Add1
logo
அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையின் பின்னணியில் பாஜக உள்ளது: நக்மா குற்றச்சாட்டு || டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு || சேலம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று கோரி பிரதமருக்கு எடப்பாடி கடிதம் || விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: சென்னையில் நக்மா பேட்டி (படங்கள்) || உலக சதுரங்க போட்டிக்கு வேலம்மாள் பள்ளி தேர்வு || நடிகர் வினோத் கண்ணா காலமானார் || கீழடியை மீட்க மதுரையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்...! -மே பதினேழு இயக்கம் அறிவிப்பு || டாஸ்மாக் கடை - பாரை அடித்து நொறுக்கிய பெண்கள்! || தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது: ராமதாஸ் || சென்னை ஜார்ஜ் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் சரண் || அரசூர் விஏஒ தாக்கியதாக சமூக ஆர்வலர் புகார் || இளைஞர் தற்கொலை: கட்டபஞ்சாயத்து கும்பலுடன் போலீஸ் டார்ச்சர் என குற்றச்சாட்டு || 15 பொது விடுமுறை நாட்கள் நீக்கம் ||
தமிழகம்
அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையின் பின்னணியில் பாஜக உள்ளது: நக்மா குற்றச்சாட்டு
......................................
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
......................................
சேலம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று கோரி பிரதமருக்கு எடப்பாடி கடிதம்
......................................
கீழடியை மீட்க மதுரையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்...! -மே பதினேழு இயக்கம் அறிவிப்பு
......................................
டாஸ்மாக் கடை - பாரை அடித்து நொறுக்கிய பெண்கள்!
......................................
அரசூர் விஏஒ தாக்கியதாக சமூக ஆர்வலர் புகார்
......................................
இளைஞர் தற்கொலை: கட்டபஞ்சாயத்து கும்பலுடன் போலீஸ் டார்ச்சர் என குற்றச்சாட்டு
......................................
பொருத்தமற்றவர் டி.டி.வி.தினகரன்: அரசியலுக்கு வந்திருக்க கூடாது: இரா.முத்தரசன் கருத்து
......................................
சிறுமிகள் தப்பிய வழக்கில் தனிப்படை அமைப்பு!
......................................
குடிக்க தண்ணீ இல்ல… ஆழ்துளை கிணறா.. வேண்டவே வேண்டாம் – கொதிக்கும் மக்கள்.
......................................
பிச்சாவரம் காடுகளை சுற்றி இறால் பண்ணைகள். 20 கிராம மக்கள் குடிநீருக்கு தவிப்பு (ப டங்கள்
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
டி.எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்
......................................
டி.என்.பி.எஸ்.சி. குரூப் -2 தேர்வுகள் அறிவிப்பு
......................................
சிங்கம்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து
......................................
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
......................................
இருளில் மூழ்கிய வடசென்னை! மக்கள் கடும் அவதி!!
......................................
தங்கத்தை பத்திரங்களாக வாங்கும் திட்டம்: இந்தியன் வங்கியில் விண்ணப்பிக்க நாளை கடைசி
......................................
டிடிவி.தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி
......................................
இரு அணைகள் இணைவது குறித்து - வைத்தியலிங்கம் பேச்சு
......................................
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தீ விபத்து
......................................
மதுரையில் சித்திரை பெருவிழா
......................................
மின்தடையால் இரவில் இருளில் மூழ்கியது வட சென்னை
......................................
நீட் தேர்வுக்கு ஒத்துப்போகும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது
......................................
சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு 7 ஆண்டு சிறை
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (10:8 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (10:8 IST)


கேள்வி எழுப்பாமல் வாய் மூடி மவுனம் காப்பது ஏன்? தமிழக அரசுக்கு வேல்முருகன் கண்டனம்

தமிழக மீனவர்கள், விவசாயிகள் மற்றும் ஹைட்ரோ கார்பன் பிரச்சனைகளில் மத்திய அரசு உறுதியளித்தபடி எந்த   நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை! தமிழக அரசு இதுகுறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? இதில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழக அரசு, வாய் மூடி தொடர்ந்து மவுனம் காப்பதன் காரணமும் புரியவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: 

மத்திய, தமிழக அரசுகளின் விரும்பத் தகாத இந்தப் போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை மத்திய அரசு தான் உறுதியளித்தபடி மேற்கண்ட பிரச்சனைகளில் விரைந்து மேல்நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து போராட்டத்திற்கு ஆதரவு குவிந்தது.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரும் அங்கு வந்தனர்.

தமிழக அரசு இந்தத் திட்டத்தை அனுமதிக்காது என முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார் என்றார் விஜயபாஸ்கர்.

மக்கள் விரும்பாததை மத்திய அரசு செயல்படுத்தாது என்றும் போராட்ட பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை சந்திக்க வைப்பதாகவும் சொன்னார் ராதாகிருஷ்ணன்.

இருவரின் வாக்குறுதிகளை வைத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஆனால் நேற்று இது குறித்த ஒரு கேள்விக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளிக்கையில், அந்தத் திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது, இதை மக்களை சந்தித்து அவர்களிடம் எடுத்துச் சொல்வோம் என்றுதான் கூறினார். இதன் மூலம் நெடுவாசல் மக்களுக்கு வெற்று வாக்குறுதிதான் வழங்கப்பட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

நெடுவாசலைச் சுற்றியுள்ள ஊர்களில் போராட்டம் இன்றளவும் தொடர்வதும் இதனால்தானோ என்றும் ஆகிறது.

கடந்த ஆறாம் தேதியன்று 21 வயது இளைஞரான தமிழக மீனவர் பிரிட்ஜோவை இந்தியக் கடற்பரப்புக்குள்ளேயே வந்து கொடூரமாக சுட்டுக் கொன்றது இலங்கைக் கடற்படை.

சுட்டுக் கொன்ற இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்து கொண்டுவந்து விசாரணை மேற்கொள்ளுமாறும் மீனவர் பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்க்குமாறும் தங்கச்சிமடத்தில் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமன் போராட்ட களத்திற்கு வந்தனர்.

இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இனி தமிழக மீனவர் மீது கைவைப்பதில்லை என்று இலங்கை சொல்லியிருப்பதாகவும் மீனவர் பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேச வைப்பதாகவும் அமைச்சர்கள் உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

11 நாட்கள் கழித்து மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் சென்றனர். ஆனால் மத்திய அமைச்சர்கள் சொன்னதற்கு நேர்மாறாகவே நடந்தது.

400 படகுகளில் சென்றிருந்த 3000 மீனவர்களையும் கற்களை வீசியும் தடிகளைக் கொண்டு தாக்கியும் வலைகளை அறுத்தும் வெறியாட்டம் ஆடியது சிங்கள கடற்படை. இதனால் லட்சக்கணக்கில் உடமை சேதம் ஏற்பட்டதுடன் தொழிலையே செய்ய முடியாமல் திரும்ப வேண்டியதானது.

இதற்கிடையில் பொன்.ராதாகிருஷ்ணன் தான் கூறியபடி மீனவர் பிரதிநிதிகளை டெல்லிக்கும் அழைத்துச் சென்றார். அங்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கும் முன்பாகவே இலங்கை வெளியுறத்துறை அமைச்சர் மங்கள சமரவீராவின் செய்தி ஊடகங்களில் வெளியானது.

அந்தச் செய்தியில் அவர், பிரிட்ஜோ கொல்லப்பட்டதில் இலங்கைக்குத் தொடர்பில்லை, இலங்கை கடற்கடையினர் துப்பாக்கிப் பிரயோகமே செய்யவில்லை என்கிறார்.

மங்கள சமரவீராவின் இந்தப் பேச்சுக்கு இந்தியத் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. எனவே பிரிட்ஜோ படுகொலையில் நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு சொல்வதை எப்படி புரிந்துகொள்வது?

டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு எதிரே கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் தமிழக விவசாயிகள். நேற்று அங்கும் ஆஜரான மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மறுநாள் வேளாண்துறை அமைச்சரோடு பேச வைப்பதாகக் கூறி போராட்டத்தை முடித்துக் கொள்ளச் செய்தார்.

ஆனால் அமைச்சரவைச் செயலர், விவசாயிகளிடம் கடனை திருப்பிச் செலுத்துமாறு கண்டிப்பு காட்ட வேண்டாம் என்று கடிதம் அனுப்பியிருக்கிறோம் என்று மட்டுமே சொல்கிறார்.

இதுதான் விவசாயிகளின் பிரச்சனைக்கான தீர்வா என்பதுதான் நமது கேள்வி.

அதேநேரம் இங்கு தமிழகத்தில் ஜெயம்கொண்டம் அருகே ஒஎன்ஜிசியின் ஆழ்துளை எரிவாயுக் குழாயிலிருந்து எண்ணெயும் புகையும் கசிந்து பீறிட்டதைக் கண்டு அச்சமுற்று, அத்திட்டத்தினை அகற்றக் கோரி போராடிய விவசாயிகளை தமிழக காவல்துறை கைது செய்கிறது.

இப்படி தமிழகம் தொடர்பான எல்லாப் பிரச்சனைகளிலுமே உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்காமல் வாய் வார்த்தைகளால் போக்குக் காட்டிக் காட்டியே போய்க்கொண்டிருப்பதுதான் மத்திய அரசின் வாடிக்கையாயிருக்கிறது.
இது மாறியாக வேண்டும். மத்திய அரசு தன் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும்.

உயிரிழப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளில்கூட செயலற்றிருப்பதென்றால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதை வன்மையாகக் கண்டிக்கிறது. பாரபட்சம் பார்க்காமல் தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க ஆவன செய்ய வேண்டுமாய் வலியுறுத்துகிறது.

தமிழக அரசும் தன் பொறுப்பை உணர்ந்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. 





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :