Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
சிறப்பு செய்திகள்
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, ஏப்ரல் 2017 (0:4 IST)
மாற்றம் செய்த நாள் :7, ஏப்ரல் 2017 (0:6 IST)


உலக சுகாதார நாள்

உலகை வெல்லும் கனவு அலெக்சாண்டருக்கு மட்டுமல்ல… எல்லோருக்குமே உண்டு. ஆனால் உலகை வெல்லும் வழிமுறைதான் ஆளாளுக்கு வேறுபடும். ஒருவர் தூரிகையாலும், மற்றொருவர் தன் பேனா முனையாலும், இன்னொருவர் தன் குரலாலும் உலகை வசப்படுத்த முனையாலாம். அப்படி உலகை வெல்ல நினைப்பவர்கள், தங்கள் இலட்சியக் கனவில் வெற்றிபெற நீண்ட ஆயுள் அவசியமானது. 



எனவேதான் சுவரிருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்றனர் நமது முன்னோர். உலக தேசங்கள் அனைத்தும் தம் குடிமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து, உலக சுகாதார தினத்தை வகுத்து கடைப்பிடிக்கிறது உலக சுகாதார அமைப்பு.

உலக சுகாதார தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக உலக சுகாதார அமைப்பு 1948-ல் தனது அவையைக் கூட்டியது. அன்றெடுக்கப்பட்ட முடிவின்படியே, 1950 முதல் உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளைத் தொடப்போகும் உலக சுகாதார தினத்தின் இவ்வாண்டு கருப்பொருள் ‘மனஅழுத்தம்- நாம் விவாதிப்போம்’ ஆகும். உலகளவில் உடல்நிலை பாதிப்பிற்கும், செயல்பாடின்மைக்கும் இட்டுச்செல்வதில் முதன்மையான காரணியாக மன அழுத்தம் திகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி உலக அளவில் 30 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வருவாய் உள்ள நாடுகளில்கூட கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேர் மன அழுத்தத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். ஒவ்வொரு நாடும் பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கினாலும், அதில் மனநலத்துக்கு என ஒதுக்கப்படும் தொகை மிக குறைந்த சதவிகிதமே. மனநலத்துக்கு உலக நாடுகள் ஒதுக்கும் தொகை சராசரி 3 சதவிகிதம். அதிலும் குறைந்த வருவாயுள்ள நாடுகள் இன்னும் கீழேசென்று வெறும் 1 சதவிகித தொகையையே ஒதுக்குகின்றன.

சர்க்கரை நோய், இதய நோய்க்கான வாய்ப்பை  மன அழுத்தம் அதிகரிக்கும். அதேபோல இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்கிறது நவீன அறிவியல். 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்துக்கு இரண்டாவது முக்கிய காரணியாக மன அழுத்தம் திகழ்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். அதேசமயம் மனஅழுத்தம் இருப்பதைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும்பட்சத்தில் இத்தகைய மரணங்களைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இந்தியாவில் இப்போதும் மனநல பாதிப்பு என்பது கடவுள் குணப்படுத்தவேண்டிய ஓர் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இதற்கென பேர்பெற்ற கோவில், தர்காக்களில் விட்டுவிட்டுவருவதே சிகிச்சையாகப் பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கணக்கின்படி இந்திய அளவில் 45 லட்சம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறைய பேர் தனக்கு மன அழுத்தம் இருப்பதை உணர்வதோ, பொருட்படுத்துவதோ இல்லை. பெருகிவரும் மக்கள்தொகை, வேலை, உணவு உள்ளிட்ட கவலைகளால் இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தும் வருகிறது. எனவே இந்திய சுகாதாரத் துறை கூடுதல் கவனம்செலுத்தவேண்டிய பிரச்சினைகளில் ஒன்றாய் மன அழுத்தம் உருவெடுத்து நிற்கிறது. இந்த உலக சுகாதார தினத்தை, மன அழுத்தம் குறித்த ஆக்கபூர்வமான அடியெடுத்து வைப்பதற்கான வாய்ப்பாக நமது அரசும் நாமும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

-க. சுப்பிரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :