Add1
logo
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர்: கோவை கிங்ஸ் அணியிடம் தோற்றது காரைக்குடி காளை || உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி; இந்திய அணியை தோற்கடித்து 4வது முறையாக கோப்பையை வென்றது இங்கிலாந்து || உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்) || காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியை நல்ல கண்ணு பார்வையிட்டார் || சிபிஎம் செந்தொண்டர் பயிற்சிமுகாம் || உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்) || பாஜக ‘எள்’ என்றால் எடப்பாடி பழனிச்சாமி ’எண்ணெய்’ போல மாறிக் கொண்டிருக்கிறார்: ஸ்டாலின் || குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி || அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் : கமல் || மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி || வில்லன் போல செயல்படுகிறார் கிரன்பேடி : சீமான் குற்றச்சாட்டு || நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி || மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ் ||
தமிழகம்
காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியை நல்ல கண்ணு பார்வையிட்டார்
 ................................................................
சிபிஎம் செந்தொண்டர் பயிற்சிமுகாம்
 ................................................................
உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்)
 ................................................................
குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி
 ................................................................
மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி
 ................................................................
நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி
 ................................................................
மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ்
 ................................................................
நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி
 ................................................................
மனித சங்கிலி போராட்டத்தில் ம.நே.ம.க. பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
ஆசிரியர்களுக்கும் பயிற்சி –செங்கோட்டையன்
 ................................................................
கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு
 ................................................................
சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க கிருஷ்ணா நதி நீரை பெற நடவடிக்கை வேண்டும்: ஸ்டாலின்
 ................................................................
சேதுக்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு
 ................................................................
உலகின் அச்சானி உழவர்கள்: இயற்கை வேளாண் கருத்தரங்கில் விவசாயிகள் பெருமிதம்
 ................................................................
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
 ................................................................
தந்தையின் இறுதிச்சடங்கு: கதிராமங்கலத்தில் கைதான ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த ஐகோர்ட் கிளை
 ................................................................
நெடுவாசல் 125வது நாள் போராட்டத்தில் விஜயகாந்த்
 ................................................................
காவிரியில் நீரைப்பெற அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் - முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
 ................................................................
தனியார் மருத்துமனையை வாழ வைக்காதே... தமிழக அரசை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்
 ................................................................
பா.ம.க.வின் புதிய துணைப் பொதுசெயலராக முன்னாள் எம்எல்ஏ கண்ணையன்!
 ................................................................
ஹோட்டலை மதுபானக்கடையாக மாற்றும் ஆளுங்கட்சி! கொளுத்தி போட்ட செந்தில் பாலாஜி
 ................................................................
தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்போம்: கே.எம்.காதர் மொகிதீன்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களை வழிபட்ட மக்கள்
 ................................................................
விஜயகாந்தை எதிர்த்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை: பிரேமலதா பேச்சு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (9:51 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (9:51 IST)



கூட்டுறவுத்துறை சார்பில்
“பயோ மெட்ரிக்” கருவி கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல்;
உழியர்கள் போராட்டாம்


தமிழகம் முழுவதுமுள்ள கிராமங்களில் செயல்பட்டுவரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில், பொதுமக்கள் வருமானம், ஜாதி ஆகிய வருவாய்த்துறை வழங்கும் சான்றிதழ்களை பெற, இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றது.

இந்த மையங்களை கையாளும் அலுவலர்களுக்கு, விரல் ரேகை ஸ்கேன் செய்யும், பயோ மெட்ரிக் கருவி, சேலம் மாவட்டத்தில், 197 -தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன. அதில், ஊழல் நடந்திருப்பதாக கூறி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர்கள், தங்கள் பயோமெட்ரிக் கருவிகளை,  நேற்று, சேலம் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர்.



இதுகுறித்து, சேலம் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அனைத்து பணியாளர் சங்க தலைவர் மாரிமுத்து, செயலாளர் இராஜமாணிக்கம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“இ-சேவை மைய அலுவலர்களுக்கான பயோ மெட்ரிக் கருவி, 5,960 ரூபாய் பெற்றுக்கொண்டு வழங்கப்பட்டுள்ளது. அதன் அதிகபட்ச சில்லரை விலையை விட, 2,500 ரூபாய் கூடுதலாக பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்துள்ளது. அதனால், அந்த கருவிகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில், 197-கருவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஜன., 23-இல், கலெக்டர் அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாமக்கல் மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் கூறியதாவது:- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பொது சேவை மைய பயன்பாட்டிற்கு மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் ‘கைவிரல் ரேகை பதிவு எந்திரம்’ தேவையற்ற சூழ்நிலையில் வழங்கப்பட்டு உள்ளது. இதன் அடக்கவிலை ரூ.3,400 என அதன் அட்டை பெட்டியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.6 ஆயிரம் வரை விலை நிர்ணயித்து காசோலை பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.1½ கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

எனவே இதனை திரும்ப பெற வேண்டும். புதிய நவீன மயமாக்குதல் என்ற பெயரில் சங்க நிதியை மோசடி செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிகிறது. எனவே இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.” என்றார்.

பெ. சிவசுப்ரமணியன்

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :