Add1
logo
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் || போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது || நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு || கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் || நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை || ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார் || வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை || தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் || போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்) || கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!! || சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) ||
சிறப்பு செய்திகள்
காட்டிக்கொடுக்கும் அரசியல்!
 ................................................................
சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை!
 ................................................................
ஒரு ஜி.பியின் உண்மை மதிப்பு???
 ................................................................
உலகின் முதல் குடியாட்சித் தலைவர்கள்!
 ................................................................
'டன்கிர்க்' பேசிய உண்மைகள்!!!
 ................................................................
இந்தியப் பிரிவினை வலிகள்... ஒரு ஃப்ளாஷ்பேக்!
 ................................................................
தமிழ்ச் சங்கம் டூ காவிச் சங்கம் - பகுதி 2
 ................................................................
அன்புத் தம்பியின் அந்திம நாட்கள்!!
 ................................................................
மர்ம மாத்திரை! சோதனை எலிகளான பெண்கள்..!
 ................................................................
கண்முன்னே இறந்த குழந்தைகள்: கடைசி வரை போராடிய மருத்துவர்!
 ................................................................
ஏம்மா, இதெல்லாம் ஒரு வேலையாமா...???
 ................................................................
பெண் ஓர் உடமை என்பது போல ஓர் மனப்போக்கு தான் இருந்து வருகிறது - நிர்மலா பெரியசாமி..!
 ................................................................
அணுகுண்டு சொம்புடன் அமெரிக்க நாட்டாமை ட்ரம்ப்!
 ................................................................
தனிப்பிரிவல்ல.. ஆணவக்கொலைகளைத் தடுக்கும் சிறப்பு சட்டமே தீர்வு!
 ................................................................
106 ஆண்டுகள் பழமையான பழ கேக் உண்ணும் நிலையில் கண்டுபிடிப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஏப்ரல் 2017 (18:50 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (11:59 IST)


டி.டி.வி. தினகரன்... அதிர்ச்சியடைந்த இந்திய அரசியல் ஜாம்பாவான்கள்!

இந்திய அரசியலில் பெரிய பெரிய ஜாம்பவான்களையே, 'என்ன...? அப்படியா...?' என வாய்ப்பிளக்க வைத்திருக்கிறது திங்கள்கிழமை காலை தொலைக்காட்சிகளில் வெளியான பிரேக்கிங் நியூஸ். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசி, அதில் ரூபாய் 1.30 கோடி முன் பணமாக பெற்றதாகவும், மேலும் பணம் தர தினகரன் தரப்பு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் சுகேஷ் சந்திரா ராவ் என்ற தரகர். தமிழகத்தின் பட்டிதொட்டி, மூளை முடுக்கு என அனைத்து இடங்களிலும் ஒரு மணி நேரத்தில் பரவியுள்ளது இந்த செய்தி. 'அடப்பாவிகளா...' என பொதுமக்கள் கண்டனம் தெரிவிப்பதும் கேட்க முடிந்தது. மேலும், அதிரடியாக சென்னை வந்துள்ள டெல்லி போலீசார், சம்மனை தினரகனிடம் காட்டி விசாரிக்கவும் தயாராக உள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் படு சூடாகவே உள்ளது. 

ஜெ. மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வவம் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. சின்னம் தங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையத்தில் இரண்டு அணிகளும் முறையிட்டது. தேர்தல் ஆணையமோ விசாரணை முடியும் வரை அதிமுக என்ற கட்சிப் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று முடக்கியது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட தினகரன் அணியினர், தங்களது பெயர்களுக்கு ஓட்டு விழாது. சின்னத்துக்குத்தான் ஓட்டு விழும் என்பதை உணர்ந்தனர். இதனால் இந்த அணி இரட்டை இலையை தன்வசப்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்தது. சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை காலை விசாரணைக்கு வரும் நிலையில்,

டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா ராவ் ரூ1.30 கோடி பணத்துடன் பிடிப்பட்டார். சுகேஷ் சந்திரா பெங்களூருவை சேர்ந்தவர். அவருக்கு சொந்தமான ஒரு பி.எம்.டபிள்யூ மற்றும் மெர்ஸ்சிடஸ் பென்ஸ் ஆகிய 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி தினகரன் தரப்பு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்ததாகவும், மேலும் பல கோடி ரூபாய் கொடுக்க தயாராக இருப்பதாகவும் சுகேஷ் சந்திரா தெரிவித்ததாக டெல்லி குற்றப்பிரிவு துணை ஆணையர் மதுர் வர்மா கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் கூறியுள்ளார்.இந்திய அரசியலில் பெரிய பெரிய ஜாம்பவான்களையே, வாய்ப்பிளக்க வைத்திருக்கிறது தரகர் சுகேஷ் சந்திரா கூறியுள்ள தகவல். ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மற்ற மொழி தொலைக்காட்சிகளிலும் பெரிய பிரேக்கிங் நியூஸ் இதுதான். 

ஏற்கனவே தேர்தல் ஆணைத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திற்கே தற்போது லஞ்சம் கொடுக்க முயன்றதாக வெளியான விவகாரம், இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அவர்களும் தேர்தல் ஆணையத்தின் பெயரை காப்பாற்ற இந்த விஷயத்தை சும்மா விடக் கூடாது என கூறியுள்ளார்களாம்.

இந்த விவகாரம் தொடர்பாக தினகரனை விசாரிக்க டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சென்னை வந்துள்ளார்களாம். சம்மனை காட்டி அதிரடி விசாரணை செய்ய தயாராக உள்ளனர்.

காலையில் பெங்களுரு சிறையில் உள்ள தனது சித்தி சசிகலாவை சந்திக்க புறப்பட்ட தினகரன் செய்தியாளர்களிடம், தான் யாருக்கும் எந்த லஞ்சமும் கொடுக்கவில்லை, சுகேஷ் சந்திரா என்பவர் யார் என்றே தெரியாது, சம்மனை ஏற்று டெல்லி குற்றப்பிரிவு போலீசாரிடம் ஆஜராகி சட்டப்படி இந்த விவகாரத்தை சந்திப்பேன் என தினகரன் கூறினாலும், மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெ. மறைவுக்கு பின்னர் அதிமுகவில் தனி ஒரு மனிதருக்கு செல்வாக்கு இல்லை என்பதை அறிந்த இரண்டு அணியும் இரட்டை இலை சின்னத்தை பெற முட்டி மோதிக்கொள்கிறது. 

-ராஜவேல்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : y Country : Indonesia Date :4/18/2017 10:42:47 AM
இதுவரை ஓட்டு போட்டு சின்னத்தை காப்பாற்றி வந்த அடிமட்ட தொண்டர்கள்தான். nakeera enna achu unakku ?
Name : Inthiyan Date :4/18/2017 7:31:19 AM
தமிழர்களே சகோதர சகோதரிகளே . இனியாவது கண்மூடித்தனமாக தனிமனித துதி பாட வேண்டாம் . உங்களை இந்த அளவுக்கு தரம் தாழ்த்தியது இந்த திராவிடக் காட்சிகள்.இனியும் வேண்டாமே. கொஞ்சம் மாறி சிந்திப்போமே. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை மாற்றுங்கள். நாம் தமிழர் நாமே தமிழர்.