Add1
logo
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் || போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது || நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு || கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் || நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை || ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார் || வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை || தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் || போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்) || கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!! || சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) ||
சிறப்பு செய்திகள்
காட்டிக்கொடுக்கும் அரசியல்!
 ................................................................
சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை!
 ................................................................
ஒரு ஜி.பியின் உண்மை மதிப்பு???
 ................................................................
உலகின் முதல் குடியாட்சித் தலைவர்கள்!
 ................................................................
'டன்கிர்க்' பேசிய உண்மைகள்!!!
 ................................................................
இந்தியப் பிரிவினை வலிகள்... ஒரு ஃப்ளாஷ்பேக்!
 ................................................................
தமிழ்ச் சங்கம் டூ காவிச் சங்கம் - பகுதி 2
 ................................................................
அன்புத் தம்பியின் அந்திம நாட்கள்!!
 ................................................................
மர்ம மாத்திரை! சோதனை எலிகளான பெண்கள்..!
 ................................................................
கண்முன்னே இறந்த குழந்தைகள்: கடைசி வரை போராடிய மருத்துவர்!
 ................................................................
ஏம்மா, இதெல்லாம் ஒரு வேலையாமா...???
 ................................................................
பெண் ஓர் உடமை என்பது போல ஓர் மனப்போக்கு தான் இருந்து வருகிறது - நிர்மலா பெரியசாமி..!
 ................................................................
அணுகுண்டு சொம்புடன் அமெரிக்க நாட்டாமை ட்ரம்ப்!
 ................................................................
தனிப்பிரிவல்ல.. ஆணவக்கொலைகளைத் தடுக்கும் சிறப்பு சட்டமே தீர்வு!
 ................................................................
106 ஆண்டுகள் பழமையான பழ கேக் உண்ணும் நிலையில் கண்டுபிடிப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, ஏப்ரல் 2017 (10:52 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஏப்ரல் 2017 (11:26 IST)


பா.ஜ.க காட்டும் அம்பேத்கர் மாயை!
அம்பேத்கர் வேண்டிய புதிய இந்தியாஅம்பேத்கர் - ஒரு பெயர் அல்ல... ஒரு வரலாறு. டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா, வளர்ச்சி இந்தியா என்ற கோஷங்கள் எழுப்பப்படுகிற இப்போதைய சூழலில், இந்தியாவில் வேரோடி இருக்கும் சாதிக்கு எதிரான ஒரு போர்க்குரலாய் எழுந்து... சாதிகளற்ற இந்தியாவை படைக்க நினைத்த ஒரு மாபெரும் புரட்சியாளர் அம்பேத்கர். பிறப்பின் அடிப்படையிலான அடுக்குமுறை சாதிகளாய் இந்தியா பிரிந்துகிடக்க, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்குமுறை தலைவிரித்து ஆடுகிற நிலையில்... இதை ஒழித்துகட்டுவதையே தன் வாழ்நாள் பணியாக நினைத்து அதற்காக தன்னையே அற்பணித்தார் அம்பேத்கர்... ஒடுக்கப்பட்டவர் விடுதலை, உழைக்கும் மக்களுக்கான கல்வியறிவு, எளிய மக்களின் கைகளில் அதிகாரம்,  சாதிகள் இல்லாத இந்தியா... இதுவே அம்பேத்கர் விரும்பிய புதிய இந்தியா! 

இன்றைய நிலையில்... ஒரே இந்தியாவை படைக்கப் போகிறோம் என்று பெரும்பாண்மை வாதம் பேசும் காவி நிறத்தவர்கள் அம்பேத்கரை தங்களுக்கானவராக நினைப்பதும், அவரைக் கட்டியணைத்து களிப்படைவதும் வினோதமாகவே இருக்கிறது. அம்பேத்கர் எல்லோருகுமானவர்... அவருக்கு யார் வேண்டுமானாலும் மாலை போடலாம், யார் வேண்டுமானாலும் அவரைக் கொண்டாடலாம். ஆனால், பிற்போக்குத்தனமான மத நம்பிக்கைகளை அவர் ஏற்றது போல ஒரு மாயையை உருவாக்க நினைப்பது ஏமாற்று வேலை என்பதே முற்போக்காளர்களின் கருத்து.

அம்பேத்கர் இந்து மதத்தை ஆதரித்தாரா?

1935ஆம் ஆண்டு அம்பேத்கர் நாசிக் மாவட்டம், யேவலா என்ற இடத்தில் நடந்த மஹர் இனத்தவரின் மாநாட்டில், “இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என நான் எண்ணுவதற்குக் காரணம். துரதுர்ஷ்டவசமாக தீண்டாமை எனும் கறையுடன் பிறந்துவிட்டேன். அது என் தவறன்று. ஆனால், நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன். இவ்வாறு செய்வது என் சக்திக்குட்பட்டதாகும்”  என்று பேசினார்.

2லட்சம் மஹர் இனமக்களோடு புத்த மதத்திற்கு மாறினார் அம்பேத்கர். பௌத்த மதத்தை ஏன் அம்பேத்கர் விரும்பினார். ஏன் இஸ்லாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ தேர்வுசெய்யவில்லை... என்பதற்கு காரணங்களும் உண்டு. புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூக நோக்கமும் அம்பேத்கரை மிகவும் ஈர்த்தன. "இயற்கையைக் கடந்த தத்துவத்தை புறக்கணிப்பதில் புத்தருக்கு மூன்று நோக்கங்கள் இருந்தன. அவருடைய முதல் நோக்கம், மனிதனை பகுத்தறிவு பாதையில் வழிநடத்துவது, அவருடைய இரண்டாவது நோக்கம் உண்மையைச் தேடிச்செல்ல மனிதனை சுதந்திரமானவனாக்குவது, அவரது மூன்றாவது நோக்கம், மூடநம்பிக்கைகளின் பலமாக மூலத்தை - எதையும் தீர விசாரித்தறியும் உணர்வைக் கொல்லும் தன்மையை... தகர்த்தெறியது. பௌத்தம் என்பது பகுத்தறிவின்றி வேறல்ல..." என்று சொன்னார் அம்பேத்கர்.

அம்பேதகரின் பௌத்த மதமாற்றம், பார்ப்பன அடிப்படையிலான இந்துமதத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தும் அளவுக்கு வெற்றியடையவில்லை என்றே சொல்லலாம். புத்தர் திருமாலின் இன்னொரு அவதாரம் என்ற இந்துத்துவ வாதிகளின் ஏற்கமுடியாத பிரச்சாரமும், சிலைகள் வழிபாடு, தியான முறைகள் என பிற்போக்குத்தனங்கள் புத்த மதத்தில் பின்னாளில் வளர்ந்து வந்ததுமே இதற்கு காரணமாக இருக்கலாம். 
 
 
அம்பேத்கர் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று எங்காவது சொன்னாரா?

உலகெங்கும் உணவுப் பழக்கத்தில் சைவம், அசைவம் என்று இரண்டு வகைதான் உள்ளது. ஆனால், இந்தியாவில் தான் சைவம், அசைவம், அசைவம் உண்பவர்களில் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்ற மூன்று வகையான உணவுப்பழக்கம் உள்ளது. மாட்டிறைச்சியில் புரதச்சத்து அதிகம் இருப்பதாலும், பொருளாதார அடிப்படையில் எளியமுறையில் கிடைப்பதாலும் அது உழைக்கும் மக்களின் உணவாக உள்ளது. இதை சாதியோடும் மதத்தோடும் முடிச்சுப் போடுகிறார்கள் காவிப்பிரியர்கள்.

சரி, இதில் அம்பேதகர் சொல்வது என்ன? 1927 மார்ச் 19, 20ல் கொலாபா மாவட்டத் தீண்டப்படாத மக்கள் மாநாட்டில் அம்பேத்கர், இறந்த விலங்குகளின் உடல்களைச் சாதி இந்துக்களே புதைத்துக் கொள்ளவேண்டும். தனியான சட்டத்தின்மூலம் இறந்த விலங்குகளின் புலாலைத் தீண்டப்படாதவர்கள் உண்பதைத் தடை செய்யவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். மாடு உட்பட எந்த இறந்த விலங்குகளையும் உண்ணவேண்டாம் என்று அம்பேதகர் சொன்னது, இறந்த விலங்குகளின் இறைச்சி உடல்நலத்திற்கு நல்லதல்ல, உயிருள்ள விலங்கைக் கொன்று அதன் இறைச்சியை உண்பதே நல்லது என்ற எண்ணத்துடன் தானே தவிர வேறல்ல.
தலித் மக்கள் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு எப்படி வந்தார்கள் என்பதையும் அம்பேத்கர் விரிவாக பதிவு செய்துள்ளார்.

ஒரே தேசம், ஒரே மொழி என்ற கொள்கையை அம்பேத்கர் ஏற்றாரா?

மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்ததும் “இந்தியா ஒரே தேசம்”, என்ற பாசிசக் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இந்தியாவை ஒரே தேசமாக மாற்றுவதற்கு அம்பேத்கர் ஒரு வழியைச் சொல்கிறார். 1949 நவம்பர் 11ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையின் இறுதிக்கூட்டத்தில், “இந்திய தேசம்” என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசம் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள். பல ஆயிரம் சாதியினராக பிளவுப்பட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசமாக மாற முடியும்? இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. சாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாறவேண்டுமானால், சாதிகளை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்  அம்பேத்கர்.

சாதி மறுப்பு திருமணம் செய்யும் காதலர்களை வெட்டி சாய்க்கும் ஆணவக் கொலைகள் தொடர்ந்து வரும் சமூகத்தில்... சாதிகளை ஒழித்து சமத்துவமான சமூகத்தை படைக்கும் போதே அம்பேத்கர் உங்கள் மரியாதையை ஏற்றுக்கொள்வார். பல ஆயிரம் ஆண்டுகளாய் வேர்விட்டு விரிந்துகிடக்கிறது சாதி.  சாதிக் கலவரங்களில் இன்றும் குடிசைகள் கொளுத்தப்படுகின்றன. சாதிய பாகுபாடுகளால் கல்வி நிலையங்களில் தற்கொலைகள் தொடர்கின்றன... சுப நிகழ்வுகள் முதல் சாவு நிகழ்வுகள் வரை சடங்குகளில் சாதி இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.  பல இடங்களில் கூண்டுக்குள் நிற்கும் அம்பேத்கரே அதற்கு சாட்சி. சாதியின் பெயரால் அடைக்கப்பட்டிருக்கிற அம்பேத்கரின் கூண்டு என்று தகர்க்கப்படுகிறதோ அப்போதே சமூகம் மாற்றமடையும். அப்போதுதான் அம்பேத்கர் விரும்பிய புதிய இந்தியா பிறக்கும்.

- பெலிக்ஸ் இன்ப ஒளி
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : pathaman Country : United States Date :4/18/2017 6:14:23 PM
அம்பேத்கர் இந்த பெயரே ஊரு இந்து பிராமணாள் கொடுத்தது.படிக்க வைத்து முன்னிலை படுத்தியது பிராமணர்.படித்து பாருங்கள் அவரின் சரித்திரத்தை.
Name : prema Country : Indonesia Date :4/17/2017 9:22:22 PM
இந்த முட்டாளினால் இன்று கோட்டா என்ற கேவலமான சலுகை பெற்று திறமையற்ற கூட்டம் அரசு பணிகளை லஞ்ச காடாக மாற்றியதுதான் சாதனை .
Name : Gokul Date :4/15/2017 2:15:32 PM
Why don't you write about Dr Ambedkar comments on islam
Name : velan Date :4/14/2017 2:15:44 PM
எதிர்க்க முடியாதவற்றை அரவணைத்து அழிப்பதே ஆரியத்தின் வேலை. புத்த இயக்கத்தில் ஊடுருவி மகாயானப் பிரிவை உருவாக்கி இந்தியாவில் புத்த மதத்தின் செல்வாக்கைக் குறைத்தார்கள். அதேபோல், அம்பேத்கரை அரவணைத்து அவரது கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது.
Name : Ramakrishnan Country : Indonesia Date :4/14/2017 2:07:09 PM
மகத்தான மனிதர்! போற்றுதலுக்கு உரியவர்!