Add1
logo
பொறிகடலை தின்னமுடியாத பொக்கவாய்களைக் கொண்டு கூட்டம் நடத்தும் எடப்பாடி - நாஞ்சில் சம்பத் || நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன் || நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி || மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை || ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி || “கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு || ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம் || மைத்ரேயனுக்கு மக்களவை துணைத்தலைவர்? || சுப்பிரமணிய சாமியின் பகடைக்காய் யார்? || விசாரணை நடைபெற்றால்? || தாமிரபரணியில் தண்ணீர் மாஃபியாக்கள்! || உயிரை வதைக்கும் அயனாவரம் மனநல மருத்துவமனை! || கோயில்களை சிதைக்கும் தமிழக அறநிலையத்துறை! ||
தமிழகம்
நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன்
 ................................................................
நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி
 ................................................................
மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை
 ................................................................
“கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு
 ................................................................
ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம்
 ................................................................
கொள்கையை புதை, கொள்ளையை தொடர்: இணைப்பின் பின்னணியில் இரு தத்துவங்கள்! ராமதாஸ்
 ................................................................
பொதுப்பணித்துறையில் ஊழல்! வைகோ கண்டனம்!
 ................................................................
ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
 ................................................................
சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமனம்
 ................................................................
உதவித்தொகை வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முதியோர் முற்றுகை
 ................................................................
மின்சாரம் தாக்கி: 2 காட்டு யானைகள் பலி
 ................................................................
சினிமாவை மிஞ்சிய கொள்ளை
 ................................................................
மாணவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆணையர்
 ................................................................
"பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்" கொள்ளிடத்தில் போராட்டம்
 ................................................................
நாளை திருவாரூரில் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம்! பெ.மணியரசன் அறிவிப்பு
 ................................................................
அணிகள் இணைப்பில் இழுபறி;கலைந்து செல்லும் எம்.எல்.ஏக்கள்
 ................................................................
ஜிஎஸ்டி வரியை மாற்றியமைக்கக் கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்குக; மாதர்சங்க மாநாடு வலியுறுத்தல்
 ................................................................
காவிரியில் புதிய அணை கட்டுவதற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது: திருமா
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திக்கிறார்கள்
 ................................................................
சென்னை மாநகராட்சியின் சொத்து வரி எப்போது உயர்த்தப்படும்? ஐகோர்ட் கேள்வி
 ................................................................
ஜனநாயக நாட்டில் ஆசிரியர்களும் சங்கம் அமைக்கும் உரிமை உள்ளது : தமிழக பள்ளி கல்வித்துறை பதில் மனு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (8:49 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (10:2 IST)


நடுங்கும் போலீசார்: மக்கள் விரும்பும் காவல்துறை அதிகாரி



திருச்சி மாவட்ட டிஐஜியாக இருந்த அருண் பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர போலிஸ் கமிஷனராக பதவி ஏற்ற போது ஜல்லிகட்டு பிரச்சனைக்காக ஒரு பக்கம் மாணவர்கள் போராட்டம் நடத்தி கொண்டுயிருந்த அதே நேரம் தடையை மீறி ஜல்லிகட்டு பல இடங்களில் நடத்த பொதுமக்கள் முயற்சி செய்த போது லாவகமாக அவர்களோடு பேசி சரி செய்த பக்குவம் திருச்சி மக்களிடமும்,  காவல்துறை தலைமையிட உயர் அதிகாரிகளிடமும் நன்மதிப்பை பெற்றார். 

ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தவுடன் மாநகரில் உள்ள காவல்நிலையங்களில் பொதுமக்கள் புகார் கொடுக்க வருபவர்களை வரவேற்க வரவேற்பாளர் என்கிற எஸ்.ஐ. அளவில் புதிய பதவி ஒன்றை கொடுத்து தனி அறையும் ஒதுக்கி புகார் கொடுப்பவர்களை இன்முகத்துடன் வரவேற்ற உத்தரவிட்டார். 

ஏசி அறைகளுக்குள் உட்கார்ந்து கொண்டு உத்தரவுகளை மட்டும் பிறப்பிக்காமல் திருச்சி மாநகரின் பல பகுதிகளில் மாநகர கமிஷனர் சாதாரண உடைகளில் டூவிலர்களில் வலம் வருவதும் பிறகு யூனிபார்மில் அதே இடங்களுக்கு வந்து நடவடிக்கை எடுப்பது திருச்சி போலிசார் மத்தியில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருக்கிறது. எப்போதும் பதட்ட நிலையிலே இருக்கிறார்கள். 

முதல் உத்தரவாக திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல்துறையை சேர்ந்தவர்கள் யாரும் தன்னுடைய டூவிலரில் போலிஸ் என்கிற ஸ்டிக்கரை பிரைவேட்டாக எழுதி ஒட்டக்கூடாது என்றும். அரசு கொடுக்கும்  வாகனங்களில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கடுமையாக உத்தரவு பிறத்தார்.  

டூவிலரில் நம்பர் பிளேட்டில் நம்பரை தவிர வேறு ஏதுவும் இருக்க கூடாது. முதலில் காவல்துறையினர் கடைபிடிப்போம் என்றார்.

இதே போல திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் இப்போதெல்லாம் தீடிர் தீடிர் என  திருச்சி மாநகரில் ரவுண்ட்ஸ் காவல்நிலை விசிட் அடிக்கிறார். தீடீர் என ஒருநாள்  காந்திமார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அப்போது வாசலில் சிங்கம் சிலை போன்று படம் பொறித்து சிங்கம்டா என்கிற வாசகம் பொறித்த டூவிலர் நின்று கொண்டிருந்தது. அதை பார்த்துக்கொண்டே உள்ள சென்றவர்  வாசலில் நின்று கொண்டிருந்த நடுத்தர வயதினை உடையவரிடம் இங்கே ஏன் நிக்கிறீங்க என்று விசாரிக்க

அப்போது அவர் என்னுடைய பைக் காணாமல் போனது தொடர்பாக 2 மாதமா  கிரைம் பிரிவிற்கு வந்து செல்வதாகவும்,  இன்ஸ்பெக்டர் எப்ஐஆர் போட  மாட்டேன்னு சொல்றாரு. நானும் நடையா நடந்துகிட்டே இருக்கேன் என்று புலம்ப கமிஷனரோ அப்படியா சரி… பாக்குறேன்  சொல்லிகிட்டே உள்ளே சென்றார். 

ஸ்டேஷனுக்குள் சென்ற கமிஷனர் அருண் அங்கிருந்த காவலர்களிடம்  விசாரித்தார். அப்போது வெள்ளை சட்டை, பேண்ட்டில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்த நபரை பார்த்து நீங்கள் யார்? என கமிஷனர் கேட்டார். நான் தான் ஸ்டேஷன் ரைட்டர். பெயர் அய்யப்பன் என்றார். அந்த வாசலில் சிங்கம் படம் பொறித்த டூவிலர் யாருடையது என்று கேட்க அவர் தயங்கி தயங்கி சார்.. என்னுடையது தான் என்று சொல்ல…  

நான் டூவிலரில் போலிஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாதுனு சொல்லியிருந்தது உனக்கு தெரியுமா ? தெரியாதா என்று கேட்க, தெரியும் அய்யா என்று பவ்வியமா பதிலளிக்க.. நீங்க போலிஸ் தானே ஏன் யூனிபார்ம் இல்லாம டூட்டி பார்க்கும்  தைரியம் எப்படி வந்தது என்று சொல்லி கடுப்பாகி  ஆயுதப்படைக்கு உடனே டிரான்பர் செய்தார். 

அந்த காவல்நிலையத்திலே சுமார் 20 நிமிடங்களாக சட்டம் ஒழுங்கு பிரிவு மற்றும் குற்றப்பிரிவு அலுவலங்களுக்குள் ஆய்வு செய்த கமிஷனர் அங்கிருந்து தனது காரில் ஏறிய கமிஷனர் அருண்,  போலீஸ் மைக்கில் முதலில் கோட்டை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பெரியண்ணனை அழைத்து ‘தனது மோட்டார் சைக்கிளை பறிக்கொடுத்த ஒருவர் 2 மாதகாலமாக எப்ஐஆருக்காக அலைகிறார். இது தொடர்பாக பலமுறை இன்ஸ்பெக்டரை பார்த்தும் எந்த புண்ணியமும் இல்லைன்னு சொல்றாரு.. எல்லாரும் என்ன வேலை பாக்குறீங்க, என்று மைக்கிலே புடி புடின்னு புடிக்க எல்லா போலிசாரும் அரண்டு போனார்கள். 

இந்த டூவிலர் பிரச்சனை சம்மந்தமா குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமரன் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என மைக்கிலே உத்தரவிட்டார்.  கமிஷனர் அழைத்த பதற்றத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமரன், இது தொடர்பாக எனக்கு தெரியாது சார், எனினும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாளித்தார். இந்த பதிலை கேட்டு கோபமடைந்த கமிஷனர் ‘புகார் கொடுக்க காத்திருந்த நபர் என்ன கூறினார் என்பது ஏசிக்கு தெரியும் என கூறி, புகார் கொடுக்க வந்த நபரை அலைக்கழித்த இன்ஸ்பெக்டருக்கு உடனடியாக சார்ஜ் மெமோ கொடுக்குமாறு ஏசிக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். 


சமீபத்தில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பயிற்சி முடித்த போக்குவரத்து காப்பாளர்களுக்கு (டிராபிக் வார்டன்) 76 போக்குவரத்து காப்பாளர்களுக்கு பணி நியமனத்திற்கான ஆணைகளை வழங்கி பேசின போலிஸ் கமிஷனர். 

போக்குவரத்து காப்பாளர்கள் வேலை நேரம் தவிர மற்ற நேரம் சீருடை அணியக்கூடாது. போக்குவரத்து காவலர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் நீங்கள் பணியாற்ற வேண்டும். உங்களில் யாராவது வேறு எண்ணத்துடன் வந்திருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உடம்பை நல்ல பிட்னஸ்டோ வைத்து கொள்ளுங்கள். 

சில இடங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசார் தவறான செயல்களில் ஈடுபட்டதால் அந்த அமைப்பையே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தமிழகத்தில் ஊர்க்காவல் படையினர் சிறப்பாக செயல்படுவது போல் உங்களது பணியும் சிறப்பாக இருக்க வேண்டும். உங்களது நடத்தையை தமிழகமே புகழ்வது போல் இருக்க வேண்டும். என்று எச்சரிக்கை கலந்து பேசினார். 

அடுத்தக்கட்டமா திருச்சி நகரில் முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் பணியாற்றி வருகிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் கொடுமையால் அவர்கள் களைப்படையாமல் இருப்பதற்காக மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட இருக்கிறது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ரவுண்டானா பகுதியில் நேற்று போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் இருந்த போலீசாருக்கு பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திருச்சி மாநகர போலிஸ் கமிஷ்னர் அருண் திருச்சி மாநகர பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ள போலீசார் மற்றும் அதிகாரிகள் 244 பேருக்கு தினமும் காலை, மதியம் ஆகிய இரு வேளையும் மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கப்படும். வருகிற ஜூலை மாதம் வரை இது வழங்கப்படும். திருச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குற்றத்தடுப்பு நடவடிக்கைகளிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக தாலிச்செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்கள் வெகுவாக குறைந்து இருக்கிறது.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொதுமக்கள் எளிதாக போலீசாரை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் ‘விசிபிள் டீம்’ என்ற பெயரில் ஒரு போலீஸ் குழு அமைக்கப்படும். இந்த குழுவில் உள்ள போலீசாரிடம் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் தெரிவிக்கலாம். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் திருச்சி மாநகர பகுதியில் 3,989 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக 182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.. இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர்கள் விக்னேஸ்வரன், முருகேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்
 
கடந்த 6 வருடங்களில் மாசானமுத்து, சைலேஸ்குமார்யாதவ், மஞ்சுநாத், சஞ்சை மாத்தூர் என பல்வேறுபோலிஸ் கமிஷனர்கள் யாரும் அறையை விட்டு வெளியே வராமல்  இருந்த நிலையில் மாநகரின் கமிஷனர்அருண் வெளியே வந்து மக்களோடு  மக்களாகவும் காவலர்கள் நலன் மீது அக்கறையோடு நேரடியா கள  நிலவரங்களை  நேரடியாக தெரிந்து கொண்டுயிருப்பது பலருக்கு  புளியை  கரைத்திருக்கிறது  என்பது  மட்டும் நிஜம்.


ஜெ.டி.ஆர்.

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :