Add1
logo
மெரினா இரவில் கொட்டும் பனியில் தொடர்ந்து போராடும் மாணவர்கள் (படங்கள்) || ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருவாரூரில் திமுகவினர் ரயில் மறியல் || தமிழ்நாடு கெட்டது என்னாலே.. : காங்கிரஸ் திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு || ஜல்லிகட்டு 4 வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. பீட்டா உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்த (படங்கள்) || நாகா்கோவிலில் மாணவா்கள் போராட்டம் || ஜல்லிக்கட்டுக்கு எதிராக முதலில் வழக்கு தொடர்ந்தவர் தமிழர் - பீட்டா || சாகித்ய அகாடமி விருது பெற்ற பொன்னீலனுக்கு-வைகோ பாராட்டு || மதுரையில் பஸ் இல்லாமல் அவதிபடும் பொது மக்கள் (படங்கள்) || புதுச்சேரியில் கடையடைப்பு ரயில், பஸ் மறியல் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. || கோவையில் சேவல் சண்டை, ரேக்ளா வண்டி ஊர்வலம் || சிவன் சிலை மற்றும் புலவர் நக்கீரர் சிலைகள் திறப்பு ஓராண்டு நிறைவு. கேக் வெட்டி கொண்டாட்டம் (படங்கள்) || தற்கொலைக்கு முயற்சித்த மாணவன் மருத்துவமனையில் அனுமதி || கோவை அருகே சேவல் சண்டை, நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த கிராம மக்கள் ||
முக்கிய செய்திகள்
தமிழ்நாடு கெட்டது என்னாலே.. : காங்கிரஸ் திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு
......................................
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பொறிபறக்க வைத்த பயர்சாட்
......................................
ஜல்லிக்கட்டு நடத்த உரிமை உண்டு: சட்டம் என்ன சொல்லுகிறது? கி.வீரமணி விளக்கம்
......................................
வேடிக்கைபார்க்க முடியாது: விருதைத் திருப்பித்தந்த எழுத்தாளர் லக்சுமி சரவணகுமார் சிறப்புப் பேட்டி
......................................
ஜல்லிக்கட்டு: தீர்ப்பை தள்ளி வைக்க மத்திய அரசு கோரிக்கை: உச்சநீதிமன்றம் ஏற்பு
......................................
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும்: டெல்லியில் ஓ.பி.எஸ். பேட்டி
......................................
சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
......................................
ஜல்லிக்கட்டு - தென் மாவட்டங்களில் தீவிரமடையும் போராட்டம்
......................................
4வது நாளாக மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: காலை உணவு தயாரிக்கும் பணி (படங்கள்)
......................................
மெரினா: வானத்து நட்சத்திரங்களே பூமிக்கு இறங்கி வந்து போராட்டம் நடத்தியது போன்ற காட்சி
......................................
4வது நாளாக விடிய விடிய கொட்டும் பனியில் மெரினாவில் நீடிக்கும் போராட்டம் (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (11:1 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (11:54 IST)


மரணதண்டனை கூடாதுதான்; சாதி ஆணவ கொலைகளை
 கட்டுபடுத்த இந்த தீர்ப்பு எச்சரிக்கையாக இருக்கும்:திருமாவளவன்

ஆணவக் கொலை வழக்கில் இன்று இருவருக்கு மரண தண்டனை வழங்கியிருப்பது பற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,   “திருநெல்வேலி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த ஆணவ கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. மரண தண்டனைக்கு எதிரான இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. மரண தண்டனை வழங்க கூடாது,இந்திய அரசு அந்த கொள்கையை ஏற்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,போராடி வருகிறோம்.

 ஆனால் இந்த சாதிய ஆணவ கொலை தொடர்பான வழக்கில் செசன்ஸ் நீதிபதி அப்துல் காதர் அவர்கள் அதனை தொடர்புடைய குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருப்பது இங்கு காலம்காலமாக தொடர்கின்ற சாதிய ஆணவ கொலைகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், அதற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும் என்கிற அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக நான் பார்க்கிறேன். 

அதிலும் குறிப்பாக எட்டே மாதங்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பெரும்பாலான வழக்குகள் ஆண்டு கணக்கிலே கிடப்பிலே போடப்பட்டு விசாரணைகள் தள்ளி வைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த வழக்கில் எட்டு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு அளிக்கபட்டிருப்பது ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக நான் பார்க்கிறேன். 

ஆணவ கொலையில் ஈடுபடுவோர்களுக்கு இப்படிப்பட்ட மரணதண்டனை தான் வழங்கப்படும் என்று எச்சரிப்பதுபோல் மாண்புமிகு நீதியரசர் அப்துல் காதர் அவர்கள் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்பதும் ஒரு வகையிலே ஆறுதலை அளிக்கிறது.

 மரணதண்டனையே கூடாது என்றாலும் கூட சாதி ஆணவ கொலைகளை கட்டுபடுத்துவதற்கு இந்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்கிற அடிப்படையிலே நீதி அரசர் வழங்கி இருக்கிற இந்த தீர்ப்பு உள்ளபடியே வரவேற்க கூடிய ஒன்று இந்திய அளவில் சாதிய ஆணவ கொலைகளை தடுக்க வேண்டும் அதற்கு இத்தகைய நீதிமன்ற தீர்ப்புகள் வழிகாட்டும் தீர்ப்புகளாக அமையும் அமையட்டும் என்று நான் கருதுகிறேன். சுட்டி காட்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : siva Country : Australia Date :1/11/2017 7:51:25 PM
குற்றத்தின் தீவிரத்தை கருத்தில்கொண்டு சமுதாயநலன் காக்கப்படவேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தில் , சாதி பேதம் காண்பிக்காமல், மரணதண்டனைக்கு தகுதியுள்ள இனங்களில் மாற்றுக்கருத்து இல்லாமல் மரணதண்டனை வழங்கவேண்டும். அரசியல் பின்புலம் உள்ளவர்கள், செல்வம்படைத்தவர்கள் , அதிகாரம் கொண்டவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் , அவைகளுக்கு பயம்கொள்ளாமல் , அவைகளுக்கு விலைபோகாமல், வளைந்துகொடுக்காமல் உரிய தண்டனை வழங்குவது அனைத்து குற்றங்களையுமே மேற்கொண்டு நடைபெறாமல் தடுத்துவிடும்.
Name : hariharan Date :1/11/2017 1:06:16 PM
மரணதண்டனை மிகவும் முக்கியமானது. திட்டமிட்டு பணக்கொள்ளைகளுக்காக கொலை செய்வோருக்கும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சதி செய்வோருக்கும் நிச்சயம் வழங்கப்படவேண்டும். வரி செலுத்தும் நல்லோர் பணம் கொலைகாரர்களை வாழ வைக்க பயன்படக்கூடாது.