Add1
logo
ஆர்.கே. நகரில் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்க குவிந்த மக்கள் (படங்கள்) || மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி || ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்) || இந்தியருக்காக குண்டடி பட்டவரை கவுரவித்த டைம்ஸ் இதழ்! || ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர் || செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர் || மோடிக்கு முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அவசியம்! - மன்மோகன் சிங் தாக்கு || இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை || எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின் || ஆர்.கே. நகரில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்) || தஷ்வந்த்தை 13ஆம் தேதி ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! || ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? ஸ்டாலின் பதில் ||
முக்கிய செய்திகள்
மோடிக்கு முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அவசியம்! - மன்மோகன் சிங் தாக்கு
 ................................................................
தேர்தல் ஆணையத்தின் மானம் போகும்: நல்லசாமி
 ................................................................
காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராகுல்காந்தி!
 ................................................................
மீனவர்கள் போராட்டத்தை தூண்டிவிட்டதாக கூறி 7 பேர் கைது
 ................................................................
சுயம்பு முதல்வர்.. தர்ம யுத்தம் துணைமுதல்வர்.. - டிடிவி தினகரன்
 ................................................................
குண்டர் சட்டத்தில் திருமாவளவன் கைது செய்யப்பட வேண்டும்: எச்.ராஜா
 ................................................................
ஆம்புலன்ஸ் தாமதமானதால் மாணவி உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் மருத்துவமனையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு
 ................................................................
ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ்
 ................................................................
புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி
 ................................................................
நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா!
 ................................................................
தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்!
 ................................................................
ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்!
 ................................................................
விவசாயம் இன்றி எதுவும் செய்ய முடியாது: ‘ஏர் அறிஞர்’ விருது பெற்ற விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்
 ................................................................
இன்றைய(10.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வை புறக்கணித்த இந்தியா! உலக நாடுகள் அதிர்ச்சி!
 ................................................................
அதிமுகவுக்கு அடிமையாக இருக்க முடியாது: தமீமுன்அன்சாரி
 ................................................................
ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா வேலையில் மும்முரமாக இறங்கிய அதிமுகவினர்!
 ................................................................
திருமா தலைக்கு விலை வைத்த கோபிநாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்க! - வேல்முருகன்
 ................................................................
தயாரிப்பாளர் சங்க பிரச்சினையை தீர்த்துவிட்டு விஷால் அரசியலுக்கு செல்லட்டும்: டி.ஆர்., ஆவேசம்!
 ................................................................
அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலைப் புறக்கணித்த கிராமம்!
 ................................................................
மிதக்கும் உடல்கள்: மீனவர்கள் சாவுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
தந்தையையும் கொலை செய்ய திட்டம் - தஷ்வந்த் வாக்குமூலம்!
 ................................................................
பாஜகவுக்கு தோல்வி பயம்: டிடிவி தினகரன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (9:37 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (9:37 IST)


இலவச மின்சாரத்தை பறிக்கக்கூடாது: ராமதாஸ்

திறன்மிகு மோட்டார் என்ற பெயரில் இலவச மின்சாரத்தை பறிக்கக்கூடாது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளில் 10 விழுக்காட்டினருக்கு திறன்மிகு மின்சார மோட்டார்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது இனிக்க இனிக்க பேசி உழவர்கள் அனுபவித்து வரும் இலவச மின்சாரம் சம்பந்தப்பட்ட உரிமைகளை பறிக்கும் திட்டமாகும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன்களை மாநில அரசே ஏற்றுக் கொள்வதற்கான உதய் திட்டம்  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனுபவித்து வரும் சலுகைகள் மற்றும் உரிமைகளை மறைமுகமாக பறிக்கும் திட்டம் என்றும், இத்திட்டத்தில் தமிழகம் ஒருபோதும் இணையக்கூடாது என்றும் இத்திட்டம்  அறிமுகம் செய்யப்பட்டபோதே வலியுறுத்தியிருந்தேன். இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த ஜெயலலிதா, தாம் முதலமைச்சராக இருந்தவரை உதய் திட்டத்தை செயல்படுத்த ஒப்புகொள்ளவில்லை. ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில வாரங்களிலேயே  தில்லி சென்ற தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, உதய் திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ப்பதற்கான அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு விட்டு வந்ததன் விளைவாகத் தான் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் அனுபவித்து வரும் இலவச மின்சாரத்திற்கு மறைமுகமான ஆபத்து ஏற்பட்டிருகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

உதய் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நோக்குடன் திறன் மிகு மின்கருவிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதாகும். அதன்படி தமிழகத்தில்  உள்ள 20.62 லட்சம் வேளாண் மின் இணைப்புகளில் 10% இணைப்புகளை, அதாவது 2.06 லட்சம் இணைப்புகளில் உள்ள மின்சார பம்ப் செட்டுகளை அகற்றிவிட்டு அவற்றுக்குப் பதிலாக திறன்மிகு மின்மோட்டார்களை பொருத்தப்போவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மின்வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2019-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள்  இத்திட்டத்தை செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது நல்ல திட்டம் போன்று தோன்றினாலும், உழவர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.



வேளாண்மைக்கு இலவச மின்சாரம் பெறுவதற்கான விதிமுறைகளின்படி, 5 குதிரைத்திறனுக்கும் குறைவான சக்தி கொண்ட மின்மோட்டார்களை மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கும் கீழ் சென்று விட்டது. பல மாவட்டங்களில் ஆயிரம் அடிக்கும் கீழ் தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் கூட 500 அடி ஆழத்திலிருந்து தான் நிலத்தடி நீரை எடுக்க முடியும். இவ்வளவு ஆழத்திலிருந்து தண்ணீரை இறைக்க வேண்டுமானால் குறைந்தது 7.5 குதிரைசக்தி முதல் 10 குதிரைசக்தி வரை திறன் கொண்ட மின்சார மோட்டார் தேவை. இலவச மின்சாரத்திற்கான விதிகளின்படி 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களை மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்ற போதிலும், விவசாயிகள் அதிக சக்தி கொண்ட மோட்டார்களை பயன்படுத்தத் தொடங்கினர். இது தவிர்க்கமுடியாது என்பதால் தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், உதய் திட்டத்தின்படி பொருத்தப்படவுள்ள திறன்மிகு மின்மோட்டார்கள் 5 குதிரைசக்தி மட்டுமே சக்தி கொண்டவை ஆகும். இவை பொருத்தப்பட்டால், அவற்றை மாற்ற முடியாது; அதுமட்டுமின்றி திறன்மிகு மோட்டார்களைக் கொண்டு 800 அடிக்கும் கீழ் உள்ள நிலத்தடி நீரை இறைக்க முடியாது.  இனி ஒவ்வொரு ஆண்டும் 10% மோட்டார்கள் திறன்மிக்கவையாக மாற்றப்படும் என்பதால் அடுத்த 10 ஆண்டுகளில் அனைத்து மோட்டார்களும் திறன்மிகு மோட்டார்களாக மாற்றப்படும். அப்போது நிலத்தடி நீர் மட்டம் மேலும் குறைந்திருக்கும் என்பதால், 5 குதிரைசக்தி திறன் கொண்ட திறன்மிகு  மோட்டார்களைக் கொண்டு ஒரு சொட்டு நிலத்தடி நீரைக்கூட எடுக்க முடியாது. இதனால் மின்திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போய்விடும். இது இலவச மின்சாரத்தை பறிப்பதற்கு சமமான செயல் ஆகும்.

முந்தைய திமுக ஆட்சியின் போது 2010-ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின்சார மோட்டார்களையும் அகற்றி விட்டு, திறன்மிகு மோட்டார்களை பொருத்தும் திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆனால், அப்போது உழவர்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்ததால், இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த  15 லட்சம் இனைப்புகளுக்கு பதிலாக வெறும் 200 மோட்டார்களை மட்டுமே பொருத்த முடிந்தது. இப்போதும் அதேபோன்ற எதிர்ப்பையும், தோல்வியையும் தான் தமிழக அரசு எதிர்கொள்ள நேரிடும்.

உதய் திட்டத்தின் தீய விளைவுகள் இத்துடன் நின்று விடப் போவதில்லை. இலவச மின் இணைப்புகள் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்துதல், 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம்  மேற்கொள்ள உள்ளது. இது தமிழக மக்களுக்கு மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். 

எனவே, வேளாண் மின் இணைப்புகளுக்கு இப்போதுள்ள மோட்டார்களுக்கு மாற்றாக, திறன்மிகு மோட்டார்களை பொருத்தும் திட்டத்தை தமிழக அரசும், மின்வாரியமும் கைவிட வேண்டும். அத்துடன் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உதய் திட்டத்திலிருந்து தமிழக அரசு உடனடியாக விலக வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : antony Country : Australia Date :3/21/2017 11:39:33 AM
அய்யா உங்கள் நிழல் மந்திரிசபையை வைத்து நிழல் தீர்மானம் போடுங்கள். அதை சின்னம்மா அரசுக்கு அன்புமணி மூலம் கொடுத்து நிழல் நடவடிக்கை எடுங்கள். அதை விட்டு விட்டு அவ்வபபொழுது அறிக்கை கொடுத்து மக்களால் புறக்கணிக்கப்பட்ட உங்களை மக்களுக்கு மீண்டும் நினைவு படுத்தியது போதும். தைரியமிருந்தால் எங்கள் தினகரனோடு மோதி டெபாசிட் வாங்க முடியுமா என பாருங்கள்.
Name : murhu Country : United States Date :3/21/2017 10:59:19 AM
எல்லா வழிகளிலும் நம்மை மத்திய அரசு வஞ்சிக்கிறது.