Add1
logo
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு ஒத்திவைப்பு || அமிர்தசரஸ் ஏர்போர்ட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது || அமைதிப்படையின் 2 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. விருது || கேரள முதல்வரை பாராட்டிய - கமல்ஹாசன் || சென்னையில் கொளுத்தும் கோடை வெயில்! (படங்கள்) || மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி - இருவர் கைது || காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு || கோவில் திருவிழாவில் கலவரம் வெட்டு காயங்களுடன் 10, க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதி || இடிதாக்கி பசு மாடு பலி || மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு || கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு || பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு || ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவன் நீரில் முழ்கி பலி ||
சிறப்பு கட்டுரை
அஜித் - அத்தனை நடிகர்களும் உச்சரிக்க காரணம் என்ன?
.............................................
ஸ்மார்ட் க்ளாஸ்... மாணவர்கள் கையில் டேப்லட்... ஆஹா... அரசுப் பள்ளியா இது..?
.............................................
சட்ட மாணவியின் ‘நறுக்’ தண்டனை: படத்தில் நடந்தது நிஜத்தில்!
.............................................
ரேன்சம்வேரா... உலகப்போரா??? வெளியே வந்த அமெரிக்க வைரஸ் பூதம்!
.............................................
ஒருத்தி! இன்னொருத்தி! வேறொருத்தி! பாலு மகேந்திரா ஒரு படிப்பினை!
.............................................
மே 21 இராஜிவ்காந்தி படுகொலை நாள்!
.............................................
தோண்டியெடுக்கப்பட்ட தமிழனின் பெருமை..!
.............................................
கழுகைப் பார்! உன்னை மாற்று! உருமாறு! -மாணவர்களுக்கான பொன்ராஜ் உரை!
.............................................
சென்னையில் உச்சகட்ட வெயில்! வெதர்மேன் விடும் அலர்ட்
.............................................
கச்சிதமாகப் பொருந்திய ‘கள்ளபார்ட்’ வேடம்! நடிக்கும் போதே உயிரை விட்ட நடராஜன்!
.............................................
முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம்! என்ன சொல்கிறது எஸ்மா?
.............................................
இளைப்பாறும் இரும்பு மனம்! கொடைக்கானலில் இரோம் ஷர்மிளா!!
.............................................
ஐடி லே ஆஃப்.. உறங்கும் அரசு.. உறைந்து கிடக்கும் ஊழியர்கள்!
.............................................
ரஜினியின் அரசியல் நெருப்பு?
.............................................
முக்கியமான மூன்று குற்றச்சாட்டுகள்... ரசிகர் கோர்ட்டில் ரஜினியின் வாக்குமூலம் !!!
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஏப்ரல் 2017 (18:10 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஏப்ரல் 2017 (18:10 IST)


சாமளாபுரம் போலீஸ் அராஜகம்..! 
- உருகவைக்கும் நேரடி சாட்சிகள்

குடிகெடுக்க வந்த குடியால் தமிழ்நாடே இப்போது போர்க்களமாகி இருக்கிறது.. அண்மைய கோலம், திருப்பூர் மாவட்டத்தில் சோமனூரை அடுத்த சாமளாபுரத்தில் அப்பாவிப் பெண்களை போலீசு அதிகாரியான பாண்டியராஜன் என்பவர், கிரிமினலைப் போல தாக்கியது! 

குறிப்பிட்ட அந்த அதிகாரிதான் பிரச்னை செய்பவரா? அவர் ஒருவரால்தான் சாமளாபுரம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி, ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டு, ஒருவருக்கு காது கேட்காமல்போனதா? மற்ற ஐந்து பேருக்கு படுகாயம் ஏற்பட்டதா? 

“இல்லவே இல்லை” என்கிறார்கள், சாமளாபுரம் போராட்டக்களத்தில் நின்றவர்கள். நடந்தது என்ன எனக் கேட்டதற்கு, நம்மிடம் அவர்கள் விவரித்தது இதுதான்!

” சாமளாபுரத்துக்கும் அருகிலுள்ள கருமத்தம்பட்டிக்கும் இடையில் நெடுஞ்சாலைப் பகுதியில் மட்டுமே 9 அரசு மதுக்கடைகள் இருந்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் அண்மையத் தீர்ப்பால் மூடப்பட்ட இந்தக் கடைகளுக்குப் பதிலாக, மக்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலும் விசைத்தறியும் விவசாயமும் நடந்துவரும் இந்தப் பகுதியில், குடியிருப்புப் பகுதிக்குள் மதுக்கடைகள் வந்தால் மோசமான பாதிப்பு ஏற்படும் என அப்பகுதியின் ஆண்களும் பெண்களுமாக கடும் அதிருப்தி அடைந்தனர். 

இதற்கிடையில் சூலூரில் இதைப்போலவே குடியிருப்புப் பகுதிக்குள் அமைக்கப்பட்ட மதுக்கடையை, போராட்டம் நடத்தி முறியடித்தது, எலச்சிபாளையம் பிரபாகரன் என்பவர் தலைமையிலான சமூக ஆர்வலர் குழு. ( இந்த பிரபாகரன் எனும் இளைஞரைத்தான் முன்னர் சுற்றுச்சூழல் ஆதரவுக்காகப் போராடியபோது, போலீசு கடுமையாகத்தாக்கியது என்பது நினைவுக்குரியது.) பிரபாகரன் உட்பட்ட சமூக ஆர்வலர்கள் சாமளாபுரத்திலும் மதுக்கடைக்கு எதிராகப் போராடவருமாறு மக்களுக்கு அழைப்புவிடுத்தனர். 

சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலுக்குப் போகும் வழியில் தனியார் பயிர்நிலத்தில் அரசு மதுக்கடையானது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலை 8 மணியிலிருந்தே சாமளாபுரம் திருப்பூர் சாலையில் மக்கள் திரண்டனர். ஆண்கள் ஆங்காங்கே குழுக்குழுவாகவும் பெண்கள் திரண்டும் ஆக்ரோசத்துடன் மதுக்கடைக்கு எதிராக முழக்கமிட்டனர். மக்களின் போராட்டம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கையிலேயே மதியம் 12 மணியளவில் மதுக்கடையைத் திறந்து வியாபாரத்தையும் தொடங்கினார்கள். போராட்டத்தில் இருந்த பொதுமக்களிடம் இது ஆவேசத்தை உண்டாக்கியது. இதற்கிடையில் பண்ணாரி கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுவந்த அதே சூலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜை, மக்கள் சூழ்ந்துகொண்டு காரிலிருந்து அவரை இறக்கிவிட்டனர். 

கீழே இறங்கிய அவர், அங்கிருந்தபடியே ஆட்சியருக்கும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அந்தப் பக்கமிருந்து அவருக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. அதை ஒப்புக்கொள்வதைப் போல, அவரே அங்கிருந்த மக்களிடம், ‘குடிநீர்ப் பிரச்னை போன்றவற்றை என்னால் தீர்த்துவைக்கமுடியும். இதில் நடந்ததைத்தான் நீங்கள் பார்த்தீர்களே’ என்று கூறினார். இந்த மதுக்கடையை மூடாவிட்டால் என் பதவியைவிட்டே விலகிவிடுவேன் என்று வந்திருந்த ஊடகத்தினரிடம் பேட்டி கொடுக்கவும் செய்தார். சொன்னவர் காருக்குள் போக... சுற்றியிருந்த மக்கள் கொதித்துப் போனார்கள். அப்போது அங்கு நிலவிய வெப்பநிலை 103 டிகிரி என்றால், மக்கள் பாராட்டு மழையா பொழிவார்கள்?

மக்களின் எதிர்ப்புக்குரல்களால் அப்படியே எழுந்து பக்கத்திலுள்ள குளிர்பானக் கடைக்குள் போய் உட்கார்ந்துகொண்டார். எங்களுக்கு என்ன பிரச்னைனாலும் வருவதாகச் சொல்லிவிட்டு, தேர்தலுக்குப் பிறகு இப்போதுதான் வருகிறீர்களே என்று இன்னொரு கோபமும் அந்த மக்களிடமிருந்து வெளிப்பட்டது. எவ்வளவு குறைவாக இருந்தாலும் 2 ஆயிரம் பேராவது இருப்பார்கள் என்ற நிலையில், எக்குத்தப்பாக எதுவும் நடந்துவிடக்கூடாது என போலீசு அதிகாரிகள் அங்கு வந்தனர். 

மக்களின் உணர்வுக்கும் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜுக்கும் ஒத்துவரவே இல்லை. கனகராஜின் மனைவியை அவர் வந்த காரிலேயே வீட்டுக்கு அனுப்பிவைத்த போலீசார், அவரை போராட்டக் களத்திலிருந்து பாதுகாப்பாக அனுப்பும் வேலைகளில் இறங்கினார்கள். 4 மணியளவில் அங்கு வந்த வட்டாட்சியர் பிரச்னைக்குரிய இடத்தில் திறக்கப்பட்ட கடை மூடப்படும் என வாய்மொழியாக உறுதி கொடுத்தார். அந்த சமயம்கூட அந்தக் கடையில் பரபரப்பாக விற்பனை நடந்துகொண்டிருந்தது. இதனால் எரிச்சலும் கோபமும் அடைந்த பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவரோ மேலதிகாரிகளிடம் கேட்டுதான் சொல்லமுடியும் என நகர்ந்துவிட்டார். 

மாலை 4.45 மணியளவில் சட்டமனற உறுப்பினர் கனகராஜை மங்கலம் இன்ஸ்பெகடர் வேல்முருகன், ஒரு மாருதி காரில் ஏற்றி அனுப்ப முற்பட்டார். பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், பதில் சொல்லாமல் நகரக்கூடாது என கனகராஜுக்கு நெருக்கடி தந்தனர். ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டே இருந்தார். அருகில் உள்ள எஸ்பி மருத்துவமனைவரை இப்படியாக தொடர்ந்தது. அவர்களின் எதிர்ப்பைப் புறக்கணித்துவிட்டு போலீசாரின் உதவியுடன் கனகராஜ் அங்கிருந்து தப்பியோடினார். 

இது ஒரு பக்கம் நடக்க, இன்னொரு புறம் டாஸ்மாக்கின் பகுதி மேலாளர் ஒருவர் வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். அது தொடர்ந்து நடந்துகொண்டிருந்தபோதே கனகராஜை காரிலேற்றி அனுப்பியவுடன் தடியடி நடத்த உத்தரவிடப்பட்டது. 

காலை 10 மணி முதல் அங்கிருந்த போலீசாரும் மதியம் குவிக்கப்பட்ட அதிரடிப்படையினரும் பெண்கள், வயதானவர்கள் என்றும் பார்க்காமல் அமைதியாகப் போராடிய மக்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். இதில் 10 பெண்களும் ஆறு ஆண்களுமாக 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆறு பேரின் மண்டை உடைக்கப்பட்டது. ரவுடியைப் போல நடந்துகொண்ட கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு கேட்கும் திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் முதலில் உள்ளூரில் தனியார் மருத்துவமனையிலும் பின்னர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். 

மதுக்கடை எதிர்ப்பு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியும் போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்தும் சாமளாபுரம் ஈசுவரன்கோயிலுக்குள் பிரபாகரன் தலைமையில் 30 பேர் செவ்வாய் இரவு முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். புதன் அதிகாலை 3 மணிக்கு அவர்களில் 7 பேரை மட்டும் கைதுசெய்த போலீசு, ஒரு திருமண மண்டபத்தில் பிடித்துவைத்து மிரட்டியது. 

கைதானவர்களை விடுதலைசெய்யுமாறு கோரி சாமளாபுரம் பொதுமக்கள் மீண்டும் இன்று காலையில் போராட்டத்தில் இறங்கினர். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததுடன் நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. இதையடுத்து பிடித்துவைத்த ஏழு பேர் மீதும் வழக்குகளைத் தொடுத்து, போலீசு சிறையில் அடைத்தது” என சாமளாபுரம் போராட்டத்தைப் பற்றி போலீசின் கிரிமினல் தாக்குதலை எதிர்க்கும் அவேசத்தோடு சொல்கிறார்கள், நேரடியாகக் களம் கண்டவர்கள். 

- இரா.தமிழ்க்கனல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : basith Country : United Arab Emirates Date :4/17/2017 5:56:12 PM
குடிக்கும் கூட்டம் குடிப்பதை நிறுத்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது கடையை அடைக்க முடியாது .மக்களே ! கடையை அடைக்க முடியாது.