
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்.கே.நகரில்... திமுக பொதுக்கூட்டம் (வீடியோ)
......................................
டாஸ்மாக் என்கிற மதுக்கடைகளுக்குப் பின்னால் மயங்கிக் கிடக்கும் அரசியல்!
......................................
சாமளாபுரம் போலீஸ் அராஜகம்..! - உருகவைக்கும் நேரடி சாட்சிகள்
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஏப்ரல் 2017 (11:35 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஏப்ரல் 2017 (12:9 IST) 
ருத்துவத்துறையில் இப்படியெல்லாம்கூட ஊழல் செய்யமுடியுமா? என்று மருத்துவ உலகத்திற்கே ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த இந்திய மருத்துவக்கழகத்தின் முன்னாள் தலைவர் கே.டி. எனப்படும் கேதன் தேசாயை தெரியுமா? என்று கேட்டால்,…கோமாவில் இருக்கும் நோயாளிகள்கூட பதறியடித்துக்கொண்டு எழுந்து பதில் சொல்வார்கள். தமிழகத்தில் அவரைப்போல் செயல்பட்டு பெண் கேதன் தேசாயாக… கிறுகிறுக்க வைத்திருக்கிறார் வருமான வரித்துறை ஆப்(பு)ரேஷனில் சிக்கிய டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி.

ஆவணங்கள் எரிப்பு : வீடியோ ஆதாரம்!


கடந்த ஏப்ரல் 7-ந் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டவர்களின் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது வருமானவரித்துறை. பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினாலும் மிக முக்கியமான ஆவணங்களை தனது உதவியாளர் ஷையது பாஷா மூலம் பல்கலைக்கழகத்திலேயே எரித்துவிட்டார் துணைவேந்தர் என்பதுடன், அதற்கு ஆதாரமான வீடியோ காட்சியையும் நம்மிடம் காட்டுகிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர். அந்த வீடியோ காட்சியில் ஒரு ஆணும் பெண்ணும்  சில ஆவணங்களை எரிப்பதுபோன்ற காட்சி இடம் பெற்றிருப்பது தெரிகிறது. அதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகிறது  வருமானவரித்துறை.

வெளிநாட்டு மாணவர்களிடம் ரூ.30 கோடி!

நீட்’ தேர்வு இல்லாமலேயே வெளிநாட்டு (ஈரான்) மாணவர்களை பல் மருத்துவப் படிப்பில் சேர்க்கலாம் என்று பஞ்சாப் நீதிமன்ற உத்தரவு மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டபிறகும்கூட, அனுமதிக்க மறுத்துவிட்டார் துணைவேந்தர் கீதாலட்சுமி. காரணம், 123 மாணவர்களுக்கும் சேர்த்து 30 கோடி ரூபாய் தரவேண்டும் என்று மருத்துவக்கல்லூரி உரிமையாளர்களிடம் பேரம் நடத்தப்பட்டிருக்கிறது. மிரண்டுபோன உரிமையாளர்கள், ‘"மாணவர்களை சேர்த்தால் எங்களுக்கு கிடைக்கும் தொகையை விட பல மடங்கு அதிகமாக கேட்கிறீர்களே?'’என்று பதற... 15 கோடி, 10 கோடி ரூபாய்… என குறைத்து... கடைசியாக 5 கோடி ரூபாயில் வந்து நின்றிருக்கிறார் கீதாலட்சுமி. ஆனால், ஒரு மாணவனுக்கு 1 லட்சரூபாய் வீதம் தருகிறோம் என்று மருத்துவக்கல்லூரி உரிமையாளர்கள் சொல்ல, மாணவர்களை சேர்க்க அனுமதி மறுத்துவிட்டார். இதனால்,  மாணவர்களை சேர்க்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன மருத்துவக்கல்லூரிகள். மேலும், கீதாலட்சுமி ஒரு நர்சிங் கல்லூரிக்கு சிறப்பு அழைப்பாளராக செல்கிறார் என்றால் 1 லட்ச ரூபாய் தரவேண்டும். பல் மருத்துவக்கல்லூரி என்றால் 2 லட்ச ரூபாய், மருத்துவக்கல்லூரியாக இருந்தால் 5 லட்ச ரூபாய் லஞ்சப்படியாக வாங்கிக்கொள்வார் என்று புலம்புகிறார்கள் நர்சிங் மற்றும் மருத்துவக்கல்லூரி உரிமையாளர்கள்.

மோசடியை எதிர்த்த ஐ.ஏ.எஸ்.ஸுக்கு ட்ரான்ஸ்ஃபர்!


மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களுக்கு புதிய கார் வாங்கிக்கொடுக்கப்படும். 2015 டிசம்பர் டாக்டர் கீதாலட்சுமி துணைவேந்தராக பொறுப்பேற்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே பல்கலைக்கழக கவர்னிங் கவுன்சில் தீர்மானத்தின் மூலம் முறைப்படி கறுப்புக்கலர் ஆல்டிஸ் கார் வாங்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்தக் கார் பிடிக்கவில்லை என்ற கீதாலட்சுமி, புதிய கார் வாங்கத் திட்டமிட்டார். அரசு செலவில் புதிய காரை வாங்கவேண்டுமென்றால்… 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட கவர்னிங் கவுன்சில் மூலம் தீர்மானம் நிறைவேற்றி,…பிறகு ஃபைனான்ஸ் கமிட்டியின் அப்ரூவல் பெற்றுதான் வாங்கமுடியும். அதுவும், சுமார் 20 லட்ச ரூபாய்க்குத்தான் துணைவேந்தர்களுக்கு கார் வாங்க தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், டொயட்டா கம்பெனிக்காரர்களை வரவழைத்து யாருடைய அனுமதியும் இல்லாமல் “ஃபோர்ச்சுனர்’’ சொகுசுக்காரை 25 லட்ச ரூபாய்க்கு மேல் விலைகொடுத்து அரசுப்பணத்தில் வாங்குகிறார் கீதாலட்சுமி.மேலும், சில லட்ச ரூபாய்களை செலவு செய்து எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளைப் பொருத்துகிறார்.  அதற்குப்பிறகு, பல்கலைக்கழக கவர்னிங் கவுன்சிலில் அனுமதி கேட்க, “"நீங்க வாங்கியிருக்கிற சொகுசுக் காரை முதலமைச்சரே வாங்கமுடியாது மேடம். அப்படியிருக்கும்போது, அரசாங்கத்தோட அனுமதியில்லாம பல லட்ச ரூபாய் காரை வாங்கினது… அதுல சிவப்புக்கலர் சைரன் பொருத்தினதெல்லாம் கிரிமினல் குற்றம்'’என்று ஃபைனான்ஸ் செகரட்டரிக்கும் அடுத்தநிலையிலுள்ள உமாநாத் ஐ.ஏ.எஸ். அனுமதி கொடுக்க மறுக்கிறார். இதனால், வாக்குவாதமாகி டென்ஷனான கீதாலட்சுமி, தனது ஆதரவாளராக இருந்த முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகன ராவை வைத்து அன்று இரவே உமாநாத் ஐ.ஏ.எஸ்ஸை வேறொரு டம்மி போஸ்டிங்குக்குத் தூக்கியடித்தார். அதற்குப்பிறகு, புதுக்கோட்டையில் இந்த சொகுசுக்கார் விபத்துக்குள்ளாகி அதற்கும் லட்சக்கணக்கில் அரசுப் பணத்தில் செலவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, நிறைய ஆர்.டி.ஐ. கேள்விகள் வர, தற்போது அந்த சொகுசுக்காரை அமைச்சரிடமே ஒப்படைத்துவிட்டாராம் கீதாலட்சுமி.கவர்னரிடமே சீட்டிங்!


அக்டோபர்-26, 27, 28 தேதிகளில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மீட்டிங்கிற்கு செல்ல அனுமதி கேட்டு, ராஜ்பவனிலுள்ள கவர்னர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறார் துணைவேந்தர் கீதாலட்சுமி. "ஓ.கே.'’’ என்று 24-ந் தேதி கவர்னர் அலுவலகத்திலிருந்து பதில் வருகிறது. ஆனால், அக்டோபர்-13-ந்தேதியே ஆஸ்திரேலியாவுக்கு பறந்துவிட்டார் கீதாலட்சுமி. அதாவது, துணைவேந்தர் கீதாலட்சுமியின்  சம்பளம்  சுமார் 1.25 லட்ச ரூபாய். (ஆனால், மாதம் 1.25 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துவிடுவார் என்பது வேறு கதை) சுமார் 15 நாட்கள் சம்பளமான 70,000 ரூபாய் சம்பளத்தை அரசாங்கத்தை நேரடியாகவே ஏமாற்றத் துணிகிறார் என்றால் கிம்பளத்தில் எப்படியெல்லாம் கல்லா கட்டுவார் என்பதுதான் கேள்வி.

கவர்னிங் கவுன்சிலின் அனுமதியில்லாமல் அவர் வெளிநாடு போன காலகட்டத்தில் பதிவாளரை பொறுப்பு துணைவேந்தராக நியமித்துவிட்டு செல்லவில்லை என்பது கூடுதல் குற்றம். ஆனால், கீதாலட்சுமி குறித்து பல்கலைக்கழகங்களின் வேந்தரான கவர்னர் அலுவலகத்துக்கு எந்த புகார் சென்றாலும் கீதாலட்சுமிக்கு உதவியாக இருந்து காப்பாற்றுபவர் டெபுட்டி செகரட்டரி மோகன் என்று கண்சிமிட்டுகிறது கவர்னர் அலுவலகம்.

கேதன் தேசாயுடன் சந்திப்பு!


சினிமா படங்களில் நிழல் உலக தாதாக்கள் ஏதாவது ஒரு இடத்தில் மீட் பண்ணிக்கொள்வதுபோல, மருத்துவ உலகத்தையே அதிரவைத்த மோசடி மன்னன் கேதன் தேசாயை யாருக்கும் தெரியாமல் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் கீதாலட்சுமி. துணைவேந்தர் விடுமுறையில் வெளியூருக்கு செல்கிறார் என்றால் கவர்னிங் கவுன்சிலின் அனுமதியில்லாமல் செல்லமுடியாது. ஆனால், எந்த அனுமதியும் வாங்காமல் கடந்த மார்ச்-18 ந் தேதியிலிருந்து 22-ந் தேதிவரை சவுதி அரேபியாவிலுள்ள ரியாத்தில் நடந்த மெடிக்கல் டீச்சர் கான்ஃபரன்ஸ் மீட்டிங்கிற்கு, கேதன் தேசாய் அழைத்தார் என்பதற்காகவே கான்ஃபிடன்ஷியலாக சென்று வந்திருக்கிறார் கீதாலட்சுமி (கேதன் தேசாயுடன் சவுதி அரேபியாவில் அமர்ந்திருக்கும் படம் காண்க:) இந்த சந்திப்பு குறித்து வருமான வரித்துறையினர் சீரியஸாக இன்வெஸ்டிகேஷன் செய்துகொண்டிருக்கிறார்கள். சேகர் ரெட்டியிடம் பணம் கொடுத்தால்தான் கீதாலட்சுமியிடம் வேலை நடக்கும் என்று நக்கீரனில் எழுதியிருக்கிறோம்.

இந்நிலையில், கீதாலட்சுமி, சேகர் ரெட்டி, ராம மோகனராவ், கேதன் தேசாய் என வருமானவரித்துறையினரின் விசாரணை நீண்டுகொண்டே போகிறது.

மனித உடலுக்குள் ஏகப்பட்ட ரகசியங்கள் உள்ளன என்கிறார்கள் மருத்துவத் துறையினர். அந்த மருத்துவத்துறைக்குள் ஏகப்பட்ட ஊழல் ரகசியங்களைப் பதுக்கியிருக்கிறார் மனிதப் பிறவியான கீதாலட்சுமி.

 -மனோசௌந்தர்
 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : Sathishkumar Date :4/21/2017 8:51:31 AM
நீங்கள் எழுதியிருப்பது ரொம்ப கொஞ்சம்தான். அந்த பொம்பளையின் கொள்ளை ரொம்ப அதிகம். ஆனாலும் அது அசையாது
Name : S.v.rangarajan Date :4/20/2017 1:52:20 PM
படிக்க நெஞ்சே வெடித்து விடும் போல் உள்ளது.சிந்துபாத் Kaddish போல்,இவரிடம் பணம் வாங்கின்ஸ் seat Petra மாணவரிடம் நம் வைத்தியம் பார்த்தால் appapa
Name : Baskaran Country : Australia Date :4/20/2017 8:35:15 AM
இந்த பெண்மணிக்கு முன்பு தலைசிறந்த மருத்துவருக்கான ராய் விருது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டுள்ளத.அனைத்து துறைகளிலும் இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த விருது பெறுபவர்களின் லட்சணம் இதுதான் .
Name : rajan Date :4/18/2017 9:33:42 PM
சுகாதாரத்துறையின் ஜெயா
Name : pathman Country : United States Date :4/18/2017 6:11:43 PM
ஆதாரங்களை எரித்ததை வீடியோ எடுத்த நேரம் அதை பறித்து இருக்கலாமே?தலையை சுத்துது.
Name : டாக்டர் சுரேஷ்பாபு Date :4/18/2017 4:05:03 PM
சினிமா படங்களில் நிழல் உலக தாதாக்கள் ஏதாவது ஒரு இடத்தில் மீட் பண்ணிக்கொள்வதுபோல, மருத்துவ உலகத்தையே அதிரவைத்த மோசடி மன்னன் கேதன் தேசாயை யாருக்கும் தெரியாமல் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் கீதாலட்சுமி. துணைவேந்தர் விடுமுறையில் வெளியூருக்கு செல்கிறார் என்றால் கவர்னிங் கவுன்சிலின் அனுமதியில்லாமல் செல்லமுடியாது. ஆனால், எந்த அனுமதியும் வாங்காமல் கடந்த மார்ச்-18 ந் தேதியிலிருந்து 22-ந் தேதிவரை சவுதி அரேபியாவிலுள்ள ரியாத்தில் நடந்த மெடிக்கல் டீச்சர் கான்ஃபரன்ஸ் மீட்டிங்கிற்கு, கேதன் தேசாய் அழைத்தார் என்பதற்காகவே கான்ஃபிடன்ஷியலாக சென்று வந்திருக்கிறார் கீதாலட்சுமி (கேதன் தேசாயுடன் சவுதி அரேபியாவில் அமர்ந்திருக்கும் படம் காண்க:) இந்த சந்திப்பு குறித்து வருமான வரித்துறையினர் சீரியஸாக இன்வெஸ்டிகேஷன் செய்துகொண்டிருக்கிறார்கள். சேகர் ரெட்டியிடம் பணம் கொடுத்தால்தான் கீதாலட்சுமியிடம் வேலை நடக்கும் என்று நக்கீரனில் எழுதியிருக்கிறோம்.// இதையெல்லாம் ஒழுங்கா விசாரிச்சாலே கீதா லட்சுமிக்கு ஜெயில் கன்ஃபார்ம்
Name : arabuthamilan Country : Bahrain Date :4/18/2017 2:24:17 PM
ஒரு பெண்மணியால் மருத்துவ துறையில் இவ்வளவு சாமர்த்தியமாக (?) சாதிக்க (?) முடியுமென்றால் மேலிருந்து கீழ் மட்டம் வரையிலும் தன்னை எவ்வளவு தூரம் "அடி" பணிய வச்சிருந்து காரியங்களை சாதித்து இவ்வளவு தூரம் பணம் கூட்டு கொள்ளை அடித்திருக்க முடியும். உண்மையில் மிகவும் (எதற்கும்) துணிச்சலான பெண்மணிதான் பாராட்டு (?) வோம்.