Add1
logo
காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்கள் வெறி செயல் 40 போலீஸ் அதிகாரிகள் தலை துண்டிப்பு || தமிழ் மொழிக்காக போராட முன்வரவேண்டும் - ராமதாஸ் || அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது - திருமா பேட்டி || தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சிக்காதீர்கள் மத்திய அரசுக்கு - வைகோ கடும் எச்சரிக்க || ராம்ஜெத்மலானி உடல் நலம் குறித்து விசாரித்தார் - வைகோ (படங்கள்) || தார்சாலை பணி ஈடுபட்டோரை வனத்துறையினர் தாக்கியதால் பரபரப்பு || மணல் குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் திடீர் முற்றுகை || கல்லூரி உதவி பேராசிரியர் மீது போலீசார் விசாரணை || ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் கண்ணீர் கதறல் என்னை ஆர்ப்பரித்து ஆனந்தப்பள்ளு பாடவைக்கிறது ஏன்? || பட்டப்பகலில் துணிகரம்.. ஆலங்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி சங்கிலி பறிப்பு (படங்கள்) || கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி 20 வது ஆண்டு விழா || மழை மற்றும் உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை || கோவில்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுக்கை ||
முக்கிய செய்திகள்
அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது - திருமா பேட்டி
......................................
ஆபாச ஆடியோ - கேரள அமைச்சர் ராஜினாமா
......................................
தமிழக பாஜக தலைவர் பதவி- டெல்லி முடிவு!
......................................
ஆர்கேநகர் பட்டுவாடா- விவேக், மகாதேவன் தீவிரம்
......................................
அமித்சாவின் பேச்சுக்குப் பின்னர் அதிமுக சின்னம்!
......................................
போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலேயே கட்டுக்கட்டாக பணம் பதுக்கல்: மதுசூதனன் பரபரப்பு குற்றச்சாட்டு
......................................
ஒரு விளக்கு MGR. இன்னொரு விளக்கு ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
......................................
மிரட்டிய ஓ.பி.எஸ். அணி - மிரட்டுபோன தினகரன்
......................................
தொட்டுக்கூட பார்க்க முடியாது: ஸ்டாலின்
......................................
19 பேர் வாபஸ் வாங்கினால் மின்னனு வாக்குப்பதிவு: இல்லையேல் வாக்குச்சீட்டு முறை
......................................
ஓ.பன்னீர்செல்வமும், தம்பித்துரையும் இணக்கமாகவே உள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன்
......................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
......................................
ஒரு ஓட்டு கூட விழாது... டி.டி.வி.தினகரனுக்கு மதுசூதனன் சவால்
......................................
தினகரன் மீது - சசிகலா பாய்ச்சல்
......................................
திமுக வரலாறு குறித்த நூலை ஸ்டாலின் வெளியிட்டார் (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (8:5 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (8:5 IST)


மாஃபியா கும்பலை - தாது மணல் மாஃபியா கும்பல் சந்திப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை: மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திங்கள்கிழமை (20-03-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
 
செய்தியாளர்: திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கப்பட்டத்தை சபாநாயகர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவா?
 
ஸ்டாலின்: நாங்கள் அப்படி நினைக்கவில்லை. ஒருவேளை நீங்கள் அப்படி நினைப்பதால் எங்களுக்கும் சந்தேகம் வருகிறது.
 
செய்தியாளர்: டிடிவி தினகரனை வைகுண்டராஜன் நேரில் வந்து சந்தித்து இருக்கிறாரே?
 
ஸ்டாலின்: மாஃபியா கும்பலை, தாது மணல் மாஃபியா கும்பல் வந்து சந்திப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
 
செய்தியாளர்: ஆர்.கே.நகரில் ஏற்கனவே பெரியளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுவது பற்றி தேர்தல் ஆணையத்தில் முறையிடுவீர்களா?
 
ஸ்டாலின்: தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே இது சம்மந்தமாக பல புகார்கள் தெரிவித்து இருக்கிறோம்.
 
செய்தியாளர்: ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவீர்கள்?
 
ஸ்டாலின்: வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு பிரச்சாரம் தொடங்கப்படும்.
 
செய்தியாளர்: ஏரிகள் உள்ளிட்ட நீராதாரங்களை முறையாக தூர் வாரப்படாத காரணத்தால், அவை குறைந்து விட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்களே?
 
ஸ்டாலின்: மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்தில் இதை தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த ஆட்சி அதுபற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அவர்களுடைய கவலையெல்லாம் குற்றவாளியாக இருக்கக்கூடிய சசிகலாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பினாமி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் மட்டும் தான் உள்ளது. மக்களை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.
 
செய்தியாளர்: தேனியில் நியூட்ரினோ திட்டத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளதே?
 
ஸ்டாலின்: அது நியாயமானதாக இருக்கும்போது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.
 
செய்தியாளர்: சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் தற்போதைய நிலை என்ன?
 
ஸ்டாலின்: நாங்கள் அதனை கோரியிருக்கிறோம். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய அன்றே இதனை நான் கேட்டபோது, இந்தக் கூட்டத்தொடரிலேயே எடுத்துக் கொள்வதாக உறுதிமொழி தந்திருக்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :