Add1
logo
மெரினா இரவில் கொட்டும் பனியில் தொடர்ந்து போராடும் மாணவர்கள் (படங்கள்) || ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருவாரூரில் திமுகவினர் ரயில் மறியல் || தமிழ்நாடு கெட்டது என்னாலே.. : காங்கிரஸ் திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு || ஜல்லிகட்டு 4 வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. பீட்டா உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்த (படங்கள்) || நாகா்கோவிலில் மாணவா்கள் போராட்டம் || ஜல்லிக்கட்டுக்கு எதிராக முதலில் வழக்கு தொடர்ந்தவர் தமிழர் - பீட்டா || சாகித்ய அகாடமி விருது பெற்ற பொன்னீலனுக்கு-வைகோ பாராட்டு || மதுரையில் பஸ் இல்லாமல் அவதிபடும் பொது மக்கள் (படங்கள்) || புதுச்சேரியில் கடையடைப்பு ரயில், பஸ் மறியல் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. || கோவையில் சேவல் சண்டை, ரேக்ளா வண்டி ஊர்வலம் || சிவன் சிலை மற்றும் புலவர் நக்கீரர் சிலைகள் திறப்பு ஓராண்டு நிறைவு. கேக் வெட்டி கொண்டாட்டம் (படங்கள்) || தற்கொலைக்கு முயற்சித்த மாணவன் மருத்துவமனையில் அனுமதி || கோவை அருகே சேவல் சண்டை, நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த கிராம மக்கள் ||
தமிழகம்
மெரினா இரவில் கொட்டும் பனியில் தொடர்ந்து போராடும் மாணவர்கள் (படங்கள்)
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருவாரூரில் திமுகவினர் ரயில் மறியல்
......................................
ஜல்லிகட்டு 4 வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. பீட்டா உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்த (படங்கள்)
......................................
நாகா்கோவிலில் மாணவா்கள் போராட்டம்
......................................
ஜல்லிக்கட்டுக்கு எதிராக முதலில் வழக்கு தொடர்ந்தவர் தமிழர் - பீட்டா
......................................
சாகித்ய அகாடமி விருது பெற்ற பொன்னீலனுக்கு-வைகோ பாராட்டு
......................................
மதுரையில் பஸ் இல்லாமல் அவதிபடும் பொது மக்கள் (படங்கள்)
......................................
புதுச்சேரியில் கடையடைப்பு ரயில், பஸ் மறியல் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
......................................
கோவையில் சேவல் சண்டை, ரேக்ளா வண்டி ஊர்வலம்
......................................
சிவன் சிலை மற்றும் புலவர் நக்கீரர் சிலைகள் திறப்பு ஓராண்டு நிறைவு. கேக் வெட்டி கொண்டாட்டம் (படங்கள்)
......................................
தற்கொலைக்கு முயற்சித்த மாணவன் மருத்துவமனையில் அனுமதி
......................................
கோவை அருகே சேவல் சண்டை, நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த கிராம மக்கள்
......................................
அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்
......................................
சென்னை வரும் ரயில் ரத்து
......................................
கோவை - நாகர்கோவில் ரயில் ரத்து
......................................
லிட்டில் ஃப்ளவர் பள்ளி மாணவ மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் (படங்கள்)
......................................
ஜல்லிக்கட்டிற்கு அனைத்து தொழிற்சங்களும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் (படங்கள்)
......................................
ஜல்லிக்கட்டு நடத்த கோரி 3-வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களின் உடல்நிலை பாதிப்பு!
......................................
தென்மாவட்டங்கள் செல்லும் 9 ரயில்கள் ரத்து!
......................................
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் - ஆளுநர் நாளை சென்னை வருகிறார்
......................................
இரயில் மறியலை போலீஸ் ஹெலிகாப்டர் கேமிரா மூலம் கண்காணிக்கிறது (படங்கள்)
......................................
4 வது நாளாக ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம்
......................................
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ரயில் மறியல் போராட்டம்
......................................
மாட்டை வெட்டத் தடையில்லை. மாட்டைப் பிடிக்கத் தடையா! ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கடையடைப்பு. மறியல்!
......................................
கொட்டும் மழையில் போராட்டம்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (11:8 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (11:8 IST)



தேசியப் பேரிடர் மீட்பு நிதியில் இருந்து
தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க வேண்டும்! வைகோ


நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் வைகோ கோரிக்கை

இன்று (2017 ஜனவரி 12 ஆம் தேதி) மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ டெல்லி, 2 கிருஷ்ண மேனன் மார்க் சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் காலை ஒன்பது மணிக்கு நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 25 நிமிடங்கள் நீடித்தது.



அப்போது, தமிழகத்தில் நிலவுகின்ற வரலாறு காணாத வறட்சியால் தமிழக மக்களுக்கு வைகோ ஏற்பட்டு இருக்கின்ற தாங்க முடியாத வேதனையையும் துன்பத்தையும், அமைச்சரிடம் துயரத்தையும் எடுத்துரைத்தார். பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை, பொதுமக்களுக்குக் குடிதண்ணீரும், கால்நடைகளைப் பராமரிக்க நீரும் இல்லாத நிலைமையை விளக்கமாக எடுத்துக்கூறி, வறட்சி மாநிலமாகி விட்ட தமிழகத்திற்கு, தமிழக அரசு வேண்டுகிற நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கீழ்க்கண்ட கோரிக்கைக் கடிதத்தை நிதி அமைச்சரிடம் தந்தார்.

“இந்தியாவில் தலைவிரித்து ஆடிவரும் ஊழல் நடவடிக்கைகளை, கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று 2016 நவம்பர் 8 ஆம் தேதி இந்தியப் பிரதமர் அறிவித்ததையும், அதன் தொடர் நடவடிக்கைகளையும் நான் வரவேற்கின்றேன்.

கவலை தரும் தமிழகத்தின் வறட்சி நிலைமையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.
வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதை நீங்கள் அறிவீர்கள். 38 சதவிகித மழைதான் பெய்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டது இல்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும்கூட, கர்நாடக மாநிலம் தண்ணீரைத் திறந்துவிடாததால், தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பிரதேசம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.

மாநிலம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் குடிநீர்ப் பிரச்சினையை ஒரு மாதம்தான் தாக்குப்பிடிக்க முடியும். தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரமான மதுரையிலும் இதே நிலைமைதான். ஜனவரி 14 ஆம் தேதிக்குப் பின்னர் அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.

பயிரிட்டது எல்லாம் பாழானதால் 130க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்துள்ளனர். உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், கோடிக்கணக்கான விவசாயிகள் தாங்க முடியாத துன்பத்துக்கு ஆளாவார்கள். அதிகமான தற்கொலைகள் நிகழக்கூடும் என அஞ்சுகிறேன்.

தண்ணீர்ப் பற்றாக்குறையால் கால்நடைகளும் செத்து மடிகின்றன. ஒன்பது மாதம் கழித்துத்தான் அடுத்த பருவமழையை எதிர்பார்க்க முடியும். எனவே, உடனடியாகத் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, தேசியப் பேரிடர் மீட்பு நிதியில் இருந்து தேவையான நிதியை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டுகிறேன்.

நீங்கள் தாக்கல் செய்ய இருக்கின்ற 2017-18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் விதத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மற்றும் நவீன மயமான தண்ணீர்த் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.”

தமிழகத்தின் நிலைமையை கவனத்தில் எடுத்துக்கொண்டு மத்திய அரசு செயல்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வைகோவிடம் உறுதி அளித்தார்.”

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :