Add1
logo
இரத்ததான முகாமை தொடங்கி வைத்த தீபாவின் கணவர் (படங்கள்) || அம்மா திட்டங்களின் பெயர்களை அரசுத் திட்டங்கள் என்று மாற்ற வேண்டும்: ராமதாஸ் || நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்காதே! மாணவர்கள் போராட்டம் || சசிகலா, இளவரசிக்கு சில சலுகைகள்! || அதிமுக எம்எல்ஏக்களுக்கு தொடரும் எதிர்ப்புகள் || கார்த்தி சிதம்பரம் மீதான புகார்களை சிபிஐ, அமலாக்கத்துறை முறையாக விசாரிக்கவில்லை: சு.சாமி || உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல்: இதுவரை ரூ.110 கோடி பறிமுதல் || ரூபாய் 2000 நோட்டை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: பாபா ராம்தேவ் || விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவர உள்துறைக்கு மும்பை சிறப்பு கோர்ட் அறிவுறுத்தல் || பாவனா சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது: குற்றவாளிக்கு உடனடி தண்டனை கிடைக்க சட்டம்தேவை: வெங்கையா நாயுடு || ஒட்டுமொத்த பி.எஸ்.பி.யும் சகோதரியின் சொத்தாகிவிட்டது: மாயாவதி மீது மோடி தாக்கு || சிங்கள ராணுவத்தினரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் || தமிழ்ப் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய இலங்கை ராணுவத்தினரை கைது செய்ய கோரிக்கை ||
முக்கிய செய்திகள்
அம்மா திட்டங்களின் பெயர்களை அரசுத் திட்டங்கள் என்று மாற்ற வேண்டும்: ராமதாஸ்
......................................
சசிகலா, இளவரசிக்கு சில சலுகைகள்!
......................................
அதிமுக எம்எல்ஏக்களுக்கு தொடரும் எதிர்ப்புகள்
......................................
ஜனாதிபதியை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
......................................
சிங்கள ராணுவத்தினர் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள்: திருமாவளவன்
......................................
தொகுதிக்குள் தில்லாக வலம் வந்த சாத்தூர் எம்.எல்.ஏ.! -கூவத்தூர் கும்மாளத்தை எதிர்த்தவர்கள் கப்சிப்!
......................................
சிறுமி ரித்திகா கொலை - தமிழக காவல்துறைக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
......................................
7 தமிழர் விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும் அழுத்தம் தர வேண்டும்! - ராமதாஸ்
......................................
500 மதுக்கடைகள் மூடப்படும் என்பது ஏமாற்று வேலை: முழு மதுவிலக்கே தீர்வு!- அன்புமணி
......................................
ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சியில் மோடி கலந்துகொள்ள கூடாது - மார்ச்சிஸ்ட் லெனினிஸ்ட் கண்டனம்
......................................
முதல்வராக பொறுப்பேற்ற பின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் பழனிசாமி
......................................
மே 15க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
......................................
சட்டபேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி ஸ்டாலின் வழக்கு: நாளை விசாரணை
......................................
எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச்செயலாளர் பதவியை ஏன் தரக்கூடாது?
......................................
சர்ஜிக்கல் ஸ்டிரைக் முடிவு எடுக்கப்பட்டது ஏன்? ராஜ்நாத் சிங் விளக்கம்
......................................
பாஜக அரசு அமைந்தால் உடனடியாக விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி: நரேந்திர மோடி பேச்சு
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (15:36 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (15:53 IST)


ஜெ. மறுத்ததை ஓ.பி.எஸ். ஏற்றுக்கொண்டிருக்கிறார்;
என்ன விவரம் என்று எங்களுக்கு புரியவில்லை: ஸ் டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (11-01-2017) திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலினை வேலூர் மாவட்ட கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த சந்திப்புக்கு பின், அவர் செய்தியாளர்களிடம் பேசிய விவரம் பின்வருமாறு
 
கேள்வி: ஜல்லிக்கட்டு பிரச்சனையில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதுபற்றி?

அதாவது, இந்த துறை சம்பந்தப்பட்டிருக்ககூடிய மத்திய அமைச்சரே, நேற்று என்ன சொல்லியிருக்கிறார் என்றால், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இருக்கிறது. அதனால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லியிருப்பது, மத்திய அரசின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், தமிழகத்தை சேர்ந்த சில மத்திய அமைச்சர்கள், தமிழகத்திற்கு வருகிறபோதெல்லாம், நாங்கள் முயற்சித்து கொண்டிருக்கிறோம், இந்த ஆண்டு எப்படியும் நடத்தியே தீருவோம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், இப்போது மத்திய அமைச்சர் அவர்கள் அதற்கு சாத்தியமல்ல என்று கூறியிருப்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது. நான் கேட்கிற கேள்வி, இதே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம், அதுவும் நான்கு நாட்களில் அமைக்க வேண்டுமென்று உத்தரவிட்டபோது அப்பொழுது அதை ஏற்றுக்கொண்டு, ஆனால் அதற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவு போடுவதற்கு உரிமை கிடையாது என்று மத்திய அரசு அந்த விஷயத்தில் சொல்லுகிற போது, ஏன் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அந்த நடைமுறையை கடைபிடிக்கவில்லை என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. ஆகவே, மத்திய அரசை பொறுத்தவரையில் ஜல்லிக்கட்டு விஷயத்தில் இரட்டை வேடம் போடக்கூடிய நிலைதான் இருந்துகொண்டு இருக்கிறது.
 
கேள்வி: விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு தொடர்ந்து சரியான முறையில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மத்திய அரசிடம் சரியான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

 தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றுவரையில் இருந்து கொண்டிருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். உள்ளபடியே, இப்பொழுதாவது ஏதோ விவசாயிகள் மீது அக்கறை கொண்டிருப்பது போல ஒரு அறிக்கை வந்திருப்பது உள்ளபடியே வரவேற்கக்கூடிய ஒன்று. ஆனால், அதே நேரத்தில் 17 பேர்தான் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள், எனவே அவர்களுக்கு நிதியுதவி என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். உள்ளபடியே 150-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இவைகளெல்லாம், பத்திரிகைகளில், ஊடகங்களில் செய்திகளாக வந்திருக்கின்றன. 

அந்த தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பத்திரிகைகளுக்கு, ஊடகங்களுக்கு தந்திருக்கக்கூடிய பேட்டிகள் மூலமாக நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, உடனடியாக தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடிய, அதிர்ச்சிக்கு ஆளாகி இறந்துபோயிருக்கக்கூடிய அனைவருக்கும் அந்த உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதுதான் தி.மு.கழகத்தின் நிலைப்பாடு.

அதுமட்டுமல்ல ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கிட வேண்டுமென்று ஏற்கனவே தி.மு.க வின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை கூட்டி அதிலே எடுத்த அந்த முடிவின் அடிப்படையிலே 30 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டுமென்று நாங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால், 5465 ரூபாய் தான் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது உள்ளபடியே வேதனைக்குரியது. எனவே இதை உயர்த்தி தர வேண்டும். அதுமட்டுமல்ல, இறந்த ஒருவரின் குடும்பத்தில் இருக்கக்கூடிய யாருக்காவது ஒருவருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கிட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன். ஏற்கனவே நாங்கள் முதலமைச்சரை சந்தித்து பலமுறை எங்களுடைய தீர்மானங்களை தந்திருக்கின்றோம். 

நானும் வலியுறுத்தி சொல்லியிருக்கின்றேன். உடனடியாக இது சம்பந்தமாக சட்டமன்றத்தை கூட்டி இதுபற்றி விவாதிக்க வேண்டும். எனவே உடனடியாக சட்டமன்றத்தை கூட்டுகின்ற முயற்சியிலே மாண்புமிகு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஈடுபட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன். அதுபோல உதய் மின் திட்டத்திற்கு கூட மின்துறை அமைச்சர் டெல்லிக்குச் சென்று  சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. உதய் திட்டத்தைப் பொறுத்த வரையில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அந்த திட்டத்தை திட்டவட்டமாக ஏற்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தார். ஆனால் இப்பொழுது அவர்கள் மறைந்த பிறகு முதலமைச்சராக ஓ.பி.எஸ் பதவியேற்ற பிறகு ஏற்றுக் கொண்டிருக்கின்றார். என்ன விவரம் என்று எங்களுக்கு புரியவில்லை. மக்களிடத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளது. 

எந்த அடிப்படையில் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார் என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. 2011 க்குப் பிறகு இரண்டுமுறை மொத்தம் 57 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது இந்த உதய் மின் திட்டத்தின் மூலமாக மேலும் உயர்த்தப்படுமா என்ற ஒரு நிலை இருக்கின்றது. அதுமட்டுமல்ல விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆக இந்த உதய் மின் திட்டம் மூலமாக அது நிறுத்தப்படுமா என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது. மின்சார வாரியம் அரசின் கட்டுப்பாட்டில் ஒரு தனி வாரியமாக செயல்பட்டு வருகிறது. அந்த மின்சார வாரியம் கலைக்கப்பட்டு ஒரு தனி வாரியமாக மாற்றப்படுமா என்ற ஒரு கேள்வியும் இருக்கிறது.

அதுமட்டுமல்ல நேற்றைக்கு மின் துறை அமைச்சர் அவர்கள் இந்த உதய் திட்டத்தின் மூலமாக 11,000 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் ஏற்படுகிறது என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மகிழ்ச்சி. ஆகவே மின் துறையைப் பொறுத்த வரையில் 11,000 கோடி ரூபாய் மிச்சம் ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் மின்சாரக் கட்டணத்தை உடனடியாக குறைக்கும் முயற்சியிலே இந்த அரசு ஈடுபடுமா என்கின்ற கேள்வியையும் நான் கேட்க விரும்புகிறேன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : pathman Country : United States Date :1/12/2017 5:15:23 AM
சனம் உணவின்றி சாகும் போது ஜல்லி கட்டு என்ன வேண்டி கிடக்கு.