Add1
logo
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி || டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு || தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்! || இன்றைய TOP -10 நிகழ்வுகள்! || கிம் ஜாங் உன் ஒரு பைத்தியக்காரர்! - ட்விட்டரில் சீரும் ட்ரம்ப் || ‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை! || ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை! || குஜராத்தில் பசுவுடன் செல்ஃபி - இது நவராத்திரி ஸ்பெசல்! || காஷ்மீர் பிரச்சனையில் தீர்வுகாண இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா சொல்லும் யோசனை! || தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி || தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன் || பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம் ||
தமிழகம்
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி
 ................................................................
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு
 ................................................................
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்!
 ................................................................
‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை!
 ................................................................
ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை!
 ................................................................
தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
 ................................................................
தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன்
 ................................................................
பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம்
 ................................................................
கோவை அருகே இருவர் வெட்டி கொலை
 ................................................................
சுற்றித் திரியும் காட்டு யானைகள்: வீட்டிலேயே முடங்கியுள்ள கிராமத்தினர்
 ................................................................
கூ.ச. தலைவர் - செயலாளர் மோதல்: பொதுமக்கள் கடும் அவதி
 ................................................................
இந்துத்துவா அமைப்புகள் கொண்டுவரத் துடிக்கும் யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்கக் கூடாது! - எஸ்.டி.பி.ஐ.
 ................................................................
திருப்பூர் அருகே கார் விபத்து: கூட்டுறவு சங்க தலைவர் உட்பட 5 பேர் பலி!
 ................................................................
ரோகிங்கியா அகதிகளை வெளியேற்றும் பாஜக அரசைக் கண்டித்து தவாக ஆர்ப்பாட்டம்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க தமிழக அரசு முடிவு?
 ................................................................
ஆண்டிமடம் அருகே பைனான்சியர் கழுத்து அறுத்து கொலை
 ................................................................
உளுந்தூர்பேட்டை பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
 ................................................................
ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது
 ................................................................
தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு
 ................................................................
மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
 ................................................................
ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி
 ................................................................
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
 ................................................................
சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (18:19 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (0:17 IST)


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

”இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலக்குழுக் கூட்டம் இன்று (11.1.2017) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத், கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், உ. வாசுகி, பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1

ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும் என்றும், அப்படி இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் பொருட்கள் இல்லை என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு பகுதி மக்களுக்கு இதுவரை ஆதார் அடையாள அட்டை வழங்கப்படவில்i. இந்த நிலையில் ஆதார் எண்ணை குடும்ப அட்டையில் இணைக்காத லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பொது விநியோகப்பொருட்கள் வழங்க மறுக்கபட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் அட்டையை ஒரு நிபந்தனையாக விதிக்கக் கூடாது என்றும், ஆதார் அட்டை இல்லாத நபர்களுக்கு சமூக நலத் திட்டங்கள் மறுக்கப்பட கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மாறாக தமிழக அரசு இந்த நிலைபாட்டை எடுத்துள்ளது.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டிப்பதோடு உடனடியாக ஆதார் எண் பதிக்கபட வேண்டுமென்ற நிபந்தனையைக் கைவிட்டு தமிழக அரசு குடும்ப அட்டை உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி உள்ளிட்ட பொது விநியோகப் பொருட்களை வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் சார்பில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்தது. அதில் தமிழகத்தில் முதல் முறையாக நகர குடியிருப்பு இருந்ததற்கான தடயங்கள் மற்றும் பொருட்கள் கிடைத்துள்ளன. அதனுடைய காலம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த அகழாய்வு முழுமையடையும் முன்னரே இந்திய தொல்பொருள் துறை அகழாய்வை தொடராமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் தொன்மையான வரலாறு மற்றும் பண்பாடு குறித்த மதிப்புமிக்க விபரங்கள் முழுமையாக வெளிவராமல் தடுக்கப்பட்டுள்ளது. பல ஆய்வாளர்களும், வரலாற்றியலாளர்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும் மத்திய அரசு இந்த முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. மத்திய அரசு தனது நிலைபாட்டை மாற்றி தமிழக தொன்மையான வரலாற்றையும் பண்பாட்டையும் வெளிக் கொணரும் வகையில் கீழடி அகழ்வாராய்ச்சியைத் தொடர உத்தரவிட வேண்டுமென்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3

ஜல்லிக்கட்டு போட்டி ஏறு தழுவுதல் என்ற பெயரில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் நடந்து வந்துள்ளதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக கடந்த ஆண்டு பொங்கலின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. கடந்த ஆண்டு மோடி அரசு கொண்டு வந்த அரசாணை உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கியிருந்தால் இந்த ஆண்டு பொங்கலின் போது ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவை நடக்க வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால், மோடி அரசு அதை செய்யத் தவறி விட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன. இந்நிலையில், அவசரச்சட்டம் கொண்டு வந்து இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் பென்சனை உடனே வழங்குக!

அரசுப்போக்குவரத்து கழக நிர்வாகங்கள் தொழிலாளர்களின் பணத்தை தங்கள் செலவிற்குப் பயன்படுத்துகின்றன. சுமார் 5000 கோடி ரூபாய் அளவிற்கு தொழிலாளர்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளன. இதை தற்காலிகக் கையாடல் என்று கூறினால் மிகையல்ல.

தொழிலாளர்களிடமிருந்து மாதாமாதம் பிடித்தம் செய்யப்படுகிற வைப்புநிதி தொகை, கடன் சொசைட்டிக்கான தொகை, ஆயுள் காப்பீட்டு தொகை போன்றவற்றை உரிய நிறுவனங்களுக்கு செலுத்துவதில்லை. ஓய்வு பெற்ற 65000 தொழிலாளர்களின் பென்சன் தொகை 2017 ஜனவரி மாதம் வழங்கப்படவில்லை.

ஓய்வு பெறுகிற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வைப்புநிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை போன்ற முழுப்பயன்கள் இரண்டாண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

ஓய்வு பெற்றவர்கள் தாங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து சேமித்த பணம் உடனே கிடைக்காததால் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். அரசும், போக்குவரத்துக்கழங்களும் இப்படி தீய எண்ணம் கொண்ட முதலாளிகளைப் போல நடந்து கொள்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

பாக்கிகளை உரியவர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்றும், போக்குவரத்து ஊழியர் பென்சனை அரசே ஏற்று நடத்தவும், மாதாமாதம் தவறாமல் வழங்கவும் வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலயுறுத்துகிறது.

தீர்மானம் 5

சென்னையில் போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து மதுரையில் கண்டன இயக்கம் நடத்திய மாதர், மாணவர், வாலிபர்கள் மீதும் காவல்துறை கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளதோடு பொய் வழக்கும் போட்டுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு தாக்குதல் தொடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், பொய் வழக்குகளை வாபஸ் பெறுமாறும் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைகயை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டிசம்பர் 31 அன்று இயக்கம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களை காவல் நிலைய பாதுகாப்பில் வைத்து சித்ரவதை செய்தும், அவர்களை தேடிச் சென்று நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரியவர்கள் மீது தடியடி நடத்தி காயம் ஏற்படுத்தியதையும், காலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களிடம் பாலியல் சித்ரவதையில் ஈடுபட்ட பள்ளிக்கரணை காவல்துறை ஆணையாளர் நடராஜ், உதவி ஆய்வாளர் ரவி மற்றும் பள்ளிக்கரணை காவல்துறையினரையும், இதற்கு உறுதுணையாக இருந்த உதவி ஆணையாளர் கோவிந்தராஜ் ஆகியோரை உடனடியாக இடைநீக்கம் செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இம்மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :