Add1
logo
இலங்கையில் கனமழைக்கு 201 பலி - நிவாரண உதவி வழங்கிய சீனா || இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு அனுமதி மறுப்பு - அமைச்சர் கோயல் || வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - ஜப்பான் பிரதமர் கண்டனம் || மோரா புயல் இன்று கரை கடக்கிறது || பராமரிப்பு பணியால் மின்உற்பத்தி நிறுத்தம் || ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி 2 மாணவிகள் பலி || சென்னையில் மின்வெட்டு இரவில் மக்கள் தவிப்பு || ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் || விசாரணைக்கு சென்ற நாம்தமிழர் கட்சியினர் கைது || அமைதி வழியில் போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதா? ஆம்ஆத்மி கட்சி வசீகரன் கண்டனம்! || ஸ்ரீநித்ய கல்யாண வேங்கடேஷ்வர பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா || சங்கமித்ரா படத்திலிருந்து நீக்கப்பட்டது ஏன்? ஸ்ருதிஹாசன் விளக்கம் ‘ || சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம் ||
முக்கிய செய்திகள்
முதல்வர் அளித்த உறுதி! - கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!
 ................................................................
மத்திய அரசின் கைப்பாவையாக அதிமுக செயல்படுகிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு
 ................................................................
திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது: சீமான், வேல்முருகன் கண்டனம்
 ................................................................
’’குதிரை கீழே தள்ளியது மட்டும் அல்லாமல் குழியும் பறித்ததாம்’’ - வைகோ கண்டனம்
 ................................................................
தமிழினப்படுகொலையை நினைவுகூருவது தவறா? எடப்பாடி அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம்!
 ................................................................
விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்: சொல்கிறார் தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
அரசு வக்கீலாக நீடிக்க வேண்டுமென்றால் ரூ.25 லஞ்சம் கேட்கிறார் சேதுராமன்: வழக்கறிஞர் பரபரப்பு புகார்
 ................................................................
மத்திய அரசு மார்பில் குத்தினால், தமிழக அரசு முதுகில் குத்தியிருக்கிறது: ராமதாஸ் கடும் கண்டனம்
 ................................................................
மே 17 இயக்கத்தை சார்ந்த திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
 ................................................................
கலைஞர் அரசியலில் ஈடுபடாமல் இருப்பதால் பலருக்கு துணிச்சல் ஏற்பட்டுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 ................................................................
மாட்டிறைச்சி தடை; மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து - மே.31 திமுக ஆர்ப்பாட்டம்!
 ................................................................
லட்சக்கணக்கான மக்களின் சரண கோஷம் முழக்கத்தோடு நடந்த திருவாரூர் ஆழித்தேரோட்டம் (வீடியோ)
 ................................................................
ஊழலை விரிவாக்கத் துடிக்கிறதா பினாமி அரசு? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
 ................................................................
மன்னிக்க முடியாத துரோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்
 ................................................................
கலைஞர் வைரவிழா அரசியலில் எந்த திருப்புமுனையும் ஏற்படுத்த போவதில்லை: தமிழிசை செளந்தர்ராஜன்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (15:53 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (15:54 IST)


கட்சிக்காரர்களுக்கு ஒரு நீதி, விவசாயிகளுக்கு ஒரு நீதியா? : 
ஓ.பி.எஸ்.க்கு திருநாவுக்கரசர் கேள்வி

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் அறிக்கை:

’’காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கூறியும் மத்திய பா.ஜ.க. அரசு தட்டிக் கழித்தது. இதனால் தமிழகத்திற்கு சேர வேண்டிய காவிரி நீரை பெற முடியாத நிலையில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியில் சிக்கியிருப்பதாக கூறி தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். தமிழகம் தற்போது சந்தித்திருக்கிற வரலாறு காணாத வறட்சியைப் போல கடந்த 150 ஆண்டுகளில் கண்டதில்லை. இத்தகைய அபாயகரமான வறட்சி நிலையை தமிழக அரசு உணர்ந்து செயல்பட்டதாகத் தெரியவில்லை. போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் கருகிய பயிரை பார்த்தவுடன் தற்கொலையாலும், அதிர்ச்சியாலும் இறந்தவர்கள்; 139 பேர் என்று அதிகாரப்பூர்வமான தகவல் கூறுகிறது. ஆனால் வறட்சிப் பகுதிகளை பார்வையிடச் சென்ற தமிழக அமைச்சர்கள் ஒருவர் கூட தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறாத கல் நெஞ்சம் கொண்டவர்களாக இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை பார்க்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் கொச்சைப்படுத்தாமல், இழிவுபடுத்தாமல் இருந்திருக்கலாம். 

தற்போது 17 விவசாயிகளின் தற்கொலையை மட்டுமே தமிழக அரசு ஏற்றுக் கொண்டு தலா ரூபாய் 3 லட்சம் வழங்கியுள்ளது. ‘விவசாயிகளின் இந்த தற்கொலைகள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்பட்டிருந்தாலும்” என்று முதலமைச்சர் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததை தாங்கிக் கொள்ளாமல் தற்கொலை, அதிர்ச்சியினால் இறந்த 470 அ.தி.மு.க. தொண்டர்களின் குடும்பத்திற்கு எந்த ஆய்வும் செய்யாமல் தலா ரூ.3 லட்;சம் என மொத்தம் ரூபாய் 14 கோடியே 10 லட்சம் வழங்கிய அ.தி.மு.க., தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தயங்குவது ஏன் ? விவசாயிகளுக்கு மட்டும் ஆய்வு செய்வதாக கூறுவது ஏன் ? இதைவிட அப்பட்டமான பாரபட்சம் வேறு ஏதாவது இருக்க முடியுமா ? கட்சிக்காரர்களுக்கு ஒரு நீதி, விவசாயிகளுக்கு ஒரு நீதியா ?

ஆனால் விவசாயிகளின் தற்கொலையை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதே அவமானம் என்று அ.தி.மு.க. அரசு நினைப்பதுதான் கொடுமையிலும் கொடுமையாகும். விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையை கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டு, இதன்மூலம் மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெற்று, நிவாரணங்களை வழங்கி வருகின்றன. ஆனால் தமிழக அரசு இதைச் செய்ய தயாராக இல்லை. இதனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியுதவி குறைக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிவாரண உதவிகளில் நிலவரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஒரு ஏக்கர் புஞ்சைக்கு ரூபாய் 5, நஞ்சைக்கு ரூ.12 என்று காலம் காலமாக குறைந்த நிலவரி இருக்கிற நிலையில் இந்த அறிவிப்பு சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த பலனையும் தரப்போவதில்லை. 

அதேபோல, கூட்டுறவு கடன்களை மத்திய காலக் கடனாக  மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.  3 ஆயிரத்து 28 கோடி ரூபாய் கூட்டுறவு கடன்களை மாற்றிமைப்பதால் விவசாயிகள் கட்ட வேண்டிய வட்டி உயர்ந்து அசலோடு சேர்த்து கூடுதலாக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் கூட்டுறவு கடன்கள் அனைத்தையும் ரத்து செய்திருக்க வேண்டும். 

ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு இழப்பீடாக ரூபாய் 5,465 அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் சாகுபடி செலவு ரூபாய் 25 ஆயிரமாக இருக்கும் போது இந்த அறிவிப்பு என்ன பலனைத் தரும் என்று ஓ. பன்னீர்செல்வம் கருதுகிறார் ? இதே இழப்புக்கு விவசாய காப்பீட்டு நிறுவனம் ரூபாய் 21 ஆயிரத்து 500 தர வேண்டும் என்று கூறுகிற முதலமைச்சர், தமிழக அரசு வழங்குகிற இழப்பீட்டை இவ்வளவு குறைத்தது ஏன் ? கடந்த 2013-14 இல் தற்போதுள்ள வறட்சியைவிட குறைவான பாதிப்பு ஏற்பட்ட போது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு ஏக்கருக்கு ரூபாய் 15 ஆயிரம் வழங்கியதை இன்றைய முதலமைச்சர் வழங்க மறுப்பது ஏன் ? இவரது நிவாரண அறிவிப்புகள் யானைப் பசிக்கு சோளப் பொறி போடுவதாகவே உள்ளது. விவசாயத்தின் அடிப்படை உண்மைகளை தெரியாதவராக தமிழக முதலமைச்சர் இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. 

மேலும் பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து மகசூல் இழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். மத்திய அரசு அறிவித்துள்ள திருத்தப்பட்ட பிரதமரின் விவசாய காப்பீட்டுத் திட்டம் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கத்தான் பயன்பட்டு வருகிறது என்பதை அனைவரும் அறிவார்கள். தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ. என்கிற தனியார் காப்பீட்டு நிறுவனம் தான் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பை ஏற்றிருக்கிறது. கடந்த 2015-16 இல் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டிய ரூபாய் 300 கோடி செலுத்தாத நிலையில் 2016-17 இல் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் காலதாமதமின்றி, இழுத்தடிக்காமல் இழப்பீடு  தர முன்வருமா ? பல்வேறு நுணுக்கமான காரணங்களை காட்டி விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகை கிடைக்குமா? என்கிற சந்தேகம் இன்றைக்கு எழுந்துள்ளது. இதை தனியார் துறைக்கு விடாமல் தமிழக அரசே இழப்பீட்டை வழங்குகிற பொறுப்பை ஏற்க வேண்டும். 

கடந்த 2015 ஆம் ஆண்டில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது கேட்டது ‘ரூபாய் 25 ஆயிரத்து 912 கோடி”. ஆனால் மத்திய அரசு வழங்கியது ‘ரூபாய் 1940 கோடி”. அதேபோல, வார்தா புயலில் இழப்பு ரூபாய் 10 ஆயிரம் கோடி எனக்கூறி முதல் தவணையாக ரூபாய் ஆயிரம் கோடி கேட்டு இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு சல்லிக்காசு கூட தரவில்லை. இந்நிலையில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்ததோடு, மத்திய அரசின் தேசிய பேரிடர் நிதியிலிருந்து கணிசமான நிதியை பெறுவதற்கு தமிழக அரசு உரிமைக்குரல் எழுப்பி போராட வேண்டும். அப்போதுதான் மற்ற மாநிலங்களுக்கு கிடைப்பதைப் போல நிவாரண நிதியை தமிழக அரசு பெற முடியும்.’’




தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :