Add1
logo
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு ஒத்திவைப்பு || அமிர்தசரஸ் ஏர்போர்ட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது || அமைதிப்படையின் 2 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. விருது || கேரள முதல்வரை பாராட்டிய - கமல்ஹாசன் || சென்னையில் கொளுத்தும் கோடை வெயில்! (படங்கள்) || மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி - இருவர் கைது || காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு || கோவில் திருவிழாவில் கலவரம் வெட்டு காயங்களுடன் 10, க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதி || இடிதாக்கி பசு மாடு பலி || மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு || கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு || பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு || ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவன் நீரில் முழ்கி பலி ||
முக்கிய செய்திகள்
நீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி
.............................................
எங்களுக்கு தேவை பணம்.. பணம்.. பணம்..! அ.தி.மு.க. (அம்மா அணி) எம்.எல்.ஏ.க்கள் கறார்!
.............................................
நீட் தேர்வை வெளியிட இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
.............................................
ரஜினிகாந்த் வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
.............................................
புதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு தீவைப்பு
.............................................
பள்ளிக் கல்வித் துறையில் சிறந்த கல்வியாளர்கள் மூலம் விவேகமான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: ஸ்டாலின்
.............................................
ரஜினிக்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு
.............................................
51 நாளாக சிறையில் இருந்த வைகோவுக்கு ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
.............................................
தனி அணியாக செயல்படவில்லை: தோப்பு வெங்கடாசலம்
.............................................
செல்ல வேண்டிய தொலைவு மிக அதிகம்... வேகம் தேவை! ராமதாஸ்
.............................................
3–வது முறையாக நரேந்திர மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
.............................................
சட்டமன்ற வைரவிழாவிற்கான அழைப்பிதழ் - கலைஞரிடம் வழங்கிய மு.க.ஸ்டாலின்
.............................................
அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் - மு.க.ஸ்டாலின்
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (15:44 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (15:49 IST)


ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் மாநில ஆட்சியைக் கவிழ்க்க பி.ஜே.பி. இரட்டை வேடமா? கி.வீரமணி



ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் பி.ஜே.பி. இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கி, மாநில ஆட்சியைக் கவிழ்க்கலாமா? என்று பி.ஜே.பி. நினைக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று (12.1.2017) நடைபெற்ற - கீழடி தொல்பொருள் ஆய்வை முடக்கியதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

செய்தியாளர்: திராவிடர் நாகரிகத்தை மறைப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது என்று சொல்கிறீர்கள்; உங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பீர்களா?

கி.வீரமணி: சட்ட ரீதியான நடவடிக்கையை நீதிமன்றங்களில் நடத்துவோம். சட்டத்திற்கு அப்பாற்பட்டு, அதேநேரத்தில், சட்டத்தை கையில் எடுக்காத - வரம்பிற்குட்பட்டு வெளியில் போராட்டங்களை நடத்துவோம். எனவே, நீதிமன்றத்திலும் இதற்குரிய பரிகாரம் தேடப்படும். அதைவிட மக்களுடைய ஆதரவு இருப்பதை காட்டுவதற்காக, மக்கள் மத்தியிலும் இந்தப்  பிரச்சினையை எடுத்துச் செல்வோம்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்பற்றி உங்கள் கருத்து....

செய்தியாளர்: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதே, அதுபற்றி உங்கள் கருத்து?

கி.வீரமணி: இப்பொழுது பந்து யாரிடத்தில் இருக்கிறது என்றால், ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறும்; சாதகமான தீர்ப்பு  வரும் என்றெல்லாம் சொன்ன பி.ஜே.பி.யினுடைய தோட்டத்திலே பந்து இருக்கிறது. எப்படியும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு எப்படியும் நடந்தே தீரும் என்று நம்முடைய முதலமைச்சர் சொல்லியிருக்கிறார், தமிழக அரசின் சார்பாக.

எனவே, இந்த இரண்டு பேருடைய தோட்டத்தில் அந்தப் பந்து இருக்கிறது. அதனை எப்படி அடிக்கப் போகிறார்கள் என்பது மிக முக்கியம். வேண்டுமென்றே இந்த உணர்வு இளைஞர்கள் மத்தியில்கூட மிக அதிகமாக சில நாள்களாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு,  இந்த நிலைக்குச் சரியானப் பரிகாரம் தேடவில்லையானால், இதனை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் நாங்கள் ஆதரிப்போம் என்று தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. தலைவர் ஒருவர் சொல்கிறார் என்றால், அவரே சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துங்கள் என்று மறைமுகமாக சொல்கிறார். அதன்மூலமாக தமிழக அரசிற்கு, ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்குவதற்கு, இதுவே ஒரு சிறந்த திட்டமாக பா.ஜ.க. உருவாகியிருக்கிறதோ என்கிற சந்தேகம், எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, பொதுவானவர்களுக்கும் இருக்கிறது.
எனவே, இதற்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு - மோடி அரசுக்கு உண்டு.  அதேநேரத்தில், இந்த ஆண்டு உறுதியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று சொன்ன நம்முடைய முதலமைச்சருக்கும் உண்டு.

எனவே, அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேளுங் கள்; விடை என்னவென்று பாருங்கள். இதில் அரசியல் உள்நோக்கமும் இருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. இந்தக் காளை மாட்டின்மூலமாக கவிழ்த்துவிடலாம் என்கிற சந்தேகம் இப்பொழுது வந்திருக்கிறது.

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை சரியாகக் கையாள்கிறதா தமிழக அரசு

செய்தியாளர்: தமிழக அரசு இந்தப் பிரச்சினையை சரியாகக் கையாண்டு இருக்கிறதா?

கி.வீரமணி: தமிழக அரசு சரியாகக் கையாளப் போகிறதா? இல்லையா? என்பது இனிமேல்தான் தெரிய வரும். இதுவரையில் கையாண்டது முக்கியமல்ல; இனிமேல் சரியாகக் கையாளப் போகிறதா? என்பதுதான் முக்கியம். ஏனென்றால், உறுதியாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார் முதலமைச்சர்.  அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவரிடம் கேளுங்கள்.
மக்களுக்காகத்தான் சட்டம்; சட்டத்திற்காக மக்கள் அல்ல. 

செய்தியாளர்: பல்வேறு அமைப்பினர் தடையை மீறி ஜல்லிக் கட்டினை நடத்துவோம் என்று சொல்லியிருக்கிறார்களே?

கி.வீரமணி: மக்களுடைய உணர்வுகள்தான் முக்கியம். மக்களுக்காகத்தான் சட்டம்; சட்டத்திற்காக மக்கள் அல்ல. தலைக்குத்தான் குல்லா; குல்லாவிற்காக தலை இல்லை.

இவ்வாறு கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :