Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி || சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை || சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு || மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு || நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி || 50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல் || மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய் || இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம்: யுனிசெப் தகவல் || பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் ! || 2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார் || அவசியம் ஏற்பட்டால் வட கொரியாவை அழிக்க அமெரிக்கா தயங்காது: டிரம்ப் எச்சரிக்கை || யுவராஜ் சிங் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் - விராட் கோலி ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி
 ................................................................
சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை
 ................................................................
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு
 ................................................................
மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு
 ................................................................
50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல்
 ................................................................
மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய்
 ................................................................
பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் !
 ................................................................
2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார்
 ................................................................
கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடுவது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தவர் மீது தாக்குதல்
 ................................................................
திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து!
 ................................................................
பெஹ்லு கானின் கொலை விசாரணை ஒரு ஏமாற்று வேலை: பாப்புலர் ஃப்ரண்ட்
 ................................................................
தில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெருநாள் சந்திப்பு
 ................................................................
மதுரை மற்றும் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் உரிமை முழக்க மாநாடு
 ................................................................
முன்விரோதம் காரணமாக குடிசைக்கு தீ வைப்பு
 ................................................................
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
 ................................................................
மாநில சுயாட்சியை வென்றெடுக்க சனநாயக சக்திகளே அணிதிரள்வோம் விடுதலைச்சிறுத்தைகள் அழைப்பு
 ................................................................
அண்ணாமலை பல்கலை கழக மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 21 வது நாளாக போராட்டம்
 ................................................................
ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு
 ................................................................
மருத்துவ கல்லூரி மாணவர்கள் 778 பேர் நீக்கம்:புதுவை அரசு உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை
 ................................................................
அனந்தபத்மநாபன் நியமன வழக்கு: அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
காவிரி மேலாண்மை வழக்கில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை - தமிழக அரசு வாதம்
 ................................................................
நடிகர் செந்தில், டிடிவியை கைது செய்ய தடை!
 ................................................................
மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முஹம்மது அபூபக்கர்
 ................................................................
திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (8:54 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (8:54 IST)


பொங்கலை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்-மு.க.ஸ்டாலின்

- தி.மு.க செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான  உறுதி

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோவூர் பகுதியில் இன்று (11-01-2017) மாலை “சமத்துவ பொங்கல்” விழா கொண்டாடப்பட்டது. இதில் தி.மு.க செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசிய விவரம் பின்வருமாறு:



சிறப்பான இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கக்கூடிய பெரியோர்களே, தாய்மார்களே, இந்த நிகழ்ச்சியில் நாமெல்லாம் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலே தன்னுடைய கலை நிகழ்ச்சிகளை பேரெழுச்சியோடு நடத்திக் காட்டியிருக்கும் கலை உலகத்தைச் சார்ந்த நண்பர்களே, கழக நிர்வாகிகளே, சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு இந்த சமத்துவ பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்கும் சிறப்பானதொரு வாய்பைப் பெற்றிருக்கிறேன். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைபடுகிறேன். அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் ஒப்புதலோடு, அவருடைய வாழ்த்துகளோடு, நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் என்ற அந்த பொறுப்பினை ஏற்று இந்த சமத்துவ பொங்கல் விழாவிலே நான் பங்குபெறுவதில் நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அதுவும் கோவூர் பகுதியிலே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று சொன்னால், இந்த கோவூரை இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. சமத்துவ பொங்கல் விழா இங்கே நடைபெறுகிறது என்ற காரணத்தால் மட்டுமல்ல, நான் குறிஞ்சி மலர் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த நேரத்தில், இந்த கோவூர் பகுதியிலே சில நாட்கள் தங்கி இந்த தெருக்களில் நான் சைக்கிளெல்லாம் ஓட்டி அந்த காட்சிகளெல்லாம் படமாக்கப்பட்டு, குறிஞ்சி மலர் தொடரிலே இடம் பெற்றது. அதுவும் என்னுடைய நெஞ்சிலே பசுமையான நினைவுகளாக ஆழமாக பதிந்திருக்கின்றது.

இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டுமென்று சொன்னால், என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு ஊராக இந்த கோவூர் பகுதி அமைந்திருக்கின்றது. உங்களோடு சேர்ந்து, இந்த ஊரின் மக்களோடு இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை நடத்துவதிலே நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். இன்றைக்கு சமத்துவ பொங்கலை நடத்துகிறோம் என்று சொன்னால் இந்த சமத்துவ பொங்கலை நடத்திட வேண்டுமென்று நம்முடைய தலைவர் கலைஞர் நமக்கு அறிவுறுத்தி, ஆணையிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பிலே மட்டுமல்ல எல்லா மதத்தை, இனத்தை, சமுதாயத்தை சார்ந்திருக்கும் அனைவரும் ஒருங்கிணைந்து நடத்திட வேண்டும், இந்த விழாவை ஜாதி மதங்களை ஒழித்து நடத்திட வேண்டுமென ஆணையிட்டார்கள். அதுமட்டுமல்ல தமிழ் புத்தாண்டு என்பது தமிழர் திருநாளாக இருக்கும் பொங்கல் திருநாள்தான் தமிழ்ப் புத்தாண்டாக நாம் நடத்திட வேண்டுமென ஆணை பிறப்பித்து அதை சட்ட வடிவமாக்கியவர் நம்முடைய தலைவர் கலைஞர்.

அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அந்த நிலையை மாற்றி விட்டார்கள் என்பது வேதனைக்குரிய ஒன்று. ஆனால் உறுதியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மீண்டும் நம்முடைய ஆட்சி தமிழகத்திலே உதயமாகிற நேரத்தில், தலைவர் கலைஞர் எந்த உணர்வோடு பொங்கலை தமிழர் திருநாளாக, தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டுமென்ற நிலையை ஏற்படுத்தி தந்தாரோ, அந்த நிலை மீண்டும் நிச்சயம் வர தான் போகிறது, அதை நாம் காண தான் போகிறோம், கொண்டாட தான் போகிறோம் என்பதை நான் இந்த நேரத்திலே குறிப்பிட்டுச் சொல்லி, அதுமட்டுமல்ல நேற்று காலையிலே மத்திய அரசில் இருந்து நாமெல்லாம் அதிர்ச்சியடையக் கூடிய வகையிலே ஒரு அறிவிப்பு வந்தது. என்ன அறிவிப்பு என்று சொன்னால், தமிழர் திருநாளாக இருக்கக் கூடிய பொங்கல் திருநாளானது கட்டாய விடுமுறை பட்டியலில் இல்லை. ஆக, விருப்ப விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையிலே ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

அந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் முதன்முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாம் அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டோம். அதன்பிறகு எல்லாக் கட்சியினுடைய தலைவர்களும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கக் கூடிய தமிழர் அமைப்புகளை சார்ந்தவர்களும் அதிர்ச்சிக்கு ஆளாகி அதை எதிர்த்தார்கள், கண்டித்தார்கள். உடனடியாக அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட வேண்டும், கட்டாய விடுமுறையை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்பது இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருக்கக்கூடியவர்கள் மட்டுமல்ல, உலகளவில் அமெரிக்காவில், சிங்கப்பூரில், மலேசியாவில் கூட அரசு விடுமுறையாக அதை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறது. ஆக, தமிழ்நாட்டில் இப்படியொரு மோசமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அதை மாற்ற வலியுறுத்தி மத்திய அரசிற்கு நாம் சுட்டிக் காட்டினோம்.  

அதுமட்டுமல்ல நாம் உடனடியாக ஒரு போராட்டத்தையும் அறிவித்தோம். வள்ளுவர் கோட்டத்திற்கு அருகிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்று நாம் அறிவித்தோம். அது நியாயமாக இன்று காலை பத்து மணியளவிலே நடந்திருக்க வேண்டும். ஆனால், நம்முடைய போராட்டத்தை அறிவித்ததற்கு பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்ப்பை பார்த்த பிறகு, ஒட்டுமொத்த தமிழர்கள் அனைவரும் கிளர்ந்தெழுதிருக்கக் கூடிய நிலையை பார்த்தப் பிறகு, மத்திய அரசு உடனடியாக தான் சொன்னதை திரும்ப பெற்றுக் கொண்டு,  கட்டாய விடுமுறை பொங்கல் திருநாள் அன்று வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது.

நேற்று மாலை அந்த செய்தி வந்த காரணத்தால் நாம் உடனடியாக அதை வரவேற்று, இதுப்போன்ற நிலை இனி வரக்கூடாது, சம்பந்தப்பட்டிருக்க கூடிய அதிகாரிகள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி, நாம் அதை சுட்டிக்காட்டி, நாம் நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்திருக்கிறோம் என்று சொன்னால், இதைத்தான் நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும், தமிழன் என்று சொல்லுகிற போது, தமிழ் இனத்திற்கு, தமிழ் மொழிக்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு, நம்முடைய பண்பாட்டிற்கு, எங்கேனும் ஒரு துளியேனும் ஒரு ஆபத்து வருகிறது என்று சொன்னால், அதை பொறுத்துக் கொண்டு, தமிழினம் பார்த்துக் கொண்டிருக்காது.

இந்த சமத்துவப் பொங்கல் திருவிழாவை கொண்டாடுகிற நேரத்தில் நான் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துகளை சொல்லிக் கொண்டாலும், இன்றைக்கு தமிழகத்தில் விவசாய பெருங்குடி மக்கள் எந்தளவிற்கு கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்,  எத்தனை பேர் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்கள் என்ற அந்த செய்தியையும் நம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எனவே, அவர்களுக்காக நமது வருத்தத்தை, ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டாலும், இந்த நிலையை உடனடியாக மாநிலத்தில் இருக்கக் கூடிய ஆட்சி தடுத்தாக வேண்டும்.

இதற்கு உரிய பரிகாரத்தை கண்டாக வேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, சமத்துவப் பொங்கல் கொண்டாடுகிற இந்த நேரத்தில் என்னுடைய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டுமென்று சொன்னால், நம்மை இயக்கிக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் சார்பில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகளை சொல்லி வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : tamilan Country : India Date :1/12/2017 11:17:28 AM
ஸ்டாலின் அவர்களே. தமிழ் புத்தாண்டு ஒங்க அப்பன் வீட்டு சொத்து இல்லை. பொங்கலை போல தலைமுறை தலைமுறை பாரம்பரியம். இது கூட தெரியாமல் அனாவசியமா ஏன்யா தலையிடறே. ஏட்டை புரட்டி பாரு. முழுசா 64 தமிழ் வருஷம் என்னெண்டு தெரியாம. அதை முதல்லே கத்துகிட்டுவ.