Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி || சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை || சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு || மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு || நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி || 50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல் || மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய் || இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம்: யுனிசெப் தகவல் || பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் ! || 2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார் || அவசியம் ஏற்பட்டால் வட கொரியாவை அழிக்க அமெரிக்கா தயங்காது: டிரம்ப் எச்சரிக்கை || யுவராஜ் சிங் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் - விராட் கோலி ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி
 ................................................................
சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை
 ................................................................
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு
 ................................................................
மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு
 ................................................................
50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல்
 ................................................................
மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய்
 ................................................................
பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் !
 ................................................................
2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார்
 ................................................................
கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடுவது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தவர் மீது தாக்குதல்
 ................................................................
திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து!
 ................................................................
பெஹ்லு கானின் கொலை விசாரணை ஒரு ஏமாற்று வேலை: பாப்புலர் ஃப்ரண்ட்
 ................................................................
தில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெருநாள் சந்திப்பு
 ................................................................
மதுரை மற்றும் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் உரிமை முழக்க மாநாடு
 ................................................................
முன்விரோதம் காரணமாக குடிசைக்கு தீ வைப்பு
 ................................................................
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
 ................................................................
மாநில சுயாட்சியை வென்றெடுக்க சனநாயக சக்திகளே அணிதிரள்வோம் விடுதலைச்சிறுத்தைகள் அழைப்பு
 ................................................................
அண்ணாமலை பல்கலை கழக மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 21 வது நாளாக போராட்டம்
 ................................................................
ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு
 ................................................................
மருத்துவ கல்லூரி மாணவர்கள் 778 பேர் நீக்கம்:புதுவை அரசு உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை
 ................................................................
அனந்தபத்மநாபன் நியமன வழக்கு: அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
காவிரி மேலாண்மை வழக்கில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை - தமிழக அரசு வாதம்
 ................................................................
நடிகர் செந்தில், டிடிவியை கைது செய்ய தடை!
 ................................................................
மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முஹம்மது அபூபக்கர்
 ................................................................
திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (8:36 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (8:36 IST)



முதல் அமைச்சரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது-இரா. முத்தரசன்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று திருச்சியில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் மாநில செயலாளர் இரா. முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வறட்சி நிலவுகிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதே இதற்கு காரணம். கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிந்தே போய்விட்டது. பயிர்கள் கருகியதை கண்டு அதிர்ச்சி அடைந்தும், தற்கொலை செய்தும் 200 விவசாயிகள் இதுவரை தங்கள் உயிரை மாய்த்து உள்ளனர்.

முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிலவரியை ரத்து செய்து இருக்கிறார். இதனை வரவேற்கிறோம். ஆனால் விவசாயிகள் வாங்கிய குறுகிய கால பயிர்க்கடன் மத்திய கால கடனாக மாற்றப்படும் என கூறி இருப்பது பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை தான் தந்து இருக்கிறது. எனவே இதனை மறு பரிசீலனை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நிவாரணத்தில் பாகுபாடு

விவசாய தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை ஆண்டு முழுவதும் அமல்படுத்தி தின ஊதியமாக ரூ,400 வழங்க உத்தரவிடவேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு மட்டும் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிர்ச்சியினால் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு என தெரியவில்லை. அதிர்ச்சியினால் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்கவேண்டும்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு

மத்திய அரசு உரிய சட்ட திருத்தம் செய்து இந்த ஆண்டே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். இல்லை என்றால் தன்னிச்சையாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டு விடும். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே தமிழக அரசின் செயல்பாடு மிகவும் மந்தமாக தான் உள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி வெளிப்படையாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.

ரகசியம் என்ன?

உதய் மின் திட்டத்தில் தமிழகம் ஏன் இணைந்தது என்பதற்கான காரணத்தை தமிழக அரசு விளக்கவேண்டும். மேலும் இலவச மின்சாரம், குடிசைக்கு ஒரு இலவச மின்விளக்கு திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படுமா? 3 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் உயருமா? என்ற சந்தேகங்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டு இருப்பதால் இதுபற்றியும் தமிழக அரசு விளக்கவேண்டும். முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை, அவர் எதிர்ப்பு தெரிவித்து பேட்டி கொடுத்த பின்னர் அமைதியாகி விட்டது போல் தெரிகிறது. இதன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன என்று தெரியவில்லை. அவர் ஏன் இதுவரை பணி நீக்கம் செய்யப்படவில்லை என்பதற்கான காரணமும் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

-ஜெ.டி.ஆர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :