Add1
logo
மருத்துவமனையில் ஜெ.வை பார்த்தோம் –அமைச்சர் பேட்டியால் புதிய குழப்பம் || ஜெ.வை பார்த்ததாக பொய் கூறினோம் –மேடையில் மேலும் ஒரு அமைச்சர் தகவல் || ட்ராவல்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 12 ரவுடிகள் கைது || இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்: ம.தி.மு.க. அறிவிப்பு || வரிசை கட்டி விழுகிறது பேரிடி! அதில் முதல்வரின் செவிடே தவிடுபொடியானதுதான் மிச்சம்! வேல்முருகன் || ஹனிபிரீத் சிங்கை கைதுசெய்ய முடியாமல் திணறும் ஹரியானா போலீஸ்! || விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு || பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சிலைகள் || போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வரும் சென்னை: ராமதாஸ் || ரூ.77 கோடி மின்கட்டணம் கேட்டு ரசீது - அதிர்ச்சியில் விவசாயி! || ஆறுமுகசாமியின் வாழ்க்கை குறிப்பு || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || 14ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால வீரக்கல் ஒன்று கண்டெடுப்பு ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (9:31 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (9:31 IST)


தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரது படகில் சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாகவும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும் கூறி 10 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், படகுடன் அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையால் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள், கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :