Add1
logo
பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு வேல்முருகன் வேண்டுகோள் || அமைச்சருக்கு ஆதரவாக மீனவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது!ராமதாஸ் || வேளாண்துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போவதா?- கி.வீரமணி || விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் பிரிவினர்! || விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்? || மக்கள் மன்றத்தில் மோடி பதில் சொல்லியே ஆகவேண்டும்: விஷால் தரப்பு ஆவேசம் || விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நிறைவு || கண் முன்னே தீக்குளிக்க முயற்சி: எடப்பாடி, ஓ.பி.எஸ். அதிர்ச்சி || ஜெயகுமார் ஒரு சூப்பர் முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: ஸ்டாலின் || நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை || விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி! || பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக புகார் ||
சிறப்பு செய்திகள்
சேருமிடம் : அரசியல்... வழி : மெர்சல்
 ................................................................
தேர்தலில் போட்டியிட திமுக முடிவு செய்தது ஏன்?
 ................................................................
பாஜக வச்சா குடுமி.. சிரைத்தால் மொட்டையா?
 ................................................................
ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையம்
 ................................................................
மெர்சலான பாஜக..!
 ................................................................
சென்னைக்கு அத்தோ ! தஞ்சைக்கு கவுசா !
 ................................................................
'ப்ளூவேலை' மிஞ்சும் மரண விளையாட்டுகள்!!!
 ................................................................
திருவாடானை அருகே மேல அரும்பூரில் சேதுபதிகள் கால சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
 ................................................................
திமுக தேர்தல் புறக்கணிப்பும்
 ................................................................
வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை
 ................................................................
கடவுளின் தேசத்தில் தீபாவளி..
 ................................................................
மெர்சல் காட்டும் மேஜிக் மேன்!!!
 ................................................................
நான் விரும்பி வெடிக்கும் வெடி...
 ................................................................
அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி!
 ................................................................
ரஜினி, சொல்லும்போது சொல்லிட்டு இப்போ முழிக்கிறாரு!!!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஏப்ரல் 2017 (11:45 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஏப்ரல் 2017 (14:11 IST)


டாஸ்மாக் என்கிற மதுக்கடைகளுக்குப் பின்னால் மயங்கிக் கிடக்கும் அரசியல்!



அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதை சமூகத்தின் மீது அக்கறையுள்ள அவன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். மனித குலத்திற்கு எதிராய் தங்கள் பகுதிக்குள் கொண்டு வந்து இருக்கும் மதுக்கடை ஒன்றை மூட வேண்டும் என்று அறவழியில் காலை முதல் மாலை வரை போராடிக் கொண்டிருந்தார்கள் திருப்பூரின் சாமளாபுரம் பொதுமக்கள். அதுதான் அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாக காக்கிகள் மாற்ற முடிவெடுத்து இருந்தார்கள். அதை அவர்கள் அமல்படுத்தும் நேரத்தையும் முன்கூட்டியே கணக்கிட்டும் விட்டார்கள்.

அவர்கள் கணக்கிட்ட  நேரமும் வந்துவிட்டது. ஒரு கண்ணிமைக்கும் நேரம்தான். பொதுமக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களி லெல்லாம் கம்புகளைச் சுழற்றி பொது மக்களுக்கு ‘அடிகளை’தானமாய் கொடுக்கும் ‘காக்கி உடை தரித்த கணவான்கள்’ இங்கேயும் அதே போல ‘கணவான்கள்’ ஆகிவிட்டார்கள்.




கண்ணில் பட்ட எல்லோர்  உடல்களின் சதைகளையும் காக்கிகளின் கம்புகள் பிய்த்தெடுத்தன. தெருவெங்கும் அலறல் சத்தம். பெண்களுக்கு பிரத்தியகமாய் கன்னத்தில் அறைகள்  விழுந்தன. ஆண்களுக்கு ‘லத்தி யோகம்’ கிடைத்தது. ‘ஒரு போர்க்களம் போல’... என எழுதுவது இங்கே நியாயமாகாது. நிராயுதபாணியாக நின்ற அம்மக்களின் மீது லத்திகளை  மட்டுமல்ல. அம்மக்களை மிரட்ட காக்கி ஒருவன் துப்பாக்கி ஒன்றை லோடு செய்து மிரட்டிய அதிகார அசிங்கமும் அங்கே நடந்தேறிக் கொண்டிருந்தது.

காக்கிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு அந்த மக்களிடம் என்னவிருந்தது? அடிதாங்க முடியாமல் வேகமெடுக்கும் கால்களும் வலிதாங்க முடியாமல் குரல் எழுப்பும் வாயும் தரையில் சிந்துவதற்கு ரத்தத்தையும் தவிர அவர்களிடம் ஒன்றும் இல்லை. அது ‘போர்க்களம்’ இல்லை. அதிகாரப் பித்து பிடித்தவர்கள் தாங்கள் யார் என்று காட்டும் ‘உச்சக்களமாகவே’ இருந்தது அது. அந்த இடம் அப்படி ஆகி இருக்கக் கூடாதுதான். ஆனால் அந்த இடம் அப்படி ஆனதை அவன் கண்ணீர் கொட்ட... காட்சிகளை சேமித்துக் கொண்டிருந்தான்.


 

பொதுவாய் எல்லோருக்கும் எழும் சந்தேகங்களையே அவனும் தனக்குள்ளாக எழுப்பிக் கொண்டிருந்தான். அரசாங்கம் என்கிற இயந்திரம் ஒன்று யாருக்காக சுழல வேண்டும்? மக்களுக்காத்தானே. ஆனால் அந்த மக்களை ஏன் அந்த இயந்திரம் மக்களை உள்ளிட்டு தன் மனம் போன போக்கில் வன்மமெடுத்து அரைக்கிறது? எது தங்களுக்கு வேண்டாமென்று நாட்டு பிரஜைகள் சொல்லும் போது, அதை ஆமோதித்து செயல்பட  வேண்டிய அரசு அவர்களின் கோரிக்கையை  ஏன் காலில் போட்டு மிதிக்கிறது?
 
இருட்டு முடிந்ததும் வீழ்ந்துவிடும் விட்டில் பூச்சிகளைப் போல இங்கே ஒவ்வோர் இரவும் மதுவருந்தி மனித உயிர்கள் வீழ வேண்டாம் என அம்மக்கள் நடத்தும் போராட்டங்கள்  ஏன் அடக்கி ஒடுக்கப்படுகிறது? பணம் என்ற காகிதம்தான் இந்த மதுக்கடைகளுக்குப் பின்னால் மனித உயிர்களைப் பணயம் வைத்து,  இந்த அரசை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதால் தானே?! 

‘இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் நாசமாய்ப் போனாலும் சரி’. ‘நாட்டின் அதிகார மையம் கொண்ட எங்கள் நலனும், எங்கள் குடும்பதினர்  நலமும்   மட்டும் உயிரோடும், செழிப்போடும் இருந்தால் மட்டுமே போதும்’ என்கிற சுயநல பொது புத்தி தானே காரணம்? நாட்டை ஆளும் கட்சியின் முதல்வராக இருந்து  மறைந்து போன அந்தப் பெண்மணி, 2011-ல் ஆட்சி பீடம் ஏறிய அடுத்த சில தினங்களிலேயே தன் கீழ் இருக்கும் மக்களுக்கு பரிசொன்றை அறிவித்தார். அதாவது, அரசு கஜானா காலியாய்க் கிடக்கிறது. அதனால் ஏழைகள் பருகும் மதுபாட்டில் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் விலையை உயர்த்துவதாகவும், ஐந்து ரூபாயை ஏற்றினாலே ஆண்டு ஒன்றுக்கு ரூ.800 கோடி; ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.4000 கோடி அரசுக்கு வருமானமாய்க்  கிடைக்கும் என்று கோடிகளில் கணக்கிட்டு நாட்டு மக்களின் கல்லீரல்களையும், கிட்னிகளையும் ஏற்கனவே விலை பேசிப் போய்விட்டார். அவரைப் பின்பற்றித் தொடரும் இந்த அரசாங்கம் நாட்டு மக்களின் உயிரையும் உடற்பாகங்களையும் எடுக்காமலா இருப்பார்கள்?! 




நீதிமன்றம் உத்தரவு இட்டதற்கு பின்னரே, மதுக்கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து மூடி முத்திரை இடுவது போல் காட்டிக்கொண்டு, ஊருக்குள் ஒரு விஷப் பாம்பென ஊடுருவ நினைக்கும் இந்த அரசை தட்டிக் கேட்டால் கிடைப்பது தடியடி தான். இனிமேல் மதுக்கடைகளை இந்த அரசு மூடவே மூடாது என்பது திட்டவட்டமாய் மற்றவர்களைப் போலவே அவனுக்கும் தெரிந்தும் விட்டது.
 
மாவட்ட ஆட்சியர் உத்தரவு இடுகிறார். அதனால் நாங்கள் மதுக்கடைகளை திறக்க ஊருக்குள் இடம் பார்க்கிறோம் என்கிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள். எதற்கு மற்ற இடங்களில் டாஸ்மாக் கடையைத் திறக்க இடம் பார்க்க வேண்டும்? பொதுமக்கள் எதற்காக போராட வேண்டும்? செய்தியைப் படம் பிடிக்கப் போகும் செய்தியாளர்கள் நாங்கள் ஏன் அங்கு தாக்கப்பட வேண்டும்? அதற்கு பேசாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயே அரசு அலுவலகங்கலுக்குள்ளேயே மதுக்கடைகளை திறந்து விடலாமே என்று தாக்கப்பட்ட கோவை பத்திரிகையாளர்கள், மாவட்ட ஆட்சியரைப் பார்த்து மனு கொடுக்க இருப்பதாக உறுதிபடச் சொல்வதையும் அவன் பார்த்துக் கொண்டுதானிருக்கிறான் . 

அவர்கள் கூற்றினுள் மெல்ல இழைந்தோடும் கேலித்தனமும், அவனுக்கு சரியென்றே படுகிறது. அவன் போராடும் மக்களுக்காக என்றோ எழுதிய கவிதையை நினைவூட்டிக் கொள்கிறான். இப்போது ஆளும் அரசுக்கு அந்தக் கவிதை பொருத்தமானதாகவே இருக்கிறது..



அந்தக் கவிதை...

அறநெறிகள் கோரும் கழுதைகள்

அறநெறிகளற்ற தெருவில் நின்று
நியாங்களை கோரிக் கொண்டிருப்பவர்கள்-
கோவேறு கழுதைகள் என 
அடையாளமிட்டுப் போகிறான் 
அத்தெருவில் வசித்திருப்பவன்..

விதிக்கப் பட்டதிற்கெதிராய் 
மாற்றுக் குரலோன்றில் 
கழுதைகள் கோஷித்திருப்பது- 
அத்தெருவுக்கு 
அறவே பிடிக்கவில்லை..

நியாங்களில் நம்பிக்கை கொண்டிருந்த 
கழுதைகளோ கோஷித்து கோஷித்து- 
ரத்தம் கக்கி மடிவது 
அத்தெருவில் ஓர் அன்றாட நிகழ்வாகி விட்டது..

நிகழ்த்தப் பட்ட கொலைகளின் மீது 
தற்கொலையின் வர்ணங்களை 
நேர்த்தியாய் தீட்டுகிறவன்- 
அத்தெருவின் அடுக்கு மாடி சன்னலில் இருந்து 
கழுதைகளின் ஓலத்தை 
கை கொட்டி ரசித்திருக்கிறான்.

அவ்வக்கிரச் சிரிப்பு-
அவ்வறையில் இருந்து வெளியேறி 
உலகம் முழுதும் 
ஓர் கொடிய நோயாய் 
பரவிக் கொண்டு விட்டது..

அறநெறியைக் கோரியிருந்தவைகளும்- 
உலகெங்கும் பெருகி 
ரத்தம் கக்கி மடிய 
அதையோர் அன்றாட நிகழ்வென 
ஆக்கிவிட்டது உலகமும்.

அருள்குமார், கோவை


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : senthil Country : Indonesia Date :4/17/2017 5:59:22 AM
இட்ஸ் எ ட்ரு ஆர்டிக்கள் . ஐ பீல் தட் ஸ்டோரி