Add1
logo
நாகா்கோவில்: ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் குடியிருப்பு திறப்பு || பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை || பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி அரசு திசைதிருப்பும் தந்திரம்: ஸ்டாலின் கண்டனம || குலசேகர பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்: மு.க.ஸ்டாலின் || அனைத்திந்திய ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் அநீதி! அன்புமணி கண்டனம் || ஜெ. வழியில் திட்டத்தை நிறைவேற்றுவோம்: கடம்பூர். ராஜீ || முயல் வேட்டையில் ஈடுபட்ட விவசாயிக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் || சதம் அடித்த வீரர் மயங்கி விழுந்து மரணம் || பஹரைனில் கலைஞரின் 94வது பிறந்த நாள் விழா || இந்திய பேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி சாம்பியன்! || உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து: 2 பேர் உயிரிழப்பு || ஆளுனர் மாளிகை: மான்கள் வசிப்பிடத்தை அழித்து போலோ விளையாட்டுத் திடலா? ராமதாஸ் || டேங்கர் லாரியில் தீ விபத்து: 120 பேர் பலி ||
தமிழகம்
நாகா்கோவில்: ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் குடியிருப்பு திறப்பு
 ................................................................
பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி அரசு திசைதிருப்பும் தந்திரம்: ஸ்டாலின் கண்டனம
 ................................................................
குலசேகர பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
அனைத்திந்திய ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் அநீதி! அன்புமணி கண்டனம்
 ................................................................
ஜெ. வழியில் திட்டத்தை நிறைவேற்றுவோம்: கடம்பூர். ராஜீ
 ................................................................
முயல் வேட்டையில் ஈடுபட்ட விவசாயிக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம்
 ................................................................
சதம் அடித்த வீரர் மயங்கி விழுந்து மரணம்
 ................................................................
பஹரைனில் கலைஞரின் 94வது பிறந்த நாள் விழா
 ................................................................
உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து: 2 பேர் உயிரிழப்பு
 ................................................................
ஆளுனர் மாளிகை: மான்கள் வசிப்பிடத்தை அழித்து போலோ விளையாட்டுத் திடலா? ராமதாஸ்
 ................................................................
எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டப்பட்டு போரூர் மேம்பாலம் திறப்பு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - இ.பி.எஸ்க்கு அமைச்சர்கள் அழைப்பு
 ................................................................
தமிழக முதல்வராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு
 ................................................................
28 தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர்க்கு: முதல்வர் பழனிசாமி கடிதம்
 ................................................................
மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் முதியவர் பலி
 ................................................................
பாஸ்போர்ட் இந்தியிலும் வழங்கப்படும் மத்திய அரசின் அறிவிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்
 ................................................................
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்
 ................................................................
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
 ................................................................
மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - பேரூராட்சி ஊழியர் சங்கம் தீர்மானம்
 ................................................................
சாலையில் யானை நின்றதால் கிராமத்திற்கு செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
 ................................................................
அலுவல ஊழியர்களின் அலட்சியத்தால் கை மாறிய உதவி தொகை
 ................................................................
என் நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
 ................................................................
குற்றாலத்தில் மீண்டும் சீசன் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
 ................................................................
ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு -கூலித்தொழிலாளி கைது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (15:29 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (16:3 IST)



அரசு துணிச்சலுடன் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் -ஈஸ்வரன்


கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் Er.ஈஸ்வரன் கோரிக்கையில்

"உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசிற்கு இருக்கின்ற துணிச்சல், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசுக்கு இல்லையா?" என கேள்வி எழுப்பியுள்ள ஈஸ்வரன் மேலும் தனது அறிக்கையில்

"உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் மொத்த தமிழர்களுக்கும் ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையுள்ள வழக்கில் ஏதோ நேற்றுதான் இந்த வழக்கு தொடரப்பட்டதை போல தீர்ப்பு எழுதி கொண்டிருக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் சொல்வது மிகப்பெரிய ஏமாற்றுவேலை. ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் பொருளாதார ரீதியிலான உள்நோக்கத்தோடும், வெளிநாடுகளின் தூண்டுதலாலும் செயல்படுகிறார்கள் என்பதை உச்சநீதிமன்றம் புரிந்து கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தின் கருத்து தமிழர்கள் மீதும் தமிழக கலாச்சாரத்தின் மீதும் விழுந்த பேரிடியாகும். தண்ணீர் இல்லாமல் பயிர்களும், விவசாயிகளும் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் இது கருப்பு பொங்கல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் இது கசப்பு பொங்கலாய் மாறிவிட்டது.

தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வெடித்திருக்கிறது. இது இளைஞர்களும், மாணவர்களும் சம்மந்தப்பட்டது. இளைஞர்களும், மாணவர்களும் மற்றும் பொதுமக்களும் தெருவுக்கு வந்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் மட்டும் நடத்துகின்ற போராட்டமல்ல. 1960 -களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் போல ஒரு வேகமும், எழுச்சியும் தமிழகம் பூராவும் உருவாகியிருக்கிறது. மத்தியில் ஆளுகின்ற அரசு வருட கணக்கில் இதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டு வராமல் ஏமாற்றுகிறார்கள். இதற்கான சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிவிட்டால் உச்சநீதிமன்றம் எப்படி தடுக்க முடியும். தமிழக அரசு ஜல்லிக்கட்டு விஷயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதையும் உணர முடிகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை மத்திய அரசு என்ன செய்துவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும் கர்நாடக முதலமைச்சர் காவிரியில் தண்ணீரை திறக்க முடியாதென்று உறுதிப்பட பேசுகிறார். அந்த துணிச்சல் தமிழக அரசுக்கு வராதா, தமிழக முதலமைச்சருக்கு வராதா?. அந்த துணிச்சல் நமக்கு இருக்குமென்றால் தமிழக அரசு வாய் பேச்சு பேசாமல் நடவடிக்கைகளில் இறங்கி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். தமிழக பூராவும் ஒரு இடம் பாக்கி இல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஊக்கத்தை இப்போது நடக்கின்ற போராட்டங்கள் கொடுத்திருக்கின்றன. இதை தமிழக அரசு முன்னெடுத்து செல்ல வேண்டும்." என இவ்வாறு கூறினார்.

-ஜீவாதங்கவேல்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :