Add1
logo
கதிராமங்கலத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் || ரயில்வேதுறையில் தரமற்ற உணவுப்பொருட்களை களைய வேண்டும் - வாசன் || நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது || பெட்ரோல், டீசல் இன்றைய விலை || பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் ஊட்டியில் பரபரப்பு || 6 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது || அரசு மருத்துவமனையை காலி செய்து தனியார் மருத்துமனையை வாழ வைக்காதே! சிபிஐ ஆர்ப்பாட்டம் || நெடுவாசல், கதிராமங்கலம் பதிவுகள் வெளிட்ட முகநூல் முடக்கம் || சசிகலாவை சிறை மாற்றம் செய்யச் சொல்லி வலியுறுத்துவீர்களா?: ஸ்டாலின் பேட்டி || நியூஸிலாந்து நாட்டில் வரலாறு காணாத கன மழை சாலையில் வெள்ள பெருக்கு || மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த குளங்களின் பட்டியல் || சென்னை சர்வதேச படகு போட்டியில் 117 போட்டியாளர்கள் பங்கேற்ப்பு || மத்திய அரசை வெளுத்து வாங்கிய தமிழாசிரியை ||
தமிழகம்
கதிராமங்கலத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
ரயில்வேதுறையில் தரமற்ற உணவுப்பொருட்களை களைய வேண்டும் - வாசன்
 ................................................................
நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
 ................................................................
பெட்ரோல், டீசல் இன்றைய விலை
 ................................................................
பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் ஊட்டியில் பரபரப்பு
 ................................................................
6 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது
 ................................................................
அரசு மருத்துவமனையை காலி செய்து தனியார் மருத்துமனையை வாழ வைக்காதே! சிபிஐ ஆர்ப்பாட்டம்
 ................................................................
நெடுவாசல், கதிராமங்கலம் பதிவுகள் வெளிட்ட முகநூல் முடக்கம்
 ................................................................
மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த குளங்களின் பட்டியல்
 ................................................................
மத்திய அரசை வெளுத்து வாங்கிய தமிழாசிரியை
 ................................................................
கணவன் நடத்தையில் சந்தேகம் - மர்ம உறுப்பை துண்டித்த மனைவி!
 ................................................................
ஜனாதிபதி தேர்தல் முடிவு: மதசசார்பற்ற கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளும் தருணம் - எஸ்.டி.பி.ஐ
 ................................................................
கனவரின் தந்தையின் இறுதி சடங்கிற்காவது விடுவிக்கவேண்டும் - சித்ரா கோரிக்கை
 ................................................................
ஆட்சியர் அலுவலகம் அருகே கத்தி குத்து; அதிமுக கவுன்சிலரின் கணவரிடம் விசாரணை!
 ................................................................
பாமகவில் இருந்து தமிழரசு விலகல்!
 ................................................................
தந்தையின் ஈமச் சடங்குகளில் பங்கேற்க ஜெயராமனை உடனே விடுதலை செய்ய வேண்டும்: வைகோ கோரிக்கை
 ................................................................
போராளி ஜெயராமனின் தந்தை காலமானார்!
 ................................................................
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ராட்சத பாய்லர்; மின் இணைப்பை நிறுத்தக்கோரி வழக்கு; டான்ஜன்கோ பதிலளிக்க உத்தரவு
 ................................................................
நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவ இடம் வழங்காத கல்லூரி- நீதிபதிகள் கண்டனம்
 ................................................................
அண்ணா பல்கலைகழகத்தில் முறைகேடு நடந்தாக கூறி சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
 ................................................................
பாக்கெட் தண்ணீர் வேண்டாம்! நெடுவாசலில் தண்ணீரைக் கொட்டி போராடிய மக்கள்! (படங்கள்)
 ................................................................
அம்பேத்கரை தரக்குறைவாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகடாமி விஜயலையன்!
 ................................................................
ஓ.பி.எஸ் நிலத்தில் வில்லங்கம் பார்க்க கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!
 ................................................................
ஊக்கத்தொகை கொடுக்காமல் மருத்துவக் குழுவைப் புலம்பவிடும் மாவட்ட நிர்வாகம்!
 ................................................................
பான்பராக், குட்கா மொத்த விற்பனையைத் தடுக்க வேண்டும்: விக்கிரமராஜா மனு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (23:26 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (11:22 IST)



இழந்துவிட்ட உரிமையை பிச்சைக்கேட்டு பெற முடியாது: சீமான்



இழந்துவிட்ட உரிமையை பிச்சைக்கேட்டு பெற முடியாது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே தீருவோம் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

சென்னையில் கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், 

தமிழர்களுடைய தொன்மை விளையாட்டாக, பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு விளையாட்டாக அல்லாமல் அவனுடைய பண்பாடாக உயிரோடும், உணர்வோடும் கலந்து நிற்கிற ஏறு தழுவுதல் தடை செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த ஆண்டும் அதே நிலைதான் தொடருகிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிச்சயம் அனுமதி கிடைக்கும் என்கிறார். அந்த நம்பிக்கை நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அப்படி ஒரு உறுதியை நாங்கள் தரவில்லை என்று சொல்கிறார். இது குழப்பத்தையும், ஏமாற்றத்தையும், தடுமாற்றத்தையும் தருகிறது. பொங்கலுக்கு நாள் நெருங்கிவிட்டது. இதில் எப்படி அனுமதி கிடைக்கும். 

காளைகளை காட்சிப்படுத்தக்கூடிய விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, ஒரு அவசர சட்டத்தை இயற்றி நமக்கு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு வாய்ப்பை பெற்றுத்தந்திருக்கலாம். அதை செய்யாமல் பொங்கல் நெருங்குகிற காலங்களில் பருவ நிலை வியாபாரம் மாதிரி எல்லோரும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு உறுதியாக நடத்தப்படும், அனுமதி கிடைக்கும் என்று பேசி பேசி வெரும் வார்த்தைகளில் இனிப்பை தடவி ஏமாற்றுவது தொடர்கிறது. 

போனமுறை தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்த போகும்போது அரசு எங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துவிட்டது. அதை இந்த முறை செய்யக் கூடாது என்பதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறோம். தடையை மீறி நடத்திய பிறகு எங்களை கைது செய்த சட்டப்படி என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். 

விமர்சனம் வைப்பவர்கள், ஆதிக்க சாதி விளையாட்டு, குறிப்பிட்ட பகுதிகளில் நடக்கிற விளையாட்டு என்கிறார்கள். அவர்களெல்லாம் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். சென்னை கடற்கரையில் ஒரு கட்சியோ, கொடியோ, தலைவரோ இல்லாமல் தன்னெழுச்சியாக இந்த மண்ணின் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கூடி ஜல்லிக்கட்டை நடத்துவற்கான உரிமைக் குரலை எழுப்பியதை பார்த்தோம். ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் இந்த கொதிநிலை இருக்கிறது. அதை புரிந்துகொள்ளாமல் காளைகளை வதைக்கிறோம் என்பது வெட்டித்தனமான பேச்சு. 

உலகத்தில் எத்தனையோ இனங்கள் வாழுகிறது. எந்த இனமும் காளைகளுக்கு, மாடுகளுக்கு பண்டிகை வைத்ததில்லை. தமிழர்களாகிய நாங்கள்தான் மாடுகளுக்கு பண்டிகை வைத்து கொண்டாடுகிறோம். எங்களது ஆதி பாட்டன் சிவனுக்கு காளையை வாகனமாக வைத்து வணங்குகிறோம். சிவனை வணங்குவதற்கு முன்பு நந்தியை காளையை வைத்து வணங்கிவிட்டுத்தான் சிவனையே வணங்குகிறோம். காளைகளை குலதெய்வமாக வணங்குகிற ஒரு கூட்டம், அதனை வதைக்கிறோம் என்று சொல்வது சுத்த பைத்தியக்காரத்தனம். இந்திய ராணுவத்தில் இன்று வரை குதிரைப்படை, ஒட்டகப்படை இருக்கிறது. ராணுவ பேரணியில் குதிரையும், ஒட்டகமும் வருவதை பார்க்கிறோம். அதன் மேல் சின்ன பீரங்கியை வைத்து சுடுவதை பார்க்கிறோம். அது வதை இல்லையா என கேட்டால் அதற்கு பதில் இல்லை. கேரளாவில் யானைப் பந்தயம் நடக்கிறது. குதிரை பந்தயம் நடக்கிறது. ராஜஸ்தானி ஒட்டகப் பந்தயம் நடக்கிறதே அது வதை இல்லையா என கேட்டால் அதற்கு பதில் இல்லை. 24 லட்சம் டன் மாட்டுக்கறியை ஆண்டொன்றுக்கு ஏற்றுமதி செய்வது வதை இல்லையா. மாட்டை கொன்று ஏற்றுமதி செய்யலாம் அது வதை இல்லையா. பல லட்சக்கணக்கான லிட்டர் பால், உலகத்திலேயே இரண்டாது இடத்தில் இருக்கிறது பால் ஏற்றுமதி. மாடுகள் என்ன நீங்க வைங்க பீய்ச்சுவிடுகிறோம் என்கிறதா, கன்றுக்குட்டி கறக்கிறதா, நீங்க அதை பீய்ச்சி பாலை வலுக்கட்டாயைமாக எடுப்பது வதை இல்லையா அதற்கு பதில் இல்லை. 

இந்த தீர்ப்பை சொன்ன நீதியரசர்களுக்கு தமிழர்கள் யார். தமிழர்கள் வாழ்வியல் முறை என்ன. பண்பாடு என்ன. தொன்மம் என்ன. பழக்க வழக்கம் என்ன என்று எதுவுமே தெரியாது. காட்டுமிராண்டி விளையாட்டு, படிப்பறிவு இல்லாதவன் விளையாட்டு என சொல்வது எவ்வளவு பெரிய கடுமையான சொற்கள். சரி நாங்க காட்டுமிராண்டி கூட்டம், காட்டுமிராண்டி கூட்டத்த ஏன் நீங்க வைச்சுக்கிட்டு அழுவுறீங்க எங்கள விட்டுடுங்க நாங்க போறோம். இதுக்கு என்ன பதில் இருக்கு. 

காளைகளுக்கு ஒடுகிற அளவுக்கு காலில் குழம்பு இல்லை. குதிரைக்கு இயற்கையிலேயே ஓடுவதற்கான வடிவமைப்பு குழம்பில் இருக்கு என்கிறார்கள். கேரளாவில் யானை பந்தயம் ஓடுதே. காளை பெரிய உருவம் என்கிறீர்கள். யானை சின்ன உருவமா. யானையினுடைய கால்கள் ஓடுவதற்கு ஏற்க குழம்புகள் அமைக்கப்பட்டுள்ளதா. அதற்கு யாரும் பதில் சொல்லவில்லையே. 

மாட்டை அணைப்பது வேற, தழுவுதல் வேற. ஜல்லிக்கட்டு என்பது பின்னாளில் மாறி வந்த சொல். என் வீட்டு காளைக்கு பீட்டாகாரனுக்கு என்ன அக்கறை. மாட்டோட கூடு பிறந்து, வளர்ந்து குடும்பத்துல அண்ணன், தம்பிக்கு பெயர் வைப்பது போல மாட்டுக்கு பெயர் வைச்சு வளர்த்து வரோம். என் வீட்டு மாட்டுக்கு ஊரான் நாட்டுக்காரனுக்கு என்ன அக்கறை. அனுமதியை பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைச்சு கெஞ்சியாச்சு. அம்பேத்கர் சொன்னது போல, இழந்துவிட்ட உரிமையை பிச்சைக்கேட்டு பெற முடியாது. போராடித்தான் பெறணும். அந்த போராட்டத்தின் ஒரு வடிவமாகத்தான் ஜல்லிக்கட்டை தடையை மீறி நடத்துவதை நாங்கள் செய்யப்போகிறோம். அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்னவென்றால, தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்திய பிறகு கை செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையா கைது செய்யக் கூடாது. போராட்டத்தின் இன்னொரு வடிவத்தை காட்ட நினைக்கிறோம். இவ்வாறு கூறினார்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Gunaa Country : United States Date :1/12/2017 5:10:27 AM
இது தமிழன்!
Name : arul Date :1/12/2017 12:18:06 AM
வாழ்க தமிழ்த் தாய் மண்ணே,