Add1
logo
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் || போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது || நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு || கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் || நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை || ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார் || வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை || தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் || போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்) || கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!! || சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) ||
முக்கிய செய்திகள்
நாளை ஆளுநரை சந்தித்து முறையிடுகிறோம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
 ................................................................
பதவியேற்ற அன்றே கோட்டையில் ஓபிஎஸ் வாரிசுகள்!
 ................................................................
பொது இடத்தில் தனது காலை பிடித்துவிட கூறிய விருத்தாசலம் எம்.எல்.ஏ.
 ................................................................
கமல் கருத்து : திருமா ஆதரவு
 ................................................................
ஜெ., நினைவிடத்தில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் மரியாதை!
 ................................................................
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..!
 ................................................................
இரு அணிகள் இணையும் சூழலை ஜெயலலிதா ஆன்மா தான் ஏற்படுத்தி கொடுத்தது: ஓ.பி.எஸ்
 ................................................................
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன
 ................................................................
அணிகள் இணைகின்றன: அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டார் ஓ.பி.எஸ்!
 ................................................................
ஓ.பி.எஸ் வீட்டிற்கு அமைச்சர்கள் வருகை!
 ................................................................
இணைப்பில் தாமதம்: பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியா?
 ................................................................
அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைப்பில் மீண்டும் இழுபறி?
 ................................................................
பினாமி ஆட்சியாளர்களின் கோட்பாடு மக்களின் கோரிக்கைகளை கேட்காதே,பேசாதே,பார்க்காதே என்பது தான்: ராமதாஸ்
 ................................................................
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வந்ததற்கான புதிய வீடியோ ஆதாரம்?
 ................................................................
மும்பையிலிருந்து அவசரமாக சென்னை வரும் ஆளுநர்..!
 ................................................................
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைகின்றன..!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (8:27 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (8:38 IST)


கடும் வாக்குவாதம்: வெளிநடப்பு செய்த நிர்மலா பெரியசாமி: தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. கூட்டத்தில் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பேசும்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் அதிக ஓட்டுகளை பெறுவார்கள் என்றார்.

அதற்கு பா.வளர்மதி, அவரை பற்றி இங்கு பேசக்கூடாது என்றார். பதிலுக்கு நிர்மலா பெரியசாமி, மக்கள் செல்வாக்கு உள்ளவரை பற்றி பேசுவதில் தவறில்லை என்றார். நீங்கள் எல்லாம் ஒரு முடிவோடு தான் இருக்கிறீர்களா? அப்படியென்றால் ஏன் இங்கு வருகிறீர்கள்? என்று பா.வளர்மதி அவரை பார்த்து கேட்டார்.

ஜெயலலிதா தொடங்கிய கட்சியும், இரட்டை இலை சின்னமும் இங்கு இருப்பதால் தான் வருகிறோம். உங்களிடம் பேசி பலனில்லை, யாரிடம் பேச வேண்டுமோ? அவரிடம் பேசிக்கொள்கிறோம் என்று கூறி கூட்டத்தில் இருந்து நிர்மலா பெரியசாமி வெளிநடப்பு செய்ய முயன்றார்.

அப்போது பா.வளர்மதியும், நிர்மலா பெரியசாமியும் ஒருவரை ஒருவர் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நிர்மலா பெரியசாமி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

வெளிநடப்பு செய்த நிர்மலா பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

கட்சி ஒற்றுமைக்காக ஒரு கருத்தை சொன்னேன். ஓ.பி.எஸ். மற்றும் அவரது அணியினர் நமக்கு என்ன விரோதியா? எதிரியா? அவர்களும் நம் கட்சியை சேர்ந்தவர்கள் தான் என்றேன். கட்சி சின்னம் பறிபோய் விடக்கூடாது என்ற கலக்கத்தில் நான் இந்த கருத்தை கூறினேன். அதற்கு கூட்டத்தில் இருந்த சி.ஆர்.சரஸ்வதியும், குண்டு கல்யாணமும் என்னை மோசமாக திட்டினர். சி.ஆர்.சரஸ்வதி, என்னை கட்சியை விட்டு விலக சொன்னார். அப்போது வளர்மதியும் என்னை திட்டினார்.

அவர்கள் பேசும் அளவுக்கு, நான் இறங்கி பேச நினைக்கவில்லை. எனவே உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இது சிறிய பிரச்சினை தான். ஜெயலலிதா தொடங்கிய கட்சியும், சின்னமும் எங்கு இருக்குமோ? அங்கு தான் நானும் இருப்பேன். இதுகுறித்து கட்சி தலைமை விளக்கம் கேட்டால் நிச்சயம் பதில் அளிப்பேன். அதுவரை தேவை இல்லாத வதந்திகளை பரப்பிவிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : murhu Country : United States Date :3/21/2017 1:35:55 PM
காட்ச்சியை முழுசா முடக்கணும்.
Name : guru Country : United States Date :3/21/2017 10:28:48 AM
வளர்மதியும் சரஸ்வதியும் சசிகலாவை பாற்க பெங்களூர் சிறைக்கு சென்ற நேரம் காவலர்கள் யார் என்று கேட்க வளர்மதி பிரஸ் என்று நடுங்கிய குரலில் சொல்ல அவனுள் கலைக்க தெருவோரம் அக்கதிமாதிரி ஒதுக்கினத்தை மறந்து பேசுதுகள்.
Name : nim Country : Australia Date :3/21/2017 9:44:13 AM
எம்மா நீ எல்லாம் , போம்மா
Name : R BALAKUMAR Date :3/21/2017 8:46:20 AM
"ஜெயலலிதா தொடங்கிய கட்சியும், சின்னமும் எங்கு இருக்குமோ? அங்கு தான் நானும் இருப்பேன்." - நம் கண்முன்னால் சரித்திரம் எப்படி மாறுகிறது. ஜெயலலிதா தொடங்கிய காட்சியாம்!