Add1
logo
சென்னையில் தமிழர் உரிமை மாநாடு! (படங்கள்) || தமிழக காவல்துறைக்கு நிலையான தலைமை இயக்குனரை உடனே நியமிக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல் || அரசியல் வியாபாரி - இன்னும் போஸ்டர் ஒட்டியாகவே இருக்கிறார்: முன்னாள்-இந்நாள் மந்திரிகள் மோதல் || பொதுச்செயலாளர் யார்? எடப்பாடி பழனிச்சாமி மனம் திறக்க வேண்டும்: தங்கத் தமிழ்செல்வன் பேட்டி || அதிமுகவில் இருந்து தினகரன் ஒதுங்கி இருக்க வேண்டும்: எம்.பி கோ.அரி வலியுறுத்தல் || தம்பிதுரை மூலமாக பிரதமர் மோடி சசிகலாவிடம் ஆதரவு கோரினார்: எம்.எல்.ஏ வெற்றிவேல் || கூவத்தூரில் 2 நாட்கள் சசிகலா இல்லையென்றால் இந்த ஆட்சியே இல்லை: டி.டி.வி தினகரன் தரப்பு எச்சரிக்கை! || ஜெ. வழியில் எடுக்கப்பட்ட முடிவு: ஓ.பி.எஸ் விளக்கம் || ரூ.30 கோடி பேரம் பேசினார்கள்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு || ஆக்கிரமிப்பில் இருந்த குளத்தை மீட்ட ஊர்ப்பொதுமக்கள், மக்களதிகாரம் அமைப்பினர்!(படங்கள்) || கருகலைப்பிற்கு அனுமதிக்கபட்ட பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மருத்துவமனை முற்றுகை! || போதைப் பொருள் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: சென்னை கமிஷனர் விஸ்வநாதன் || சித்திரவதை தாங்காமல் திருநங்கைகள் தற்கொலை - போலீஸ் விசாரணை! ||
சிறப்பு கட்டுரை
பெண்கள் முன்னேற்றம் - பா.ஜ.கவின் அக்கறையா, அரசியலா?
 ................................................................
எங்கள் சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்குவோம்!
 ................................................................
மெல்பர்னில் மொய்விருந்து
 ................................................................
அழகென்பது பெண்களுக்கு மட்டும்தானா?
 ................................................................
தந்தையர் தினத்தின் அன்னை: ஒரு பெருமைமிக்க மரபு சொல்லும் கதை..!
 ................................................................
பாஜக அரசின் தோலை உரிப்பதுதான் எங்கள் பணி: வேல்முருகன் பிரத்யேக பேட்டி
 ................................................................
காலா - இவரா... அவரா...?
 ................................................................
சமூக வ(தந்தி)லைதளங்கள்..!
 ................................................................
வீட்டை விட்டு வெளியே வரும் வாய்ப்பே போய்விடும்: வேதனையில் மாற்றுத்திறனாளிகள்
 ................................................................
இணையதளத்தில் தி.மு.க. புதிய வியூகம்! -பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி
 ................................................................
இனி நாய் வளர்க்கிறது அவ்வளவு ஈஸியில்ல..!
 ................................................................
இந்தியாவில் குற்றம்...இங்கிலாந்தில் சொர்க்கம் - விஜய் மல்லையாவின் சீனியர்கள் !!!
 ................................................................
சந்திரபாபு, அசோகனை பழி வாங்கினாரா எம்.ஜி.ஆர்.
 ................................................................
பிளாஸ்டிக்கால் செய்யப்படும் உணவுகளா? வதந்திகளில் மூழ்கும் சமூகம்!
 ................................................................
ரஜினி மாஸ் எடுபடுமா? -நக்கீரன் சர்வே...!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, மார்ச் 2017 (19:15 IST)
மாற்றம் செய்த நாள் :13, மார்ச் 2017 (19:18 IST)




மிழகத்திற்கே தலைமை மருத்துவமனையாக விளங்கும் சென்னை அரசு இராஜீவ்காந்தி மருத்துவ... கேன்சர் நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்காமல் உயிருக்கு உலை வைப்பதாக "ஷாக்' கொடுக்கிறார்கள் டாக்டர்களே!

மேலும் நாம் விசாரித்தபோது... ""ஒன்பதாவது படிக்கிறேண்ணா. கழுத்துக்கிட்ட கட்டிமாதிரி வந்துடுச்சு. செக் பண்ணிப்பார்த்தப்போதான் கேன்சர்னு தெரியவந்தது. இப்போ காலில் பரவிடுச்சு. சென்னையில பெரிய ஹாஸ்பிட்டல்னா அது இராஜீவ்காந்தி ஹாஸ்பிட்டல்தான். ஆனா, பலதடவை ட்ரீட்மெண்ட் தடைப்பட்டுக்கிட்டே இருக்கு. கேட்டா, கரண்ட்மெஷின் (புற்றுநோய்  கதிர்வீச்சு சிகிச்சை கருவியைத்தான் கரண்ட்மெஷின் என்று சொல்கிறான்) ரிப்பேரு,… ஒருவாரம் ஆகும்னு ட்ரீட்மெண்டை தள்ளி வெச்சிடுறாங்க. எனக்கு என்ன ஆகுமோன்னு பயமா இருக்குண்ணா...''’என்று கதறுகிறான் சிறுவன் ஜெயக்குமார். 

பக்கத்து பெட்டிலுள்ள 35 வயது வெங்கடேஷுக்கு தலையில் கேன்சர் கட்டி. கதிர்வீச்சு சிகிச்சை கிடைக்காமல் குமுறுகிறார்.



65 வயது ராஜுவுக்கு கேன்சர் வந்து நாக்கில் ஓட்டையே விழுந்து விட்டது. ""நான்கு வாரமாகியும் 7 தடவைதான் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது'' என்கிறார் அவரது மனைவி காந்தா. சுப்பிரமணி என்பவர், ""தொண்டையில் கேன்சர். 32 முறை கதிர்வீச்சு சிகிச்சை அளித்திருக்கவேண்டும்; ஆனால், கதிர்வீச்சு மெஷின் ரிப்பேரால் 6 முறைதான்  வைக்கப்பட்டிருக்கிறது'' என்கிறார். கணேசனுக்கும் மூர்த்திக்கும் இதே நிலைதான். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கேன்சர் நோயாளிகளுக்கு சரியான நேரத்திற்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்தது.

"சிகிச்சை தாமதமாவதால் உயிருக்கே ஆபத்தாகிவிடுமே?' என்று புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சைத்துறை (Department of Radiation Oncology) டாக்டர்களிடம் நாம் கேட்டபோது, “""புற்று நோய்க்கு சிகிச்சையளிக்க இப்போது தனியார் மருத்துவமனைகளில் அதிநவீன லினெக் (LINAC) எனப்படும்  Linear Accelerator கருவி வாங்கப்பட்டு, சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

அதே கருவியை அரசு இராஜீவ்காந்தி மருத்துவமனைக்கும் வாங்கவேண்டும் என்று கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக ரேடியோதெரபி பேராசிரியர்கள் போராடியதால் அதற்கான, புதிய கட்டமைப்பு கட்டிடமும் கடந்த வருடம் இங்கு கட்டப்பட்டுவிட்டது. ஆனால் கருவி இன்னும் வாங்கப்பட வில்லை. கமிஷனுக்காக, 22 வருட மிக... மிக...  பழமையான  கோபால்ட் ரேடியேஷன் மெஷினைத்தான் (cobalt radiation machine) இன்னமும் வைத்திருக்கிறார்கள்.



ஒரு மெஷின் 10 வருடங்கள் ஆகிவிட்டாலே அதன் செயல்படும் தன்மை குறைந்துவிடும். மேலும், இந்த மெஷினில் ஒருநாளைக்கு  சுமார் 50 லிருந்து 60 பேருக்கு சிகிச்சை அளிக்க லாம். ஆனால், 22 வருடங்களுக்கு மேலாக இருக்கும் தரம்குறைந்த கோபால்ட் ரேடியேஷன் மெஷின் மூலம் ஒருநாளைக்கு 200 கேன்சர் நோயாளிகளுக்கு இங்கு  சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், இன்னும் செயல்படும் தன்மை குறைந்து அடிக்கடி ரிப்பேர் ஆகிவிடுவ தால்தான் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை யளிக்க முடியாமல் பரிதாபமாக இறந்துபோகிறார்கள்.

இதைவிடக்கொடுமை, அரசு உதவிபெறும் தனியார் மருத்துவமனையான அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு  120 கோடி ரூபாயை 110 விதியின் கீழ் ஜெயலலிதா ஒதுக்கியதன் மூலம், அதிநவீன கருவியான Linear Accelerator  மெஷினை வாங்கிவிட்டது  அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட். அப்படியென்றால், தனியார் மருத்துவமனைக்கு போகும் பணக்காரர்கள் வாழவேண்டும்.… அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள் சாகவேண்டும் என்பதுதானே தமிழக அரசின் கொள்கை முடிவு? தமிழகத்திலேயே வரு டத்திற்கு 30-க்கு மேற்பட்ட புற்றுநோய் கதிர்வீச்சுத் துறை முதுநிலை மாணவர்கள் படிப்பது சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில்தான். ஆனால், எம்.சி.ஐ. விதிக்கு புறம்பாக இங்கு அதிநவீன கருவி இல்லாமல் எப்படி புற்றுநோய் சிகிச்சைக்கான தரமான மருத்துவ நிபுணர்களை உருவாக்க முடியும்?''’என்று நியாயமான கேள்வியை எழுப்புகிறார் கள்.

புதிய கருவிகளை வாங்கிக் கொடுக்கவேண்டிய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேனேஜிங் டைரக்டர் அபூர்வா ஐ.ஏ.எஸ்.ஸை தொடர்புகொண்டு  கேட்டபோது, ""சுமார் 15 கோடி ரூபாய் ஆகும். புதிய "லினெக்' புற்றுநோய் கருவிக்கு மூன்று முறை டெண்டர் விட்டும் யாரும் கலந்து கொள்ளவில்லை. மீண்டும் டெண்டர் விட இருக்கிறோம்'' என்றார்.

அதற்குள், அபூர்வாவிற்குப் பதிலாக உமாநாத் ஐ.ஏ.எஸ். மாற்றப் பட்டுள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கரை தொடர்புகொண்ட போது...  ""விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் உறுதியாக.

"கேன்சர் வந்தால் தனியார் மருத்துவ மனைக்குப்போங்கள், எங்களிடம் வந்தால் கொன்றுவிடுவோம்' என்று சொல்லாமல் சொல்கிறதோ சுகா தாரத்துறை!

-மனோசௌந்தர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Srinivasan Date :3/15/2017 7:09:42 PM
ஐயா உங்களது கட்டுரை நல்ல நோக்கதுடன் எழுதப்பட்டிருந்தாலும் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் பற்றிய விமர்சனங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அவர்களது சேவை தன்னலமற்ற ஈடு இணை இல்லாதது.
Name : Villavarayar Date :3/14/2017 10:34:40 AM
அபாயகரமான தொழிற்சாலைகள் அனைத்தையும் ஒழித்துவிட்டு, இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவதே உடல், மன நலன்களைக் காக்கும்! சுரண்டல்வாதிகளின் "வளர்ச்சி" ஏமாற்றுக் கூவலில் வாத்துமடையர்களாக மயங்கினாலோ, கூலிக்கு அவர்கள் சார்பில் மாரடித்தாலோ, உனக்குக் கிடைக்கும் வளர்ச்சி, "கழலை" மற்றும் "கட்டி" வகை வளர்ச்சிகளே! "ஓட்டை", "இராசபிளவை" வகை வளர்ச்சிகளும் ஏற்படும்! இதனால் பலரின் குடும்பங்கள் சந்ததி இன்றி அழியும்! "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி, அதனால் அவனை ஒழித்துக்கட்டு" என்ற பாணியில் "சீமைக்கருவை" யிடம் வீரத்தைக் காட்டாமல் உண்மையான சூழ்நிலைச் சீர்கேடுகளுக்கு எதிராக போராடி வெல்வதே மேற்சொன்ன வளர்ச்சிகளுக்கு முடிவாக அமையும்! சீமைக்கருவை உச்சநீதி மன்றம் சென்று வாதாட வக்கில்லாதது என்பதால் வெற்றிக்கொடி நாட்டிவிட்டாய்! இதுபோல் வேறு ஏதாவது அழிவுத்திட்டத்தை உன்னால் நிறுத்தமுடியுமா என்று சிந்தித்துப் பார்! அப்பாவி ஒருவனை திருவிழாக் கூட்டத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கல்லெறிந்து மகிழ்வதுபோல் வக்கில்லாத சீமைக்கருவையை வெட்டிவீழ்த்துகிறாய்! இதனால் ஏற்படப் போகும் சீர்கேட்டை விரைவில் காண்பாய்!