Add1
logo
ஆர்.கே. நகரில் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்க குவிந்த மக்கள் (படங்கள்) || மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி || ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்) || இந்தியருக்காக குண்டடி பட்டவரை கவுரவித்த டைம்ஸ் இதழ்! || ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர் || செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர் || மோடிக்கு முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அவசியம்! - மன்மோகன் சிங் தாக்கு || இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை || எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின் || ஆர்.கே. நகரில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்) || தஷ்வந்த்தை 13ஆம் தேதி ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! || ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? ஸ்டாலின் பதில் ||
தமிழகம்
ஆர்.கே. நகரில் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்க குவிந்த மக்கள் (படங்கள்)
 ................................................................
மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி
 ................................................................
ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர்
 ................................................................
செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர்
 ................................................................
இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை
 ................................................................
எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின்
 ................................................................
ஆர்.கே. நகரில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்)
 ................................................................
தஷ்வந்த்தை 13ஆம் தேதி ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு
 ................................................................
சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!
 ................................................................
ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? ஸ்டாலின் பதில்
 ................................................................
எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும், உருண்டு - பிறண்டாலும் அதிமுகவால் டெபாசிட் வாங்க முடியாது: ஸ்டாலின்
 ................................................................
வணிக நோக்கத்திற்காக மட்டும் பேனர் வைக்க அனுமதிக்க முடியாது! - ஐகோர்ட்
 ................................................................
திருமாவளவனை கண்டித்து தமிழிசை ஆர்ப்பாட்டம்
 ................................................................
பாரதியார் பெயரில் விருதுகள்
 ................................................................
குமரி மீனவர்களுக்கு ஆதரவாக பழவேற்காட்டில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
விறகு, சமையல் பாத்திரத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்த மக்கள் (படம்)
 ................................................................
தா.பாண்டியன் நலம் : விரைவில் வீடு திரும்புகிறார்
 ................................................................
ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். முன்னிலையில் அதிமுகவில் இணைந்த கல்லூரி மாணவர்கள்!
 ................................................................
கோவை: செக் மோசடி செய்ததாக கூறி மலேசியாவை சேர்ந்தவர் கைது
 ................................................................
மலைகள் தினம் - பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றிய மாணவர்கள்
 ................................................................
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - பாஜகவினர் மோதல்: 6 பேர் காயம்
 ................................................................
ஒக்கிப் புயல் : இழப்பீடுகளை உயர்த்திக் கொடுப்பதும் அவசியம் - கி.வீரமணி
 ................................................................
ஒய்வு பெற்றவர்களை மறு நியமனம் செய்ய முயல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
 ................................................................
காலி குடங்களுடன் கலெக்டரிடம் மனு அளித்த பெண்கள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (12:28 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (12:35 IST)


விவசாயத்தின் அழிவிற்கும், விவசாயிகள் மரணத்திற்கும் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர்.சி.ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விவசாயிகளுடைய மரணத்திற்கும் கருகிய பயிர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது, யானைப்பசிக்கு சோளப்பொறி, விவசாயிகளை வஞ்சிக்கும் கண்துடைப்பு இதை ஏற்கமுடியாது. இந்த அரசு விவசாயிகளை காப்பாற்றாது என்பதற்கு மீண்டும் ஒரு நிரூபணம் தான் இந்த அறிவிப்பு

கர்நாடக காங்-பி.ஜே.பியின் அடாவடியாலும், மோடி அரசின் துரோகத்தாலும் இந்த ஆண்டும் காவிரியில் தமிழகத்தின் தண்ணீர் பங்கீட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் தீர்வுகாண முடியாமல் திராணியற்று நிற்கின்றது. பருவ மழையும் பொய்த்ததால் தஞ்சை டெல்டா விவசாயம் கருகியது மட்டுமல்ல குடிநீருக்கே மக்கள் விலங்குகள் போல் அலையும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்து எச்சரிக்கின்றனர்.

ஆறுகள், ஏரி, குளம் கண்மாய் அனைத்தும் வறண்டுபோன நிலையில், வரைமுறையற்ற மணல் கொள்ளையால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விவசாயிகள் கடன் சுமையாலும், விளைச்சலுக்கு கட்டு்படியான விலை இல்லாமலும் அழிவின் விளிம்பில் நிற்கின்றனர். தமிழக அரசும், வேளாண்மை துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டலையோ, எச்சரிக்கையையோ, அறிவுறுத்தலையோ வழங்காதது கண்டனத்திற்குரியது. விவசாயத்தின் அழிவிற்கும், விவசாயிகள் மரணத்திற்கும் நேரடியாக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

உலகத்தார்க்கு சோறு போடும் உழவர்களுக்கு நன்றி செலுத்துவதுதான் உழவர் திருநாள். பெரும்பாலான விவசாயிகளின் வீடுகள் பயிரை இழந்து, சொந்தங்களை இழந்து, இழவு வீடாக மாறியுள்ள நிலையில் பொங்கல் விழா ஒரு கேடா?. நமது வீட்டில் இழவு விழுந்தால் பொங்கலை நாம் கொண்டாடுகிறோமா? கருப்பு தினமாக கருதி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

கர்நாடகாவும், கேரளாவும் உயிரிழந்த விவசாயிகளைக் கணக்கெடுத்து, வறட்சிப் பகுதிகளை பதிவு செய்து மத்திய அரசிடம் வறட்சி நிவாரணம் பெற்று விட்டது. தமிழக அமைச்சர்கள் காலில் விழுவதற்கும், கும்பிடுவதற்கும் ஒதுக்கும் நேரத்தை தவிர்த்து தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவேண்டும். இல்லை என்றால் பதவி விலக வேண்டும். அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராசன் விவசாயிகளின் மரணத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களின் எல்லா நிகழ்ச்சிகளையும் விவசாயிகள் புறக்கணிப்பதுடன் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் விவசாயத்தையும் விவசாயிகளையும் வாழ்விப்பதற்கு பதிலாக அவர்கள்
நிலங்களை கைப்பற்றி, அகதிகளாக நகரத்தை நோக்கி விரட்டுவது என்பதை கொள்கையாக வைத்திருக்கிறது. ஆற்றுமணல் கொள்ளை, மீத்தேன் திட்டம், பணமதிப்பு நீக்கம், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிக்காமல், அவற்றை அழித்தல் ஆகியவற்றினை அசுர வேகத்தில் செயல்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் போராடினாலோ அவர்களை போலீசை வைத்துத் தாக்கி, பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்துகிறது.

பாதிப்புகளை தடுக்க முயலாமல், வெள்ள பேரழிவிலும், வறட்சி பேரழிவிலும் மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் திட்டம் போட்டு செயல்படுகின்றனர். வறட்சி பாதித்துள்ள முக்கியப் பகுதியான நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் வழங்கவில்லை.

மேலும் தமிழகத்தில் வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை என பல மாவட்டங்களில் சம்பளப் பணம் வழங்கப்படவில்லை. தமிழக கரும்பு விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளாக சுமார் 2000 கோடி நிலுவைத் தொகையை வழங்கவில்லை. பெரம்பலூரில் சொசைட்டியில் பால் கொடுத்தவர்களுக்கு சொசைட்டி மூன்று மாதமாக நிலுவைத் தொகை வழங்கவில்லை. ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் எப்படி ஊழல் செய்யலாம், எப்படி கொள்ளையடிக்கலாம் எனப் போதைக்கு அடிமையான குடிகாரனாக மாறிநிற்கிறது.

இத்தகையவர்கள் விவசாயிகள் மரணத்திற்கும், கருகிய பயிர்களுக்கும் கண்ணீர் சிந்துவார்கள், பிரச்சினையை தீர்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இந்த நிலையில் மாற்று வழியை பற்றி சிந்திக்க வேண்டும் என தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் மீண்டும் மனு கொடுப்பது, கவர்ச்சி அறிவிப்புகளை கண்டு ஏமாறுவது, தானாக ஏதாவது நடக்கும் என விவசாயிகள் வெயிலில் ஏன் காத்திருக்க வேண்டும்? பாதிக்கப்பட்ட மக்கள்தான், நிவாரணம் கிடைக்கவும், நிரந்தரத் தீர்வு காணவும், போராடியாக வேண்டும். இது விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல என்பதைப் பிற மக்களுக்கு உணர்த்தினால் மட்டுமே விவசாயிகள் பிரச்சினைக்கு
தீர்வுகாண முடியும்.

கருகிய பயிர்களைக் கண்டோ, வாங்கிய கடனை நினைத்தோ தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைய வேண்டாம். இதில் உங்கள் தவறு ஏதுமில்லை. வங்கிக்கடன், கந்து வட்டிக் கடன், அரசின் நிவாரணம், இழப்பீடு என அனைத்தையும் நம்மால் எதிர் கொள்ள முடியும். மக்கள் அதிகாரம்தான் மாற்று என்பதை நாம் புரிந்து கொண்டால், செயல்படுத்தினால் இந்த நாட்டையும், மக்களையும், இயற்கை வளங்களையும் காக்க முடியும். ஏனென்றால் காக்க வேண்டிய அரசுகட்டமைப்பு தோற்றுப்போய்விட்டது.

உரிய நிவாரணம் கொடுத்து, விவசாயிகளை முழுமையாகக் காப்பாற்றும் வரை மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிரச்சாரம், பொதுக்கூட்டம், போராட்டம் என டெல்டா மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம் இவ்வாறு கூறியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :